அனர்த்த பாதுகாப்புத் தொடர்பில் கலந்துரையாடல்

அனர்த்தம் தொடர்பில் வடகிழக்கிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முன் ஆயத்த கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது

அவ்வாறான அவசர நிலமைகள் ஏற்படும் பட்சத்தில் அதை எதிர்கொள்வது தொடர்பில் ஆராயும் பொருட்டு இந்த கலந்துரையாடல் இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றது

குறிப்பாக யாழ். மாவட்டத்திலுள்ள தீவக வலயங்கள் மற்றும் கடலோரபகுதி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பில் துறைசார் அதிகாரிகள் இங்கு அறிவுறுத்தப்பட்டனர்

சூறாவளி அல்லது வெள்ள அனர்த்தம் ஏற்படும் பட்சத்தில் அதற்கு முகம்கொடுக்க முப்படையினர் மற்றும் பொலிசாரின் உதவிகளையும் பெற்றுக்கொள்ள பாதுகாப்பு தரப்பில் இங்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டதுடன், மீனவர்களை மறு அறிவித்தல்வரை கடலுக்குள் செல்ல வேண்டாமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதை சகல மீனவர்களுக்கும் தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அரச அதிபர் கடற்தொழில் நீரியல்வள அதிகாரிகளை பணித்துள்ளார்.

அத்துடன் ஏனைய உலர் உணவு, மருத்துவம், சுகாதாரம், போக்குவரத்து ஆகிய சகல துறைசார்ந்த அதிகாரிகளையும் எந்த நேரமும் விளிப்பாக இருக்குமாறும் பாடாசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது

யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் ரவி சங்கரப்பிள்ளை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுகுணவதி தெய்வேந்திரம் மற்றும் முப்படையினர் பிரதேச செயலாளர்கள் துறைசார் அதிகரிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு