வேட்புமனுக் கோரும் தினம் இன்று அறிவிப்பு

நீதிமன்ற உத்தரவு காரணமாக தேர்தலை நடத்துவதற்கு தினம் அறிவிக்க முடியாதிருந்த 208 உள்ளூராட்சி சபைகளின் வேட்புமனுக்களை கோரும் தினம் இன்று அறிவிக்கப்படவுள்ளது.

மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியினால் குறித்த தினங்கள் நாளை முற்பகல் உள்ளுராட்சி மன்றங்களுக்கு அறிவிக்கப்படும் எனவும், இதற்கு அமைவாக, டிசம்பர் 18ஆம் திகதி தொடக்கம் வரையான காலப்பகுதியில் வேட்புமனுக்கள் கோரப்படும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

குறித்த 208 உள்ளூட்சி மன்றங்களுக்காகவும் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று தொடக்கம் முன்னெடுக்கப்படும் எனவும், இதுவரை தேர்தல் தினம் அறிவிக்கப்பட்டுள்ள 93 உள்ளூராட்சி மன்றங்களின் வேட்பு மனு கோரும் பணிகள் எதிர்வரும் 11ஆம் திகதி ஆரம்பித்து 14ஆம் திகதி நண்பகல் வரை இடம்பெறும் எனவும், வேட்புமனுக்கள் கோரப்பட்ட பின்னர் வாக்களிப்பு தினம் தொடர்பாக தேர்தல்கள் ஆணையகம் அறிவிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு