ரயில் தொழிற்சங்கப் பிரிவு வேலைநிறுத்தம்

ரயில் இயந்திர பிரிவு ஊழியர்கள் நேற்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ரயில் சாரதிகளுக்கான உதவியாளர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நடைமுறை மற்றும் அரச சேவையாளர்களுக்கான சுற்றறிக்கைக்கு அப்பால் சென்று நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை போன்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நேற்று மாலை மற்றும் இரவு வேளைகளில் ஆரம்பிக்கப்பட்ட ரயில் போக்குவரத்துகள் அனைத்தும் நிறைவிடம் வரை முன்னெடுக்கப்படுமென ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளதுடன், நிறைவிடம் சென்றதன் பின்னர் குறித்த ரயில்களின் சாரதிகளும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு