அதிக உறுப்பினர்களை தெரிவு செய்யும் உள்ளூராட்சி மன்றம் இதுதான்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் அதிக உறுப்பினர்கள் தெரிவாவது கொழும்பு மாநகர சபைக்கே என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன் மிகக்குறைவான உறுப்பினர்கள் தெரிவாவது அக்கரைப்பற்று பிரதேச சபைக்கென கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அதற்கமைய கொழும்பு நகர சபைக்கு 113 உறுப்பினர்களும், அக்கரைப்பற்று பிரதேச சபைக்கு 11 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதிக்கிடையில் நடைபெறும் என்றும், இதற்கு 400 கோடி ரூபா செலவு ஏற்படும் எனவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு