முன்னாள் ஜனாதிபதியைக் காப்பாற்றுவேன் – பிரதமர் ரணில்

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோருக்குத் தேவையாக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷவின் பாதுகாப்பு தொடர்பில், ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன, நாடாளுமன்றத்தில் நேற்று நிலையியற் கட்டளை 23(2)இன் கீழ் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர்கள் இருவரும், தங்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்குமாறு கோரவில்லை என்றும் புலனாய்வுப் பிரிவினர், அவ்விருவருக்கும் மேலதிகப் பாதுகாப்பு தேவைப்படுமென அறிவித்தால், அதற்கேற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு