தேர்தல் ஆணையாளர் – பொலிசாருக்கிடையில் முதலாவது சந்திப்பு

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு பொலிஸாருக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் முதலாவது கலந்துரையாடல் இன்று இடம்பெற்றுள்ளது.

தேர்தல்கள் பொது செயலக அலுவலகத்தில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும், இதன்போது தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தேர்தல்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சீ.டீ.விக்ரமரத்ன, மேல் மாகாணத்திற்கான போக்குவரத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நந்தன முனசிங்க உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு