20 தெற்காசிய கூட்டு அலுவலகங்களின் அனுசரணை நாடாக இலங்கை இணைவு

இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் உலக வங்கியின் தலைவர் அஜே பங்கா (Ajay Banga) ஆகியோருக்கு இடையில் நேற்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் இணையத் தொடர்பாடல் முறையூடாக இடம்பெற்றது. இதன்போது, புதிய தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கம் மற்றும் எதிர்கால அபிவிருத்தி சவால்களை வெற்றிகொள்ள இலங்கைக்கு வழங்கவேண்டிய ஒத்துழைப்புக்கள் குறித்து அஜே பங்கா (Ajay Banga) கருத்து தெரிவித்ததோடு, சுகாதாரம், சமூக பாதுகாப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தி உள்ளிட்ட துறைகளில் புதிய […]

Continue Reading

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான “பெட்டி மல்லி” கைது

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான “பெட்டி மல்லி” என்பவர் பயாகல பொலிஸாரால் இன்று வியாழக்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளார். பயாகல பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் பயாகல, கொஸ்ஹேன பிரதேசத்தில் உள்ள வனப்பகுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பயாகல, கொஸ்ஹேன பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார். சந்தேக நபரிடமிருந்து 03 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கடந்த சில […]

Continue Reading

14 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 14 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று வியாழக்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீர்கொழும்பு தலுபொத்த பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடையவர் ஆவார். சந்தேக நபர் மலேசியாவிலிருந்து இன்றைய தினம் அதிகாலை 12.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். இதன்போது, விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கொண்டு […]

Continue Reading

மாவனல்லையில் மனைவியை கத்தியால் குத்தி காயப்படுத்திய கணவன்

குடும்பப் பிரச்சினை காரணமாக மனைவி வழங்கிய முறைப்பாட்டை விசாரிப்பதற்கு பொலிஸ் நிலையம் சென்ற கணவன் தனது மனைவியை கத்தியால் குத்தி காயப்படுத்திய சம்பவம் கேகாலை, மாவனல்லை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் கடந்த 26 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, 21 வயதுடைய மனைவி, மாவனல்லை பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய கணவன் தொடர்பில் மாவனல்லை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். இந்த முறைப்பாடு தொடர்பில் விசாரிப்பதற்காகக் கணவனும் மனைவியும் கடந்த 26 ஆம் […]

Continue Reading

தீக தந்து யானை மின்சாரம் தாக்கி பலி

கலாவெவ தேசிய பூங்காவில் சுற்றித்திரிந்த தீக தந்து யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது. ஆண்டியகல கிகுருவெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக அறுந்து கிடந்த பாதுகாப்பற்ற மின்சார கம்பியில் சிக்கி யானை உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இரண்டு பெரிய தந்தங்களையும் மற்றும் வயதான யானை என்பது இந்த விலங்கின் சிறப்பு அம்சமாகும். இதன் காரணமாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து அதிகமான சுற்றுலாப் பயணிகளை தீக தந்து ஈர்த்தது.

Continue Reading

ஜனாதிபதி மற்றும் உலக வங்கிக் குழுமத்தின் தலைவருக்கு இடையில் சந்திப்பு!

இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் உலக வங்கியின் தலைவர் அஜே பங்கா (Ajay Banga) ஆகியோருக்கு இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இணையத் தொடர்பாடல் முறையூடாக இடம்பெற்றுள்ளது இதன்போது, புதிய தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கம் மற்றும் எதிர்கால அபிவிருத்தி சவால்களை வெற்றி கொள்ள இலங்கைக்கு வழங்க வேண்டிய ஒத்துழைப்புக்கள் குறித்து அஜே பங்கா (Ajay Banga) கருத்து தெரிவித்ததோடு, சுகாதாரம், சமூக பாதுகாப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தி உள்ளிட்ட துறைகளில் புதிய […]

Continue Reading

மீன்பிடிக்கச் சென்று நீரில் அடித்துச் செல்லப்பட்டவர் சடலமாக மீட்பு

தந்தையும் மகனும் யான் ஓயா ஆற்றில் மீன் பிடிக்கச் சென்றபோது நீரில் அடித்துச் செல்லப்பட்டவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. புல்மோட்டை 01 இலுப்பையடி சந்தியைச் சேர்ந்த செய்லாப்தீன் முபாறக் (56 வயது) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. புடவைகட்டு – சாகரபுர பகுதியில் குறித்த சடலம் இன்று (28) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. தந்தையும் மகனும் நேற்றைய தினம் (27) யான் ஓயா ஆற்றில் மீன் பிடிப்பதற்காக சென்றபோது தந்தை நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில், இன்றைய […]

Continue Reading

இலங்கையின் கடன் தர மதிப்பீட்டை அதிகரிக்கும் மூடிஸ்

இலங்கையின் கடன் தர மதிப்பீட்டை “Ca” இலிருந்து அதிகரிக்க மூடிஸ் கடன் தர மதிப்பீட்டு நிறுவனம் தீர்மானித்துள்ளது. சர்வதேச பத்திர மறுசீரமைப்பை நிறைவு செய்வதற்காக அரசாங்கத்தின் பத்திரப் பரிமாற்ற சலுகையைத் தொடர்ந்து, மூடிஸ் கடன் தர மதிப்பீட்டு நிறுவனம் இலங்கைக்கான தர மதிப்பீட்டை உயர்த்த தீர்மானித்துள்ளது. இந்நிலையில், கடந்த செவ்வாய்க் கிழமை ஆரம்பிக்கப்பட்ட பத்திரப் பரிமாற்றம், 12.55 பில்லியன் டொலர் கடன் மறுசீரமைப்பு, பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் முயற்சிகளில் முக்கியமானதாகும். மேலும் மூடிஸ் கடன் தர மதிப்பீட்டு நிறுவனம் […]

Continue Reading

இலங்கை பொலிஸாரின் உத்தியோகபூர்வ இணையத்தளம் புதுப்பிப்பு

பொதுமக்களுக்கு உதவுவதற்கான முக்கிய அம்சங்களுக்கு இடமளிக்கும் வகையில் இலங்கை பொலிஸ் தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தை புதுப்பித்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட இணையத்தளமான www.police.lk நேற்று (27) பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பொலிஸாரின் நடவடிக்கைகளின் பகிர்வதைத் தவிர, பொதுமக்களின் முறைப்பாடுகளை பதிவு செய்யவும், மேலதிக புதிய அம்சங்களுடன் இந்த இணையத்தளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதிய இணையத்தளத்தில் இன்னும் பல புதிய விடயங்களை உள்ளடக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.

Continue Reading

மஹரகமவில் கையடக்கத் தொலைபேசிகள் திருட்டு

மஹரகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நான்கு கையடக்கத் தொலைபேசிகள் திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் நேற்று புதன்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளதாக நுகேகொடை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர். நுகேகொடை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் நாவல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நாவல பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடையவர் ஆவார். சந்தேக நபரிடமிருந்து 920 […]

Continue Reading

சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சையும் ஒத்திவைப்பு

நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக டிசம்பரில் நடைபெறவிருந்த இலங்கை சட்டக்கல்லூரி பொது நுழைவுப் பரீட்சை (2024) பிற்போடுவதற்கு பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது. இன்று (28) இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இதனைத் தெரிவித்துள்ளார். சிரேஷ்ட புள்ளியியல் மற்றும் புள்ளியியல் அதிகாரிகளுக்கான வெட்டுப் பரீட்சை (2016/24) ஒரே திகதிகளில் நடத்தப்படாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். இது தொடர்பான இரண்டு பரீட்சைகளும் டிசம்பர் 01 மற்றும் 02 ஆம் திகதிகளில் […]

Continue Reading

ஆலய பூசகரை கட்டி வைத்துக் கொள்ளை!

ஆலய பூசகரை கட்டி வைத்து கூரிய ஆயுதங்களால் தாக்கி அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியையும் பணத்தினையும் கொள்ளை இட்டுச் சென்ற சம்பவம் ஒன்று யாழ். கைதடியில் இடம்பெற்றுள்ளது. கைதடி ஏ9 வீதியில் அமைந்துள்ள கௌரி அம்மன் ஆலயத்திலேயே இந்த கொள்ளை சம்பவம் நேற்று (27) முற்பகலில் இடம்பெற்றுள்ளது. பூசகரின் அலறல் சத்தம் கேட்டு அயலவர்கள் விரைந்தபோது இரண்டு கொள்ளையர்கள் பூசகர் அணிந்திருந்த 2 பவுண் தங்கச் சங்கிலியையும், 45 ஆயிரம் ரூபா பணத்தையும் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். […]

Continue Reading