கொழும்பு அணி 9 ஓட்டங்களால் வெற்றி

இன்று இடம்பெற்ற LPL போட்டித் தொடரின் 5 ஆவது போட்டியில் Colombo Stars அணி Dambulla Aura அணியை 9 ஓட்டங்களால் வீழ்த்தி வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற Colombo Stars முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களம் இறங்கியது. இதற்கமைய, Colombo Stars அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 165 ஓட்டங்களை பெற்றனர். Colombo Stars அணி சார்பில் Niroshan Dickwella 62 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார். Dambulla […]

Continue Reading

சுரங்க பணியகத்தின் தலைவர் தனது கடமைகளிலிருந்து விடுவிப்பு

புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் (GSMB) தலைவர் ஊழல் குற்றச்சாட்டில் தனது கடமைகளில் இருந்து விடுவிக்கப்பட்டார் மேலும், அதன் பணிப்பாளர் நாயகத்திற்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Continue Reading

இலங்கை மின்சாரசபை தனியார் மயமாக்கப்படாது: சுசந்த பெரேரா

கொழும்பு,டிச 08 இலங்கை மின்சார சபையையோ அல்லது அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களையோ தனியார்மயமாக்குவது கிடையாது என இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு குழுவின் உறுப்பினர் கலாநிதி சுசந்த பெரேரா தெரிவித்துள்ளார். மின்சக்தி அமைச்சில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.“மறுசீரமைப்பு இலங்கை மின்சார சபையின் செயற்பாடுகளை பிரிக்கும் மற்றும் அந்த செயற்பாடுகளை செயற்படுத்த சுயாதீன நிறுவனங்களை நிறுவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, மின்சார உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகம் ஆகியவற்றிற்கான சுயாதீனமான செயற்பாடுகளை மேற்கொள்ளும் நிறுவனங்களாக […]

Continue Reading

கிளிநொச்சி மாவட்டத்தில் தொழிற்பயிற்சி கற்கை நெறிகளுக்கு விண்ணப்பம் கோரல்

இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபையின் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள தொழில் பயிற்சி நிலையங்களால் நடத்தப்படவுள்ள கற்கை நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இக்கற்கை நெறிகள் மாவட்டத்திலுள்ள மாவட்ட தொழிற்பயிற்சி நிலையம், கச்சேரி, பளை, நாச்சிக்குடா மற்றும் கண்டாவளை ஆகிய தொழிற்பயிற்சி நிலையங்களில் நடத்தப்படவுள்ளன. தேசிய தொழில் தகைமை மட்டம் 4 மற்றும் 3க்குரிய கற்கை நெறிகளுக்கே விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாக இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையினர் தெரிவித்தனர். இக்கற்கை நெறிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தமக்கு அண்மையிலுள்ள தொழிற்பயிற்சி நிலையங்களுடன் […]

Continue Reading

பொருளாதார ஸ்திரப்படுத்தல் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்கள்

கொழும்பு,டிச 08 கடந்த 6ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான குழுவுக்கு உறுப்பினர்களை தெரிவுக்குழு நியமித்துள்ளது. அதன்படி, ஷெஹான் சேமசிங்க, தாரக பாலசூரிய, பவித்ரா தேவி வன்னியாராச்சி, சி.பி. ரத்நாயக்க மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் தெரிவுக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். மேலும், உறுப்பினர்களான ஜீவன் தொண்டமான், அகில எல்லாவல, குமாரசிறி ரத்நாயக்க, பேராசிரியர் ரஞ்சித் பண்டார மற்றும் மர்ஜான் ஃபளீல் ஆகியோரும் தெரிவுக்குழுவில் பெயரிடப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

Continue Reading

வீட்டிற்கு மேல் பனை முறிந்து விழுந்ததால் மூவர் பாதிப்பு

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக மண்டோஸ் புயலானது மையம் கொண்டுள்ளது. அந்தவகையில் நாடு முழுவதும் அசாதாரண காலநிலை நிலவி வருகிறது. இந்நிலையில் காலையில் இருந்து தொடர்ச்சியாக கிடைக்கப்பட்டுள்ள மழைவீழ்ச்சி மற்றும் காற்று காரணமாக ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கரம்பன் பகுதியில் பனையானது வீட்டிற்கு மேலே விழீந்ததால் வீடானது பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இந்த அனர்த்தத்தினால் வீட்டில் உள்ள மூவர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Continue Reading

வெளியில் பயணிப்போர் கட்டாயமாக முகக்கவசம் அணியுமாறு ஆளுநர் கோரிக்கை

வெளியில் செல்வோர் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து செல்லுமாறு வடக்கு மாகாண ஆளுநர் அவசர அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். தற்பொழுது நாட்டில் வளிமண்டலத்தில் தூசு அதிகரித்துள்ள சீரற்ற காலநிலையினால் இதய நோய் உள்ளவர்கள் மற்றும் சிறுவர்கள் முதியவர்களுக்கு வேறு பல நோய்கள் ஏற்படக்கூடிய சாத்திய கூறு காணப்படுவதனால் வட பகுதியில் வெளியில் பயணிப்போர் கட்டாயமாக முகக்கவசம் அணியுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

Continue Reading

அகில இலங்கை சிறைச்சாலைகளுக்கான பூப்பந்தாட்ட போட்டி

நமது நிருபர் அகில இலங்கை சிறைச்சாலை திணைக்கள மட்ட பூப்பந்தாட்ட போட்டியில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையை பிரதிநித்துவப்படுத்தி பங்குபற்றிய உத்தியோகத்தர் ஆர்.நிஷாந் திறந்த தனிவீரர்களுக்கான போட்டியில் முதலிடம் பிடித்தார். புதன்கிழமை(07) அன்று அங்குனுகொலபேலஷ சிறைச்சாலையில் இடம்பெற்ற போட்டியிலேயே குறித்த வீரர் முதலிடம் பெற்றார்.

Continue Reading

ஜனாதிபதியின் பலத்துடன் சிலர் எழ முயற்சி: சஜித்

கொழும்பு,டிச 08 நாட்டை அழித்து, வங்குரோத்தடையச் செய்து, கடும் நிதி மோசடி செய்த ராஜபக்ச குடும்பம் தற்போதைய ஜனாதிபதியின் பலத்துடன் மீண்டும் இந்நாட்டில் எழ முயல்வதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார். அண்மையில் கொழும்பு மேற்கு தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இதனை தெரிவித்தார். “இந்த ஜனாதிபதி நியமிக்கப்பட்டது நாட்டை கட்டியெழுப்புவதற்காக அல்ல. நாட்டை அழித்த ராஜபக்சர்களை பாதுகாக்கவே நியமிக்கப்பட்டுள்ளார். எனவே இந்த மக்கள் […]

Continue Reading

யாழில் விஞ்ஞான சங்கத்தின் ஏற்பாட்டில் விஞ்ஞான போட்டிகள்

யாழ்ப்பாணம்,டிச 08 நமது நிருபர் யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கத்தின் வடக்கின் கல்வி மேம்பாட்டுக்கான செயற்பாடுகளின் ஒரு பகுதியாக 29வது ஆண்டாக 2023 ம் ஆண்டு பாடசாலை விஞ்ஞானப் போட்டிகளை நடாத்தவுள்ளது. ஜனவரி 4 முதல் பெப்ரவரி 24 வரை வடக்கில் உள்ள 12 கல்வி வலயங்களின் பாடசாலை மாணவர்களும் பங்கு கொண்டு பயன் பெறுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகிறது. போட்டி தொடர்பாக தெளிவுபடுத்தும் யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கத்தின் ஊடக சந்திப்பு யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இடம்பெற்றது. இதில் […]

Continue Reading

படைப்புழுவை ஒழிக்க ஒட்டுண்ணி அறிமுகம்

கொழும்பு,டிச 08 சோள செய்கையை தாக்கும் படைப்புழுவை ஒழிப்பதற்கு ஒட்டுண்ணி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விவசாய திணைக்களத்தினால் கடந்த மூன்று வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் பின்னர் ஒட்டுண்ணி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டெலினோமஸ் ரிமஸ் (Telenomus remus) என்ற இந்த ஒட்டுண்ணி இயற்கை சூழலில் பரம்பலடையக்கூடியது. படைப்புழுக்களின் முட்டைகளை குறித்த ஒட்டுண்ணி அழிப்பதோடு, படைப்புழுவின் பரவலையும் கட்டுப்படுத்தும் என விவசாய அமைச்சு கூறியுள்ளது.இதனால் படைபுழுக்களை அழிக்க இரசாயன கிருமிநாசினிகளை பயன்படுத்த வேண்டியதில்லை எனவும் விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Continue Reading

8ஆம் தரத்தில் இருந்து செயற்கை நுண்ணறிவு பாடம் அறிமுகப்படுத்தப்படும்: சுசில்

கொழும்பு,டிச 08 2023ஆம் ஆண்டு முதல் சாதாரண தரப் பாடத்திட்டத்தில் தகவல் தொழில்நுட்பத்தை உள்ளடக்குவதோடு , 8ஆம் தரத்தில் இருந்து செயற்கை நுண்ணறிவு பாடமாக அறிமுகப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். தகவல் தொழில்நுட்பத்தைப் பற்றிய அடிப்படை அறிவு இல்லாமல் வேலை வாய்ப்புகளைத் தேடுவது அடுத்த ஐந்து ஆண்டுகளில் கடினமான பணியாக இருக்கும் என்றும், இந்த வளர்ச்சியைத் தயாரிக்கும் வகையில் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். தரம் 10 இல் பாடத்தை […]

Continue Reading