யாழில் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை (21) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் ஊரெழு கிழக்கை சேர்ந்த 48 வயதுடையவரே உயிரிழந்துள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Continue Reading

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் அறிவிப்பு!

ஜனாதிபதி தேர்தல் இவ்வருடத்தில் குறிப்பிட்ட காலப்பகுதியில் நடாத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது. முதலில் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்படும் எனவும் நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இதன் போது தெரிவித்துள்ளார்.

Continue Reading

பதவியவில் சிக்கிய 19 வயது துப்பாக்கிதாரி!

கடந்த திங்கட்கிழமை (20) ஊறுவ, ஓமாரகடவல பிரதேசத்தில் நபர் ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் ஊறுவ பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த நபர் தனது சகோதரரின் வீட்டில் இரவு உணவருந்திவிட்டு தனது வீடு நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போது மறைந்திருந்த ஒருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியே இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக பதவிய பொலிஸார் தெரிவித்தனர். படுகாயமடைந்தவர் பதவிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் […]

Continue Reading

கண்டியில் டெங்கு பரவும் அபாயம் – 18 மாதங்களில் 1621 பேர் அடையாளம்

மத்திய மலைநாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக கண்டி மாவட்டத்தில் டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு இது தொடர்பில் தெரிவிக்கையில், கடந்த 18 வாரங்களில் (நான்கரை மாதம்) கண்டி மாவட்டத்தில் 1621 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 2023 ம் ஆண்டு இக் காலப் பகுதியில் கண்டி மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 1440 ஆகும். அதன்படி இவ்வருடம் […]

Continue Reading

ஈரான் ஜனாதிபதியின் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (22) காலை கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு விஜயம் செய்து ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் திடீர் மரணம் குறித்து இரங்கல் தெரிவித்தார். தூதரகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியை இலங்கைக்கான ஈரான் தூதுவர் கலாநிதி அலி ரெசா டெல்கோஷ் மற்றும் பணியாளர்கள் வரவேற்றனர். அதன் பின்னர், அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் குறிப்பேட்டில் குறிப்பொன்றை வைத்துவிட்டு, ஈரான் தூதுவர் மற்றும் ஏனைய மக்களுடன் ஜனாதிபதி குறுகிய உரையாடலில் ஈடுபட்டார். ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் […]

Continue Reading

யாழ். பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர் சங்கத்தினர் சம்பள உயர்வுகோரி போராட்டம்

சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவரும் யாழ். பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர் சங்கத்தினரால் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பல்கலைக்கழக வளாகத்திலிருந்து ஊர்வலமாக வந்த பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள், பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். “ஊழியரின் பொருளாதார நிலைமையை கருத்திற்கொள், MCA கொடுப்பனவை அதிகரி, கல்விசாரா ஊழியர்களை மாற்றான் வீட்டு பிள்ளையாக்காதே போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏந்தியிருந்தனர். தொழிற்சங்க கூட்டுக்குழுவினருடன் இணைந்து ஜனநாயக ஊழியர் சங்கத்தினர் இந்த […]

Continue Reading

நலன்புரி உதவிகள் வழங்குவதற்கான காலம் நீடிப்பு – விசேட வர்த்தமானி வெளியீடு

நலன்புரி உதவிகளை வழங்குவதற்கான கால அவகாசத்தை நீட்டித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். சிறப்பு வர்த்தமானி அறிவிப்பின்படி, ஜூன் 30, 2026 வரை நன்மைகளைப் பெறும் குறிப்பிட்ட நபர்களுக்கு மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது முன்னதாக அறிவிக்கப்பட்டபடி, பலன்கள் பெற தகுதியுள்ள ஒரு பிரிவினருக்கு உதவித்தொகை வழங்குவதற்கான கால அவகாசம் ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைந்தது. மற்றொரு பிரிவினருக்கு இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி நிவாரணப் பலன்கள் வழங்கப்பட இருந்தது. ஆனால் […]

Continue Reading

வலப்பனையில் இரண்டு நாட்களாக மின் தடை

நாட்டில் ஏற்பட்டுள்ள தென்மேல் பருவபெயர்ச்சி காலநிலை மாற்றத்தினால் கடும் காற்று, பலத்த மழையூடான வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா, வலப்பனை, கொத்மலை, ஹங்குராங்கெத்த, மற்றும் அம்பகமுவ ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் தொடர்ச்சியான மழையும், பலத்த காற்றும் வீசுகிறது. இதன் காரணமாக வலப்பனை பிரதேசத்தில் கடந்த (21) ஆம் திகதி முதல் இரண்டு நாட்களாக வீசும் கடும் காற்றினால் வலப்பனை ரூபஹா, மற்றும் தெரிப்பெயே ஆகிய பிரதேசங்களில் வீதி ஓரங்களில் காணப்படும் […]

Continue Reading

விஜயதாசவின் மனு ஒத்திவைப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்ஷவையும் பதில் செயலாளர் நாயகமாக கீர்த்தி உடவத்தவையும் நியமித்தமை சட்டவிரோதமானது எனத் தீர்ப்பளிக்கக் கோரி பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவினால் கொழும்பு மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள மனுவை நிராகரித்து உத்தரவு ஒன்றை வௌியிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனு இன்று மேல்மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றில் மீண்டும் மூன்றாவது நாளாகவும் ஆராயப்பட்டது. நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் இந்த மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு, […]

Continue Reading

தென் கொரிய அதிகாரிகள் சபாநாயகருடன் விசேட சந்திப்பு!

தென் கொரிய ஊழல் எதிர்ப்பு மற்றும் சிவில் உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் உப தலைவர் உள்ளிட்ட குழுவினர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவைச் சந்தித்தனர். தென் கொரியாவின் ஊழல் எதிர்ப்பு மற்றும் சிவில் உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் உபதலைவரும் செயலாளர் நாயகமுமான சுங் சியுங்-யுன் (Chung Seung-yun) தலைமையிலான உயர் அதிகாரிகள் அடங்கிய தூதுக்குழுவினர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை நேற்று நாடாளுமன்றத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். கடந்த வருடம் இலங்கையில் நிறைவேற்றப்பட்ட ஊழல் எதிர்ப்புச் சட்டம் மிகவும் பலம் வாய்ந்த […]

Continue Reading

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றார் சரத் பொன்சேகா?

முன்னாள் இராணுவதளபதி சரத்பொன்சேகா ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளார். ஜூன் மாதம் அவர் இது குறித்த உத்தியோகபூர்வமான அறிவிப்பை வெளியிடவுள்ளார். எந்த கட்சியுடனும் சேராமல் சுயேட்சை வேட்பாளராக அவர் போட்டியிடவுள்ளார். இதேவேளை ஐக்கியமக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் ஆதரவை சரத்பொன்சேகா பெற்றுள்ளார் ஏனைய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இரகசிய பேச்சுவார்ததைகள் தொடர்கின்றன என முன்னாள் இராணுவதளபதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சரத்பொன்சேகா தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது ஊழல் அற்ற நாடு […]

Continue Reading

கிராம உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டும் – அநுர

கிராம உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் தமது தொழில்சார் நடவடிக்கைகள் கடுமையாக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க பாராளுமன்றில் தெரிவித்தார். கிராம உத்தியோகபூர்வ சேவையை ஸ்தாபிக்காமை, தனித்துவமான சம்பளம் கிடைக்காமை, கிராம உத்தியோகத்தர்களுக்கு தேவையற்ற அழுத்தங்கள் போன்ற பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும், கடந்த சில நாட்களாக உத்தியோகபூர்வ விடுமுறை மற்றும் வேலைக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அநுர திஸாநாயக்க தெரிவித்தார். கிராம உத்தியோகத்தரின் சேவையானது எட்டு மணித்தியாலங்களுக்கு மட்டுப்படுத்தப்படவில்லை எனவும் நீண்டகாலமாகியும் அவர்களது தொழில்சார் […]

Continue Reading