கிடப்பிலுள்ள வழக்குகளுக்கு விரைவில் தீர்ப்பு – இளஞ்செழியன் அதிரடி அறிவிப்பு

யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றில் கிடப்பில் காணப்படும் வழக்குகளை துரிதப்படுத்தி இரண்டு வருடங்களுக்குள் தீர்ப்பினை வழங்கவுள்ளதாக உயர்நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் அறிவித்துள்ளார்.

யாழ். மேல்நீதிமன்றத்திற்கு 242 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் புதிய கட்டிடம் ஒன்றை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் நேற்று கலந்துகொண்ட போதே நீதிபதி இளஞ்செழியன் இதனைத் தெரிவித்துள்ளதுடன், யாழ். மேல்நீதிமன்றில் பாரிய குற்றங்கள் தொடர்பான 50 வழக்குகளை எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் விசாரித்து தீர்ப்பளிக்கவுள்ளதாக சட்டமா அதிபரிடம் தான் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

யாழ். மேல்நீதிமன்றில் தீர்ப்பளிக்கப்படாத 107 வழக்குகள் காணப்படுவதாகவும், இதில் 50 வழக்குகள் மிகவும் முக்கியமான வழக்குகள் என்பதால் அதற்கான முக்கியத்துவம் சட்டமா அதிபரிடமிருந்து கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு