கீய்விற்கு வடக்கே 65 கிலோ மீற்றருக்கு அணிவகுத்துள்ள ரஷ்யப் படைகள்

உக்ரைன், மார்ச் 02 உக்ரைனின் தலைநகர் கீய்விற்கு வடக்கே 65 கிலோ மீற்றர் தொலை தூரத்திற்கு ரஷ்யப் படையினரின் இராணுவ வாகனங்கள் தொடரணியாக நீண்டு காணப்படுவதாக மாக்சார் வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் படங்கள் உறுதிப்படுத்துகின்றன. இத்தொடரணியில் கவச வாகனங்கள், டாங்கிகள், பீரங்கிகள், டிரக் வாகனங்களும் காணப்படுகின்றன. தெற்கு பெலாரஸில் தரைப்படைகள். தரைவழி தாக்குதல் ஹெலிகாப்டர் பிரிவுகளின் வரிசைப்படுத்தப்பட்டதையும் செயற்கைக்கோள் படங்கள் காட்டியது. ரஷ்ய துருப்புக்கள் உக்ரைன் மீது ஷெல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.  நேற்று […]

Continue Reading

டீசல் விநியோகத்துக்கு கட்டுப்பாடுகள்

கொழும்பு, மார்ச் 02 கடுமையான டீசல் நெருக்கடியை அடுத்து நாடு முழுவதிலுமுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு டீசல் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) நடவடிக்கை எடுத்துள்ளது. எண்ணெய் சேமிப்பு முனையங்களுக்கு இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். தற்போது நான்கு நாட்களுக்கு டீசல் இருப்பு உள்ளதாகவும், எனவே அந்தப் பங்குகளை நிர்வகிக்கும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதேவேளை, 37,000 மெற்றிக் தொன் டீசலுடன் கப்பல் ஒன்று […]

Continue Reading

இலங்கை விமானப்படை 71ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும்

கொழும்பு, மார்ச் 02 இலங்கை விமானப்படை தனது 71ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன தலைமையில் புதன்கிழமை இந்த நிகழ்வு இடம்பெற்றது. அதற்கமைய இவ்வருட பாரம்பரிய கொண்டாட்டமானது இலங்கை விமானப்படைத் தளமான கட்டுநாயக்கவில் விமானப்படைத் தளபதியின் பரிசீலனையில் நடைபெற்றது. இலங்கை விமானப்படையானது 1951ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 ஆம் திகதி Royal Ceylon Air Force என ஸ்தாபிக்கப்பட்டது. மேலும் 1972 ஆம் ஆண்டு இலங்கை குடியரசாக […]

Continue Reading

பேக்கரி பொருட்களுடன் முச்சக்கரவண்டி தீக்கிரை

காலி, மார்ச் 02 பேக்கரி உணவுகளை விநியோகித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்று தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த சம்பம் இன்று (02) அதிகாலை 5.30 மணியளவில் இ்டம்பெற்றுள்ளது. காலி, தல்கம்பொல பிரதேசத்தில் வாகனம் தீப்பிடித்துள்ளதுடன், முச்சக்கரவண்டியின் பின்பகுதி முற்றாக எரிந்து நாசமானதுடன் அதிலிருந்த பேக்கரி உணவுப் பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளன. இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading

முல்லைத்தீவில் கடற்படைத் தளத்திற்கு காணி வழங்க சிலா் இணக்கம்

முல்லைத்தீவு, மார்ச் 02 முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் கடற்படைத் தளத்திற்கான காணிசுவீகரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தெரிவித்துள்ள நிலையில் அதற்கான காணியினை வழங்க சிலர் முன்வந்துள்ள போதிலும் பலர் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது. வட்டுவாகல் கடற்படைத்தளத்திற்காக 671 ஏக்கர் காணியினை கையகப்படுத்த கோரப்பட்டுள்ள நிலையில் அதில் 292 ஏக்கர் அரச காணிகளாக காணப்பட்டுள்ள போதும் ஏனைய 379 ஏக்கர் காணி 35 தனிநபா்களுக்கு சொந்தமாக காணப்படுகின்றது. இந்நிலையில் அவா்களில் […]

Continue Reading

ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்தின் ஊடகப்பேச்சாளர் வெளியிட்டுள்ள முக்கிய கருத்து

ஜெனிவா, மார்ச் 02 பொறுப்புக்கூறலை உறுதிசெய்வது, பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை அங்கீகரிக்கும் செயற்பாடுகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்தின் ஊடகப்பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக பெண்களால் பிரதிநிதித்துவப்படுத்தும் காணாமல்போனோரின் குடும்பங்கள் முகங்கொடுத்திருக்கும் பாதுகாப்பற்ற நிலை குறித்து தாம் அறிந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கை குறித்து வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே ஊடகப்பேச்சாளர் ரவினா ஷம்தாசனி இதனை தெரிவித்துள்ளார். அத்தோடு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் இராணுவமயமாக்கல், இன-மதரீதியான தேசியவாதம், சிறுபான்மையினர் மத்தியில் […]

Continue Reading

நாட்டின் பிரதான இடங்களில் வாகன நெரிசல்

கொழும்பு, மார்ச் 02 நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறிப்பாக கொழும்பில் பல்வேறு பகுதிகளிலும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. எரிபொருளை நிரப்புவதற்காக, வாகனங்கள் வரிசைகளில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையிலேயே, இந்த வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஒருகொடவத்தை, ஹோர்டன் பிளேஸ், பம்பலபிட்டி, கொம்பனிதெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Continue Reading

மேலும் இரு டீசல் கப்பல்கள் இலங்கை வருகை

கொழும்பு, மார்ச் 02 டீசலை ஏற்றிய இரு கப்பல்கள் இன்றும் (02) நாளையும்(03) நாட்டை வந்தடையவுள்ளன. இவற்றில் ஒரு கப்பலில் 33,000 மெட்ரிக் தொன் ஒட்டோ டீசலும் 7,000 மெட்ரிக் தொன் சூப்பர் டீசலும் உள்ளதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர். ஓல்கா தெரிவித்தார். மற்றைய கப்பலில் 28,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 9,000 மெட்ரிக் தொன் விமானத்திற்கான எரிபொருள் காணப்படுவதாகவும் அமைச்சின் செயலாளர் நாயகம் கூறினார். குறித்த கப்பல்களுக்கான கடன் கடிதங்களை தயார்ப்படுத்தும் நடவடிக்கைகள் […]

Continue Reading

மீண்டும் போராட்டத்தில் சுகாதார தொழிற்சங்கம்

யாழ்ப்பாணம், மார்ச் 02 சுகாதார ஊழியர்கள் இன்று மீண்டும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. அதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் , யாழ்.போதனா வைத்தியசாலை தாதி உத்தியோகத்தர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். வேலை நிறுத்த காலத்தில் அவசர மற்றும் உயிர் காக்கும் சேவைகளில் மாத்திரமே தாதிய உத்தியோகத்தர்கள் ஈடுபடுவார்கள் என அறிவித்துள்ளனர். சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளுக்குத் தீர்வு வழங்குவதற்கு, அரசாங்கம் இதுவரையில் நடவடிக்கை எடுக்காமை காரணமாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Continue Reading

அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சிகள் முன்வைத்துள்ள யோசனைகள் தொடர்பில் மாநாடு

கொழும்பு, மார்ச் 02 அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சிகள் முன்வைத்துள்ள யோசனைகள் இன்று, மக்கள் மயப்படுத்தப்படவுள்ளதுடன் மாநாடு இன்று கொழும்பில் இடம்பெறவுள்ளது. கட்சித் தலைவர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், கலைஞர்கள், பொதுமக்கள் என பல தரப்பினக்கும் இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பிரச்சினையில் இருந்து மீள்வதற்கான யோசனைகள் இதில் உள்ளடங்கியுள்ளதாக அந்தக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

Continue Reading

உலக கிண்ண உதைபந்தாட்ட போட்டியிலிருந்து நீக்கப்பட்ட ரஷ்யா

உலக கிண்ண உதைப்பந்தாட்ட விளையாட்டில் இருந்தும் ரஷ்யா நீக்கப்பட்டுள்ளது. உலகக்கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டிகளில் ரஷ்ய அணியுடன் போலந்து, ஸ்வீடன் போன்ற அணிகள் விளையாட மறுத்ததுடன் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற அணிகளும் ரஷ்யாவை நீங்குமாறும் தொடர்ந்து கொடுத்து வந்த அழுத்தம் காரணமாக உதைப்பந்தாட்ட நிறைவேற்றுக் குழு இந்த முடிவினை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரஷ்யாவின் நீக்கமானது அல்லது வெளியேற்றப்பட்டமையானது காலவரையற்றதுடன், இந்த தடையுத்தரவானது எதுவரைக்கும் செல்லுபடியாகும் என்பதைக் குறித்து எந்த அறிவிப்புக்களும் வெளியிடப்படவில்லை.எனவே எதிர்வரும் உலக கிண்ண […]

Continue Reading

குற்றச்சாட்டுகளுக்கு ஜீ.எல்.பீரிஸ் உரிய பதில் வழங்குவார்: நீதியமைச்சர்

கொழும்பு, மார்ச் 02 ஜெனிவா மாநாட்டில் இலங்கை தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு வெளிவிவகார அமைச்சர் உரிய பதில் வழங்குவார் என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகம் ஒன்றிற்கு அலி சப்ரி கூறியதாவது, ஆரம்பத்தில் இருந்தே, இந்த மாநாடு ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான இராணுவ நிலைமையை மையமாகக் கொண்டதுள்ளது. எனினும், ஜெனிவா மாநாட்டில் இலங்கை தொடர்பில் கிடைக்கப்பெற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் எதிர்வரும் சனிக்கிழமை கலந்துரையாடப்படும். இந்த குற்றச்சாட்டுகளுக்கு எதிராக வெளிவிவகார அமைச்சர் உரிய பதிலளிப்பதற்கு தயார். […]

Continue Reading