இலங்கைக்கு இன்று வரவுள்ள உரக் கப்பல்!

முக்கிய செய்திகள் 2

நெற்செய்கைக்கு அத்தியாவசிய உரமாக விளங்கும் 41,876 மெட்ரிக் தொன் மியூரேட் ஒப் பொட்டாஷ் ஏற்றிச் செல்லும் கப்பல் இன்று இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளது.

நாளை பிற்பகல் உரங்களை இறக்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இதற்கிடையில், நாட்டின் எட்டு மாவட்டங்களில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் விவசாயக் குடும்பங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பினால் வழங்கப்படவுள்ள 9,000 மெற்றிக் தொன் உரங்களை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை காலை (02) அந்த உரம் இறக்கும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது.