கம்பஹாவில் வெசாக் தோரணம் உடைந்து விழுந்து இருவர் காயம்

கம்பஹா, மரதகஹமுல பகுதியில் வடிவமைக்கப்பட்டிருந்த வெசாக் தோரணமொன்று திடீரென உடைந்து வீழ்ந்ததில் இருவர் காயமடைந்துள்ளதாக திவுலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (22) புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. பலத்த காற்றினால் இந்த வெசாக் தோரணம் உடைந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஐந்து நபர்கள் இணைந்து இந்த வெசாக் தோரணத்தை வடிவமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்துள்ள நிலையில், அவர்களில் இருவர் தோரணத்தின் உச்சியில் ஏறி நின்றுகொண்டிருந்துள்ளனர். இதன்போது, இந்த வெசாக் தோரணமானது திடீரென உடைந்து வீழ்ந்துள்ளது. இதன்போது தோரணத்தின் […]

Continue Reading

தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் தமீம் ரஹ்மான் கைது!

சிலோன் பிரிமியர் லீக்கில் பங்கேற்கவுள்ள தம்புள்ளை தண்டர்ஸ் அணியுடன் தொடர்புடைய தமீம் ரஹ்மான் என்ற நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்கான சிறப்புப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வரும் வழக்கு ஒன்றின் மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடை காரணமாகவே அவர் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பின்னர், விளையாட்டு தொடர்பான குற்றங்களை தடுக்கும் சிறப்பு புலனாய்வு பிரிவினரிடம் இவர் ஒப்படைக்கப்பட்டு, அதன் பின் நீதிமன்றத்தில் […]

Continue Reading

திரியாய் வைத்தியசாலை குண்டுவெடிப்பு – கைதானவருக்கு பிணை

திரியாய் வைத்தியசாலை குண்டுவெடிப்பு தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று புதன்கிழமை (22) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குச்சவெளி சுற்றுலா நீதிமன்றில் இடம்பெற்று வந்த குறித்த வழக்கானது விசாரணைக்காக நீதிவான் திருமதி ஜீவராணி கருப்பையா முன்னிலையில் இன்று (22) எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதிவான் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார். குறித்த வழக்கில் எதிராளி சார்பாக பதிவு செய்யப்பட்ட சட்டத்தரணி தேவராஜா ரமணன் இன்றையதினம் முன்னிலையாகியிருந்தார். குறித்த கைதானது, கண்கண்ட சாட்சியங்கள், ஆதாரங்கள் எவையும் இன்றி ஊகத்தின் அடிப்படையில் இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவம் […]

Continue Reading

பாராளுமன்ற சிறப்புரிமையை மீறும் ஒரு செயற்பாடாடு – ஹர்ஷ சபாநாயகரிடம் விடுத்த கோரிக்கை

விசா விவகாரம் தொடர்பில் விளக்கமளிக்க குழுவுக்கு முன்னிலையாகுமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் குடிவரவு,குடியகல்வு திணைக்களத்துக்கு அழைப்பு விடுத்தியிருந்தோம். இருப்பினும் இந்நிறுவனங்களின் அரச அதிகாரிகள் குழுவுக்கு முன்னிலையாகவில்லை.ஆகவே இந்நிறுவனங்களின் செயற்பாடுகள் குறித்து பாராளுமன்றத்தின் ஊடாக உரிய நடவடிக்கைளை முன்னெடுங்கள் என அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) இடம்பெற்ற அமர்வில் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, நிலையியற் கட்டளையின் […]

Continue Reading

அரசாங்கத்திற்கு எதிராகச் செயற்படுவோரை முடக்குவதற்கான சட்டங்களே நாட்டில் உள்ளன! கிரியெல்ல

அரசாங்கத்திற்கு எதிராகச் செயற்படுவோரை முடக்குவதற்கான சட்டங்களே கடந்த நான்கு ஐந்து வருடங்களாக நாட்டில் காணப்பட்டதாக எதிர்க்கட்சியின் பிரதமகொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நாட்டில் இடம்பெறும் ஊழல் மோசடி தொடர்பாக நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”தமது ஆட்சிக்காலத்தில் 75 சட்டமூலங்கள் கொண்டு வரப்பட்டதாக ஜனாதிபதி தெல்தெனியவுக்கு வருகை தந்த போது குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் சட்டமூலங்களை கொண்டு வருவதை விட அதனை நடைமுறைப்படுத்துவதே இன்றியமையாததாகும்.அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவோரை […]

Continue Reading

மரம் முறிந்து வீழ்ந்து ஒரு பிள்ளையின் தாய் பலி

குளியாப்பிட்டிய – மாதம்பே பிரதான வீதியில் சுதுவெல்ல பகுதியில் இன்று புதன்கிழமை (22) பாரிய மரமொன்று சரிந்து வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மாதம்பே, கல்முருவ பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் கல்முருவயிலிருந்து சிலாபம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்துள்ள நிலையில், கடும் மழை காரணமாக வீதியோரத்திலிருந்த பாரிய மரமொன்றிற்கு அடியில் நின்றுள்ளார். இதன் போது திடீரென அந்த மரம் இவர் மீது முறிந்து வீழ்ந்ததில் சம்பவ […]

Continue Reading

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் அறிவிப்பு!

தரம் 5 மாணவர்களுக்காக நடத்தப்படும் 2024 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அறிவிப்பை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பரீட்சை செப்டம்பர் 15, 2024 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை மே 27, 2024 முதல் ஜூன் 14, 2024 வரை இணையம் முலம் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

திடீரென கடல் உள்வாங்கியதால் அச்சத்தில் மக்கள்!

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வங்காலை வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இன்று (22) மதியம் திடீரென கடல் நீர் உள் வாங்கப்பட்டுள்ளது. இன்று (22) அதிகாலை முதல் மன்னார் மாவட்டத்தில் பலத்த காற்று வீசி வருகின்ற நிலையில் இன்றைய தினம் காலை மீனவர்கள் கடற்தொழிலுக்கு செல்லவில்லை. இந்த நிலையில் வங்காலை வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இன்று புதன்கிழமை (22) மதியம் திடீரென கடல் நீர் உள் வாங்கியதோடு,கடற்கரையில் கட்டப்பட்டிருந்த படகுகள் மற்றும் வலைகள் […]

Continue Reading

வெசாக் பண்டிகையை முன்னிட்டு சில பொருட்களின் விலை குறைப்பு

வெசாக் பண்டிகையை முன்னிட்டு மூன்று அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விலை குறைப்பு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் இன்று (22) முதல் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெத்தலி (தாய்லாந்து) ஒரு கிலோ 145 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 950.00 ரூபா, பெரிய வெங்காயம் (இந்தியன்) ஒரு கிலோ 40 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 250.00 ரூபா, ஒரு கிலோ கடலை (பெரியது) […]

Continue Reading

பேருவளை CGJTA சங்கத்தினால் காஸா நிதிக்கு 4 கோடி நிதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள காஸா குழந்தைகள் நிதியத்துக்கு பேருவளை – சீனங்கோட்டை பள்ளி சம்மேள அனுமதியுடன் இலங்கையில் இரத்தினக்கல் வர்த்தகத்திற்கான மிகப்பெரிய சங்கமான CGJTA சுமார் நாற்பது மில்லியன் ஒரு இலட்சத்து தொண்ணூற்று எட்டாயிரத்து தொள்ளாயிரத்து இரண்டு ரூபா (40 198 902) நிதியை நன்கொடையாக வழங்கியுள்ளனர். சீனங்கோட்டை பள்ளிவாசல் சங்கத்தின் துணைத் தலைவர் யாகூத் நளீம், இரத்தினம் மற்றும் நகை வர்த்தக சங்கத்தின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் மற்றும் இலங்கையின் […]

Continue Reading

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள்!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவ வரலாற்றில் ஒரு கருவில் நான்கு குழந்தைகளை ஆரோக்கியமான முறையில் தாய் ஒருவர் பிரசவித்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த கரிகரன் கிருஸ்ணவேணி என்னும் தாயே இந்த குழந்தைகளை பிரசவித்துள்ளார். மருத்துவதுறையின் வரலாற்றில் இயற்கை முறையில் இவ்வாறு கருத்தரிப்பதானது அரிதான விடயமாகவே காணப்படுவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியநிபுணர் டாக்டர் சரவணன் தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் வகையான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை மட்டக்களப்பு போதனா […]

Continue Reading

மோட்டார் சைக்கிள்களைத் திருடி பாதாள உலக செயற்பாடுகளுக்காக விற்பனை செய்த இருவர் கைது

மோட்டார் சைக்கிள்களைத் திருடி அவற்றைப் பாதாள உலக செயற்பாடுகளுக்காக விற்பனை செய்ததாகக் கூறப்படும் இரண்டு இளைஞர்கள் மினுவாங்கொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். உடுகம்பொல பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் மினுவாங்கொடை, தெவலபொல பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றைத் திருடித் தப்பிச் செல்ல முற்பட்ட போது மினுவாங்கொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இருவரும் பல்வேறு பிரதேசங்களில் வீதியோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களைத் திருடி அவற்றைப் பாதாள உலக […]

Continue Reading