வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் உயிர் மாய்ப்பு

மாளிகாவத்தை பகுதியிலுள்ள சிறுநீரக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளி ஒருவர் மருத்துவமனையின் 4வது மாடியிலிருந்து குதித்து உயிரிழந்துள்ளதாக மாளிகாவத்தை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் வெலி ஓயா பகுதியை சேர்ந்த 31 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. உயிரிழப்பிற்கான காரணம் தொடர்பில் இதுவரையில் கண்டறியப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Continue Reading

சர்ச்சைக்குரிய சீன கப்பலுக்கு அனுமதி

வெளிவிவகார அமைச்சின் கோரிக்கைக்கு அமைய, சீன ஆய்வுக் கப்பலான ‘ஷி யான் 6’ இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. ‘ஷி யான் 6’ எனும் சீன கடல் ஆய்வுக் கப்பல் இந்த வருடம் ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு வரவுள்ளது. இந்த சர்ச்சைக்குரிய சீன கடல் ஆய்வுக் கப்பல் இலங்கையின் நாரா நிறுவனத்துடன் இணைந்து அறிவியல் பயணத்திற்குத் தயாராகி வருவதாகவும், தென்னிந்தியப் பெருங்கடல் பகுதி மற்றும் பொருளாதார வலயம் உள்ளிட்டவற்றை உள்ளடக்கி விரிவான ஆய்வை மேற்கொள்ளது. அத்துடன் இந்த […]

Continue Reading

கட்டுநாயக்க – கொழும்பு சொகுசு பஸ் வேலை நிறுத்தம்

விமான நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை வரை இயங்கும் 187 ஆம் இலக்க சொகுசு பஸ்ஸின் சாரதிகள் நேற்று (26) முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ரூந்து நிலையத்தில் இருந்து சொகுசு பேரூந்துகளில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு மாகாண போக்குவரத்து அதிகாரசபை தடை விதித்துள்ளமையால் பேருந்து உரிமையாளர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்க எதிர்பார்க்கும் பயணிகளும் சிரமத்திற்கு உள்ளாவதாகதெரிவிக்கப்படுகின்றன.

Continue Reading

கனடா விசா பெற்றுத்தருவதாக பண மோசடியில் ஈடுபட்டவர் கைது

கனடா விசா பெற்றுத்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட பிரதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். சந்தேக நபர் 05 பேரை ஏமாற்றி பணத்தை மோசடி செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த நபர், 26 இலட்சம் ரூபாவிற்கு மேல் மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னரும் கனடா விசாவினை பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்த சம்பவம் ஒன்று பதிவாகியிருந்ததுடன், அந்தச் சம்பவத்தின் பிரதான […]

Continue Reading

மாணிக்கக்கல்லை தூக்கியவருக்கு வலை

லக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவலதெனிய, எல்பிட்டியவில் அமைந்துள்ள மாணிக்கக்கல் அகழும் தளத்தில் இருந்து ஏழு கோடி ரூபாய் பெறுமதியான மாணிக்கக்கல்லை திருடியதாக கூறப்படும் நபரை கைது செய்ய மாத்தளை பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டுள்ள 62 வயதுடைய வர்த்தகர் இது தொடர்பில் மாத்தளை குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாடு செய்த தொழிலதிபரின் மாணிக்கக்கல் அகழ்வு தளத்தில் கூலித் தொழிலாளியாக பணிபுரியும் நபரே மாணிக்கக்கல் அகழ்வின் போது […]

Continue Reading

மனைவியை கொன்றவர் வைத்தியசாலையில் மரணம்

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட கணவன் கடந்த புதன்கிழமை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த ஏப்ரல் மாதம் 13 ம் திகதி வந்தாறுமூலையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பாக 74 வயதுடைய கணவர் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட அவர் சுகயீனம் காரணமாக மட்டு போதனா வைத்தியசாலையில் […]

Continue Reading

பச்சிளம் குழந்தைக்கு சிகிச்சை வழங்காத தாதியர்கள்

வவுனியா பொது வைத்தியசாலையில் பிரசவித்த குழந்தை ஒன்றுக்கு சிகிச்சை வழங்காத தாதியர்கள் தொடர்பில் வெளி வந்த குற்றச்சாட்டு தொடர்பில் விசேட வைத்திய நிபுணர் ஒருவர் உள்ளடங்களாக நால்வர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார். நேற்றையதினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது, கடந்த நான்காம் […]

Continue Reading

இறந்தது நான் இல்லை – தலங்கம துப்பாக்கிச்சூடு குறித்து வெளியான பரபரப்பு தகவல்

துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த நபர் என தனது புகைப்படத்தை தொலைக்காட்சி செய்திகளில் ஒளிபரப்பியதாக கேகாலையைச் சேர்ந்த நபரொருவர், இலங்கையின் இரண்டு தொலைக்காட்சி அலைவரிசைகள் மீது குற்றம் சாட்டியுள்ளார். நேற்று முன்தினம் (25) பத்தரமுல்லை தலங்கம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த நபரென தனது புகைப்படம் செய்திகளில் ஒளிபரப்பப்பட்டுள்ளதாக ஜானக்க புஷ்பகுமார என்ற நபர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் தான் குறித்த இரு தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் அறிவித்த போதிலும் நேற்று(26) மாலை வரை அந்தப் பதிவு நீக்கப்படவில்லையெனவும் […]

Continue Reading

பிரதான மார்க்க ரயில் சேவைகளில் தாமதம்

கம்பஹா, தரலுவ ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்று தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளாகியுள்ளது. கண்டியில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்கும் செங்கடகல மெனிகே ரயிலில் இவ்வாறு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதோடு, இயந்திரத்தில் இருந்து அதிகளவு எண்ணெய் கசிவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக பிரதான மார்க்கத்தில் செல்லும் அனைத்து ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் பயணிப்பதாக கூறப்படுகிறது. மேலும், ரயில் சீரமைக்கப்படும் வரை பிரதான மார்க்கத்தில் செல்லும் அனைத்து ரயில்களும் தாமதமாக செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

வாகரையில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞருக்கு விளக்கமறியல்!

மட்டக்களப்பு, வாகரையில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோம் செய்த 18 வயது இளைஞரை எதிர்வரும் செப்டெம்பர் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று சனிக்கிழமை (26) வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார். குறித்த சிறுமியை காதலித்துவந்த இளைஞர், திருமணம் செய்துகொள்வதாக கூறி சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை (25) பொலிஸார் அந்த இளைஞரை கைது செய்ததுடன் சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்தனர். இந்நிலையில், […]

Continue Reading

பண்டாரவளை கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

பண்டாரவளை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து பெண்ணொருவரை கொலைசெய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில், சிகிச்சைபெற்று வந்த நிலையில் கைதுசெய்யப்பட்டு, இன்று அதிகாலை பண்டாரவளை காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டாரவளை – எட்டாம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவர் கடந்த 23 ஆம் திகதி கொலைசெய்யப்பட்டிருந்தார். இந்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை […]

Continue Reading

பிரமிட் வணிகத் திட்டங்களை முன்னெடுக்கும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

பிரமிட் வணிகத் திட்டங்களை முன்னெடுக்கும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தெஹியோவிட்ட பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அதன்படி, குறித்த நிறுவனங்கள் மற்றும் நபர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.

Continue Reading