ரயில் பயணிகளுக்கான அறிவித்தல்

ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளமையால், குறித்த காலப் பகுதியில், பருவ காலப் பயணச் சீட்டுக்களைப் பயன்படுத்தும் ரயில் பயணிகள், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களில் பயணிக்க முடியுமென போக்குவரத்து அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் சாரதிகளுக்கான உதவியாளர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நடைமுறை போன்ற விடயங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று நள்ளிரவு முதல் ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டுவரும் நிலையில், இன்று பகல் இதுதொடர்பில் போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதால் போராட்டம் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு