ஜி7 மாநாடு: அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வரவேற்ற இத்தாலி பிரதமர்

ரோம்:13 அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து ஆகிய நாடுகளை கொண்ட கூட்டமைப்பு ஜி7 ஆகும். ஜி7 கூட்டமைப்பின் 50-வது உச்சி மாநாடு இன்று முதல் 15-ம் தேதி வரை இத்தாலியில் உள்ள அபுலியாவில் நடக்கிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இத்தாலி புறப்பட்டுச் செல்கிறார். அமெரிக்க அதிபர் ஜோபைடன், […]

Continue Reading

மனிதர்களுடன் வாழும் ஏலியன்கள்: பகீர் கிளப்பும் ஆய்வறிக்கை

வாஷிங்டன்:13 இந்த பிரபஞ்சத்தில் மனிதன் வாழ்வதற்கு ஏதுவான வேறு ஏதேனும் கிரகம் உள்ளதா, மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினங்களும் மற்ற கிரகங்களில் உள்ளனவா என்பது பற்றிய ஆராய்ச்சிகள் பல ஆண்டுகளாகவே நீடித்து வருகிறது. வேற்று கிரகவாசிகள் எனப்படும் ஏலியன்கள் இருக்கிறார்களா, இல்லையா என்பது விஞ்ஞான உலகில் நீண்ட காலமாகவே நீடித்து வரும் வாதமாக உள்ளது. சூரிய மண்டலத்திற்கு அப்பால் ஏதேனும் ஒரு கோளில் ஏலியன்கள் இருப்பதாக ஒரு தரப்பினரும், அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. ஏலியன்கள் என்பது […]

Continue Reading

குவைத் தீ விபத்துக்கு சிலிண்டர் வெடிப்பே காரணம்: வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்

குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் ஏற்கனவே 5 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் இருவர் இறந்துள்ளதுள்ளனர். இதன்மூலம், தமிழகத்தை சேர்ந்தவர்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்த அதிர்ச்சியூட்டும் உண்மை […]

Continue Reading

காசா மீது இஸ்ரேல் தாக்குதல்: 15,694 சிறுவர்கள் பலி!

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் 250 நாட்களைக் கடந்துள்ள நிலையில் சுமார் 15,694 சிறுவர்கள் இதுவரையில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் 17,000 சிறுவர்கள் பெற்றோரை இழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 5 வயதிற்குட்பட்ட 8,000 சிறுவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.

Continue Reading

போதைப்பொருட்களுடன் 750 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று புதன்கிழமை  (12) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது போதைப்பொருட்களுடன் 10 பெண்களும் 740 ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைதானவர்களில் 19 பேர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  மேலும், போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ள 3 பேரை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 274 கிராம் ஹெரோயின்,  170 கிராம் ஐஸ், 200 கிராம் கஞ்சா உள்ளிட்ட […]

Continue Reading

குறைந்த பாலின இடைவெளியை கொண்ட நாடுகளில் இலங்கை

தெற்காசிய பிராந்தியத்தில் குறைந்த பாலின இடைவெளியைக் கொண்ட நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளது. வருடாந்த உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கையின்படி, தெற்காசிய பிராந்தியத்தில் பங்களாதேஷ் நாடு முதல் இடத்தைப் பிடித்துள்ளது. நேபாளம் இரண்டாவது இடத்திலும், இந்தியா ஐந்தாவது இடத்திலும், பாகிஸ்தான் ஏழாவது இடத்திலும் உள்ளன. பாலின சமத்துவம் நான்கு முக்கிய பரிமாணங்களில் அளவிடப்படும் நிலையில், இந்த பாலின இடைவெளி குறியீடு 2006 முதல் வெளியிடப்பட்டு வருகிறது. உலகிலேயே மிகக் குறைந்த பாலின இடைவெளியைக் கொண்ட நாடாக […]

Continue Reading

கிளிநொச்சியில் முன்னெடுக்கப்படும் மக்கள் நலன்சார் நலத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்!

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினால் கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும்  மக்கள் நலன்சார் நலத்திட்ட பணிகளின் சாதக பாதகங்கள் மற்றும் அதன்  முன்னேற்றங்கள் தொடர்பில் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாவட்டத்தின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதேச அமைப்பாளர் மற்றும் செயற்பாட்டாளர்களுடன் கலந்துரையாடினார்.

Continue Reading

வறிய மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை: ஜனாதிபதி!

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்காக ஜனாதிபதி நிதியத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.மாகாண ஆளுநர்களுடன் நேற்று (12) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே கல்வி அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  முதலாம் தரம் முதல் 11ஆம் தரம் வரை கல்வி கற்கும் ஒரு இலட்சம் மாணவர்களுக்கான ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன. […]

Continue Reading

பொரலந்தவில் கால்வாய் ஒன்றிற்கு அருகில் சிசுவின் சடலம் மீட்பு!

நுவரெலியா பொரலந்தவில் கால்வாய் ஒன்றிற்கு அருகில் இன்று (13) சிசு ஒன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது சில நாட்களுக்கு முன்னர் பிறந்த சிசு எனவும், இடுப்பில் இருந்து கீழ் பகுதி இல்லாத நிலையிலேயே சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் பிரதேசத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகள் மற்றும் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து, உயிரிழந்த சிசுவின் பெற்றோரை தேடும் நடவடிக்கைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். நுவரெலியா பதில் நீதவான் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சிசுவின் […]

Continue Reading

நான் பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றேன்: சஜித்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எந்தவித பேச்சுவார்த்தைகளும் இல்லை. அவரோடு இணையப் போவதும். இல்லை. நாட்டை அதாள பாதாளத்தில் தள்ளிய மஹிந்த தரப்புடன் இருப்பவர்களுடன் எப்போதும் இணையப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று (13) நடத்திய ஊடக சந்திப்பின் போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் நீங்களும் இணைந்து கொள்ள போவதாக கூறப்படும் கருத்துக்களில் உண்மை இருக்கிறதா என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் […]

Continue Reading

அறிவும் பயிற்சியும் நிறைந்த இளைஞர் தலைமுறை உருவாக்கப்பட வேண்டும்: ஜனாதிபதி!

எதிர்கால சவால்களை வெற்றிகொள்ளும் வகையில் அறிவும் பயிற்சியும் நிறைந்த இளைஞர் தலைமுறை உருவாக்கப்பட வேண்டும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டின் இளைஞர்களுக்கு உயர் வருமான வழியை உருவாக்கத் தேவையான பொருளாதார செயற்திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இளைஞர் படையணியின் இளைஞர் யுவதிகளை ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (12) சந்தித்தபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார். இளைஞர் படையணியின் பணிப்பாளர் பிரிகேடியர் சுஜீவ ரத்நாயக்கவினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நினைவுப் பரிசொன்றும் இதன்போது […]

Continue Reading

ஜூலை முதல் விசா விதிமுறைகளை கடுமையாக்க அவுஸ்திரேலியா!!

ஜூலை முதல் விசா விதிமுறைகளை கடுமையாக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுலா விசா வைத்திருப்பவர்களினால் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் மாணவர் விசாவிற்கு விண்ணப்பிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கட்டுப்படுத்த முடியும் எனவும் அந்த நாட்டு உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அவுஸ்திரேலியா அரசாங்கம் கடந்த ஆண்டு தனது விசா விதிகளை கடுமையாக்கும் திட்டங்களை அறிவித்தது மற்றும் 2025 க்குள் நாட்டிற்கு வரும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை 50 சதவீதம் […]

Continue Reading