இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: முதலாவது டெஸ்ட் போட்டிக்கான வங்காளதேச அணி அறிவிப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 3 விளையாட்டு

மிர்புர், டிச 09

3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசம் சென்றுள்ளது.

இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் மிர்புரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் வங்காளதேச அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இந்நிலையில், 2வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணியை வீழ்த்தி வங்காளதேச அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இந்த நிலையில் , வங்காளதேச அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் , குல்தீப் சன் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர்.

வங்காளதேச அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது. இந்தப் போட்டிக்கு பின்னர் இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 14ந் தேதி தொடங்குகிறது. டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்யில் இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு ஷகிப் அல் ஹசன் கேப்டன் பொறுப்பை ஏற்கிறார்.

முதல் டெஸ்ட் போட்டிக்கான வங்காளதேச அணி விவரம்:-

மஹ்முதுல் ஹசன் ஜாய், நஜ்முல் ஹசன் சாண்டோ, மொமினுல் ஹக், யாசிர் அலில் சவுத்ரி, முஷ்பிகுர் ரஹீம், ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), லிட்டன் தாஸ், நூருல் ஹசன், மெஹதி ஹசன் மிராஸ், தைஜூல் இஸ்லாம், தஸ்கின் அகமது, சையத் காலித் அகமது, எபடாட் ஹொசைன், ஷோரிபுல் இஸ்லாம், ஜாகிர் ஹசன், ரெஜவுர் ரஹ்மான் ராஜா, அனாமுல் ஹக் பிஜாய்.