பலஸ்தீன தூதுவரை சந்தித்தார் அலி சப்ரி

கொழும்பு, செப்.30 வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் Dr. Zuhair M.H. Zaid, ஐ இன்று சந்தித்தார் குறித்த சந்திப்பின் போது இலங்கைக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான பல தசாப்த கால நட்புப்பற்றியும் பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

Continue Reading

இலங்கைக்கு உரம் வழங்கும் ஈரான்

கொழும்பு, செப்.30 இலங்கைக்கு உரங்களை வழங்க ஈரான் அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது. அண்மையில் ஈரானிய தூதுவருடனான சந்திப்பை அடுத்து, விவசாய அமைச்சு ஈரானிடம் இருந்து உரத்தை பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளது. எவ்வாறாயினும், மத்திய கிழக்கு நாடு மீது விதிக்கப்பட்டுள்ள சர்வதேச தடைகளால் ஈரானில் இருந்து உரத்தை இறக்குமதி செய்வது ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது. தேவையான விண்ணப்பங்கள் வெளிவிவகார அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்படும் என விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Continue Reading

நீண்ட நேர மின்வெட்டுக்குத் தீர்வு

கொழும்பு, செப்.30 கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தேவையான உலை எண்ணெய் கையிருப்பு வழங்கப்பட்டதன் பின்னர் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது. தேசிய மின் தொகுப்பில் 300 மெகாவாட் மின்சாரம் சேர்க்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை மீண்டும் செயற்படுத்துவதன் மூலம் நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் பிரச்சினைகள் இருந்தபோதிலும் மின்வெட்டை நீடிக்காமல் இரண்டு மணித்தியாலங்கள் இருபது நிமிடங்களுக்கு மட்டுப்படுத்த அதிகாரிகளுக்கு […]

Continue Reading

மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு யாழில் சைக்கள் பேரணி

யாழ், செப்.30 மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு யாழ் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் சைக்கிள் பேரணி முன் எடுக்கப்பட்டது. மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண நகரில் உள்ள காந்தி அவர்களின் சிலை முன்றிலிருந்து வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி வரை சைக்கிள் பேரணி இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த பேரணி காலை ஏழு முப்பது மணி அளவில் யாழ் இந்திய துணைத் தூதுவரின் பங்கு […]

Continue Reading

இந்தியா – இலங்கைக்கு இடையிலான உறவுகள் பலப்படுத்தப்படும்

கொழும்பு, செப்.30 இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு திட்டங்கள் இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த உதவியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. இலங்கைக்கான பங்காளித்துவத்தை மாற்றுவதற்கான இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்காக நேற்று (வியாழக்கிழமை) கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இதனைத் தெரிவித்தார். எதிர்காலத்தில் இரு நாடுகளுக்குமிடையில் கல்வி, திறன் பயிற்சி மற்றும் தொழில்நுட்பம் போன்றவற்றில் ஒத்துழைப்பை அபிவிருத்தி செய்ய நம்புவதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் மேலும் தெரிவித்தார்.

Continue Reading

ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தம்

கொழும்பு, செப்.30 ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் தொழிற்சங்கம் திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், தமது கோரிக்கைகள் தொடர்பில் ரயில்வே பொது மேலாளருடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Continue Reading

டிசெம்பருக்குள் உலக வங்கியிடம் வாங்கிய முழு கடன் தொகையும் செலுத்தப்படும்: லிற்றோ

கொழும்பு,செப்.30 எரிவாயு விநியோகத்தை தடை இன்றி மேற்கொள்வதற்காக உலக வங்கியினால் கிடைத்த கடன் தொகையில் ஒரு பகுதியை திறைசேறிக்கு செலுத்த முடிந்துள்ளது என்று லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், அந்த முழு கடன் தொகையையும் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் திறைசேரிக்கு செலுத்தப்படும் என்று அதன் தலைவர் முதித பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், உலக வங்கியிடமிருந்து பெறப்பட்ட 70 மில்லியன் டொலர்களை மீண்டும் திறைசேரிக்கு செலுத்த ஆரம்பித்துள்ளோம். நாம் ஜூலை மாதம் உலக […]

Continue Reading

பார்வையற்றோர் பயன்படுத்தும் உபகரணங்களின் விலைகள் அதிகரிப்பு

கொழும்பு,. செப்30 நாட்டில் பார்வையற்றோர் பயன்படுத்தும் தட்டச்சு இயந்திரம் உள்ளிட்ட பல உபகரணங்களின் விலை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என தேசிய ஒற்றுமை முன்னணியின் தலைவரும் பார்வையற்றோருக்கான தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான பிரசன்ன விக்ரமசிங்க கவலை வெளியிட்டுள்ளார் . இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பார்வையற்றோர்  பயன்படுத்தும் தட்டச்சு இயந்திரத்தின் விலை ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாவிலிருந்து 3 லட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளது . பார்வையற்ற குழந்தைகள் கல்விக்காகப் பயன்படுத்தும் பலகையின் விலை […]

Continue Reading

டெவில் உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்களின் உரிமங்கள் ரத்து

கொழும்பு, செப்.30 டெவில் உணவுகளை (Devilled Dishes)  விற்பனை செய்யும் அனைத்து உணவகங்களின் உரிமங்களையும் ரத்து செய்ய தீர்மானித்துள்ளதாக கொழும்பு மாநகரசபை மேயர் ரோஸி சேனநாயக்க தெரிவித்துள்ளார்

Continue Reading

உயர்பாதுகாப்பு வலயம் : ஐ.நா கவலை

அமெரி, செப்.29 இலங்கையில் உயர்பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்துவது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் சுதந்திரத்திற்கான விசேட அறிக்கையாளர் Clement Voule கவலை வெளியிட்டுள்ளார். கிளெமென்ட் வோல் இந்த நடவடிக்கை பொதுக் கூட்டங்களைத் தடை செய்வதாகக் கருதப்படுகிறது என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டம் செய்வதற்கான மக்களின் உரிமைகளை இலங்கை அதிகாரிகள் மதிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் சுதந்திரத்திற்கான சிறப்பு அறிக்கையாளர் Clement Voule வலியுறுத்தியுள்ளார். இவை உட்பட எந்த கட்டுப்பாடுகளும் நியாயமானவை, […]

Continue Reading

மியன்மாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

மியன்மார், செப்.30 மியான்மரின் வடமேற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன. மியன்மாரின் மொனிவாவில் இருந்து வடமேற்கே சுமார் 112 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அந்நாட்டு நிலநடுக்கம் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்ச் சேதம் மற்றும் பொருள் சேதம் குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை.

Continue Reading

இலங்கையில் முதலீடுகளை செய்ய அமெரிக்கா தயார்: ஜூலி சுங்

கொழும்பு, செப்.30 கொழும்பில் புதிய அமெரிக்க மையத்தை திறந்து வைப்பதன் மூலம் இலங்கையர்களின் கனவுகளை நனவாக்க ஐக்கிய அமெரிக்கா தனது கரங்களை நீட்டியதுடன், மகிழ்ச்சியான நட்புறவையும் உறுதிப்படுத்தியது. கொழும்பில் புதிய அமெரிக்க மையத்தை திறந்து வைத்து உரையாற்றிய அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் (Julie Chung), இந்த சவாலான நேரத்தில் அமெரிக்கா இலங்கை மக்களுக்காக தொடர்ந்து முதலீடு செய்யும் என்றும் தெரிவித்தார். அமெரிக்காவும் இலங்கையும் நண்பர்கள் என்றும் மதிப்புமிக்க ஜனநாயக நாடுகள் என்றும் அவர் குறிப்பிட்டார். இலங்கையர்களுக்கு […]

Continue Reading