அரசியல் கைதிகளை நேரில் சென்று பார்வையிட்ட சுமந்திரன் மற்றும் சாணக்கியன்

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சாணக்கியன் உட்பட்ட குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். இன்று (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு சிறைச்சாலைக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கைதிகளின் நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டதுடன், அவர்கள் தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சனைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டனர். இதன்போது முன்னாள் வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சயந்தன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading

சொத்துக்களை பதிவு செய்யுமாறு கொழும்பு மாநகரசபை அறிவிப்பு

கொழும்பு மாநகரசபை அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பதிவு செய்யப்படாத தனியார் சொத்துக்களை பதிவு செய்யுமாறு சொத்து உரிமையாளர்களுக்கு கொழும்பு மாநகரசபை அறிவித்துள்ளது. கொழும்பு மாநகர ஆணையாளர் ரோஷனி திஸாநாயக்க, சொத்தின் உரிமையைப் பாதுகாக்க மாநகர சபையின் கீழ் சொத்துகளை பதிவு செய்வது அவசியம் என தெரிவித்துள்ளார். கொழும்பு மாநகரசபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் இதுவரை பதிவு செய்யப்படாத சொத்துக்கள் பற்றிய தகவல்களை நகரவாரியாக பெற முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Continue Reading

நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 79 பேர் உயிரிழப்பு

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 79 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 12,609 ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழந்தவர்களில் 38 பெண்களும் 41 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Continue Reading

பால் பவுடர், கோதுமை மாவு, சிமெண்ட் மற்றும் எரிவாயு விலை உயர்வு

பால் பவுடர், கோதுமை மாவு, சிமெண்ட் மற்றும் எரிவாயு விலையை உயர்த்துவதற்கான வாழ்க்கைச் செலவுக் குழுவின் பரிந்துரை குறித்து அடுத்த வாரம் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும். இருப்பினும், வாழ்க்கைச் செலவுக் குழு அரிசி மற்றும் குழந்தை பால் பவுடரின் விலையை அதிகரிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ பால் பவுடர் 200 ரூபாயும், ஒரு கிலோ கோதுமை மாவு 10 ரூபாயும், ஒரு சிமெண்ட் பை 50 […]

Continue Reading

இந்தியாவில் இருந்து இயக்கப்படும் வாழ்வெட்டு கும்பல் அதிரச்சி தகவல்

மருதனார்மடம் சந்தியில் பழக்கடை நடத்துபவர் மீது கொலைவெறித் தாக்குதல் மேற்கொண்ட வன்முறைக் கும்பலைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் சிலவற்றை நாட்டிலிருந்து தப்பித்து இந்தியாவில் தங்கியுள்ள தேவா மற்றும் ஜெனி இயக்குவதாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் விசாரணையில் தெரிவித்துள்ளனர். மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயத்துக்கு முன்பாக பழக்கடை நடத்தும் மானிப்பாய் லவ் ஒழுங்கையைச் சேர்ந்த இந்திரன் நிரோஷ்குமார் (வயது-27) என்பவர் மீதே கடந்த முதலாம் திகதி […]

Continue Reading

அறிவிக்கப்பட்டபடி யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நிகழ்நிலை வாயிலாக நடைபெறும்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி அறிவிக்கப்பட்டபடி எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 07 ஆம் திகதி நிகழ்நிலை வாயிலாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாக் குழுத் தலைவரும், கலைப் பீடாதிபதியுமான கலாநிதி கே.சுதாகர் இதனைத் தெரிவித்தார். பட்டமளிப்பு விழாத் தொடர்பில் தீர்மனங்களை இயற்றுவதற்காக இன்று புதன்கிழமை நண்பகல் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாக்குழுவின் விசேட கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்கு விபரிக்கும் போதே கலாநிதி கே. […]

Continue Reading

வல்வெட்டித்துறை நகர சபையை சுயேட்சை குழுவசமானது

வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவராக சுயேட்சை குழுவின் உறுப்பினர் சபாரத்தினம் செல்வேந்திரா தெரிவாகியுள்ளார். ஒரு மேலதிக வாக்கினால் அவர் வெற்றிபெற்றார்.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட ரெலோ உறுப்பினர் சதீஸ் 8 வாக்குகளையும் சுயேட்சைக் குழுவின் சார்பில் போட்டியிட்ட செல்வேந்திரா 9 வாக்குகளையும் பெற்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பான உப தவிசாளர், சுயேட்சைக் குழுவுக்கு சார்பாக வாக்களித்தார். வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் தெரிவு அமர்வு இன்று பகல் 10 மணிக்கு நகர சபைக்குரிய மண்டபத்தில் […]

Continue Reading

யாழ்ப்பாணத்திற்கு கடத்திவரப்பட்ட 350 கிலோ மஞ்சள் மீட்ப்பு

யாழ்.குருநகா் கடற்பகுதி ஊடாக யாழ்ப்பாணத்திற்கு கடத்திவரப்பட்ட சுமாா் 350 கிலோ மஞ்சள் கடற்படையினால் கைப்பற்றப்பட்டிருக்கின்றது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்.குருநகா் – ஐந்து மாடி கடற்பரப்பில் சந்தேகத்துக்கிடமான படகு ஒன்றை அவதானித்த கடற்படையினர் அதனை பின்தொடர்ந்தபோது படகில் இருந்தவர்கள் தப்பிச் சென்றிருக்கின்றனா். இதனையடுத்து கடற்படையினா் படகினை சோதனையிட்டபோது அதில் மஞ்சள் இருப்பது அவதானிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் கடற்படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.-40

Continue Reading

போதைப் பொருள் மற்றும் வாளுடன் நேற்றிரவு நால்வர் கைது

யாழ்ப்பாணம் குற்றத் தடுப்புப் பொலிஸாரினால் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் வாளுடன் நேற்றிரவு நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் காரில் பயணித்துக் கொண்டிருந்த நால்வரை சோதனையிட்டபோது அவர்களிடமிருந்து 2 தசம் 94 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் வாள், கார் என்பன கைப்பற்றப்பட்டு சந்தேகநபர்கள் நால்வரும் பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு தலைமை பொலீஸ் அதிகாரி சி.ஐ.பிரான்சிஸ் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில் […]

Continue Reading

கலாச்சார சுற்றுலாத் துறையை சிறப்பு பாடமாக கற்பதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டு தருமாறு மாணவர்கள் கோரிக்கை

கலாச்சார சுற்றுலாத் துறையை சிறப்பு பாடமாக கற்பதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டு தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர். கடந்த வருடங்களில் யாழ் பல்கலைக் கழகத்தில் கற்பிக்கப்பட்டு வந்த குறித்த சிறப்புக் கற்கை நெறி இவ்வாண்டு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கோரிக்கைக்கு அமைவாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் மாணவர்களுக்கும் இடையில் இன்று(20.09.2021) நடைபெற்ற மெய்நிகர் வழியூடான கலந்துரையாடலின் போதே குறித்த விடயம் வலியுறுத்தப்பட்டது. இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த மாணவர் பிரதிநிதிகள், […]

Continue Reading

வட்டுக்கோட்டை மாவடி பகுதியைச் சேர்ந்த வன்முறை கும்பலால் வாள்வெட்டு

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலியார் கோவில் பகுதியில், நேற்றைய தினம் (2021.09.19) வன்முறைக் குழு ஒன்று தாக்குதல் நடாத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மாவடி பகுதியைச் சேர்ந்த வன்முறை கும்பல் ஒன்று, நேற்று இரவு 7 மணியளவில் முதலிய கோயில் பகுதிக்குள் உள்நுழைந்து அங்கு தாக்குதல் நடத்தியுள்ளது. இத்தாக்குதல் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார். அத்துடன் வேலிகளின் தகரங்கள் அடித்து பிடுங்கப்பட்டு வீடு ஒன்றின் கதவினையும் குறித்த வன்முறை கும்பல் அடித்து உடைத்துள்ளதுடன் இரண்டு […]

Continue Reading

எம்.கே.சிவாஜிலிங்கம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்றையதினம் வீடு திரும்பினார். இவருக்கு கடந்த செப்டம்பர் 11ம் திகதி கொரோனா அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. கோப்பாய் தனிமைப்படுத்தல் முகாமில் 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் இன்றைய தினம் குணமடைந்து வீட்டுக்கு திரும்பினார்.

Continue Reading