இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்

செய்திகள் முக்கிய செய்திகள் 3 விளையாட்டு

முல்தான், டிச 09

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் கடந்த 1-ந்தேதி தொடங்கியது.

இதில் முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து 657 ரன்களும், பாகிஸ்தான் 579 ரன்களும் குவித்தன. அடுத்து 78 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சில் அதிரடி காட்டிய இங்கிலாந்து 35.5 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 264 ரன்களுடன் துணிச்சலாக 'டிக்ளேர்' செய்தது. இதன் மூலம் பாகிஸ்தானுக்கு 343 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் 96.3 ஓவர்களில் 268 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி இன்று முல்தானில் இன்று (காலை 10.30 மணி) தொடங்குகிறது. முல்தானில் டெஸ்ட் போட்டி நடப்பது 16 ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். இந்தப் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்ல பாகிஸ்தான் அணி முயற்சிக்கும். அதே வேளையில் இந்த டெஸ்டில் தோல்வி அடைந்தால் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழக்க நேரிடும் என்பதால் பாகிஸ்தான் அணியினர் வெற்றிக்காக கடுமையாக போராடுவர். அதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.