மக்கள் எமது பக்கம் வருகின்றனர் – ஸ்ரீ.சு.கவின் பொதுச் செயலாளர்

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிகளில் இருந்து பிரிந்து உள்ளவர்களின் பக்கம் உள்ள மக்கள் தமது கட்சியுடன் இணைந்து வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் திரப்பனை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், பல காரணங்களால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் இரண்டாக பிளவுபட்டு செயற்பட்ட போதிலும், அவர்களில் பலர் தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து வருவதாகவும், அவ்வாறில்லாது தனியாக செயற்படுகின்றவர்களுக்கு அரசியலில் எதிர்காலம் ஒன்று இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு