கபொ.த சாதாரணதர மாணவர்களின் கவனத்திற்கு

இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகள் எதிர்வரும் 12ஆம் திகதி தொடக்கம் 21ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இதற்கமைய, காலை 8.30க்கு பரீட்சைகள் ஆரம்பமாகும் என்பதால், பரீட்சார்த்திகள் அனைவரும் காலை 8.00 மணிக்கு முன்னதாக மண்டபத்திற்கு வருமாறு பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளதுடன், பரீட்சார்த்திகள் பரீட்சைக்கான அனுமதிப் பத்திரம் மற்றும் அடையாள அட்டை அல்லது பாஸ்போட் உள்ளிட்ட உரிய ஆவணங்களை கொண்டுவர வேண்டியது கட்டாயம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, பரீட்சைகளின் போது, மாணவர்கள் ஸ்மான் கடிகாரங்கள், கையடக்கத் தொலைபேசிகள் போன்றவற்றின் மூலம் மேற்கொள்ளும் மோசடிகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் பரீட்சை நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான விடயங்களில் ஈடுபடும் மாணவர்களின் பெறுபேறுகள் இரத்துச் செய்யப்படும் அதேவேளை, பரீட்சைகள் திணைக்களத்தினால் நடத்தப்படும் எந்தவொரு பரீட்சைகளிலும் ஐந்து வருடங்களுக்கு தோற்ற முடியாதவாறு தடை விதிக்கப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், மாணவர்களுக்கு வெளியில் இருந்து ஏதேனும் தொந்தரவுகள் ஏற்படின், அது குறித்து பொலிஸ் தலைமையகம் அல்லது பரீட்சைகள் திணைக்களத்திற்கு தெரியப்படுத்துமாறு பரீட்சை நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், பரீட்சை மண்டபத்தினுள் எந்தவொரு மோசடிகள் இடம்பெறினும் அது குறித்து பரீட்சார்த்திகள் அல்லது பெற்றோர், பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற அவசர இலக்கத்திற்கு அழைத்து தெரியப்படுத்த முடியும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு