இ.போ.ச பஸ் மீது தாக்குதல் – ஐவர் கைது

யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றின் மீது, கல் வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக, கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பஸ் கனகராயன்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போதே, இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தத் தாக்குதலால் பஸ்ஸின் கண்ணாடிகள் சில சேதமடைந்துள்ளதுடன், பயணிகளுக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட ஐவரையும் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு