திருமண நிகழ்வில் ஒருவர் அடித்து கொலை: சந்தேகநபர் தப்பியோட்டம்

அங்குலானை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்பு ஒன்றின் வளாகத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக அங்குலானை பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (11) இரவு இடம்பெற்றுள்ளது. அங்குலானை பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய நபரே கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது,  இந்த திருமண நிகழ்வின் போது கொலை செய்யப்பட்டவருக்கும் மற்றுமொரு நபருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்போது, சந்தேக நபர் கொலை செய்யப்பட்ட நபரை […]

Continue Reading

தெற்கு அதிவேக வீதியில் மூடப்பட்ட பகுதி மீண்டும் திறப்பு

தற்காலிகமாக மூடப்பட்ட தெற்கு அதிவேக வீதியில் உள்ள வெலிப்பன்ன இடமாற்ற பகுதி இன்று சனிக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை (11) வெள்ளம் சூழ்ந்தமையினால் குறித்த பகுதி தற்காலிகமாக மூடப்பட்டது.

Continue Reading

பொல்லால் தாக்கப்பட்டு மருமகன் கொலை: மாமனார் கைது

பலாங்கொடை தஹமன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மாமனார் தனது மருமகனை பொல்லால் தாக்கி கொலை செய்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (11) இரவு இடம்பெற்றுள்ளது. பலாங்கொடை தம்மானே பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய மருமகனே கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  சம்பவத்தன்று கொலை செய்யப்பட்ட மருமகனுக்கும் அவரது மனைவிக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் எல்லை மீறியதில் கொலை செய்யப்பட்ட மருமகன் தனது மனைவியை தாக்க முயன்ற போது […]

Continue Reading

கோண்டாவில் பாடசாலையில் மாணவிகளுடன் முறையற்ற நடத்தையில் ஈடுபட்ட ஆசிரியர்கள்?

யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் உள்ள பாடசாலையில் மாணவிகளுடன் முறையற்ற நடத்தையில் ஈடுபட்ட இரண்டு ஆசிரியர்கள் மற்றும் அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காத அதிபர் தொடர்பாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பில் யாழ்ப்பாணம் வலயக் கல்வி பணிப்பாளருக்கு பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோரால் கடிதம் மூலம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாடசாலையில் கல்வி கற்பிக்கும் இரண்டு ஆசிரியர்கள், பெண் பிள்ளைகளை பாடசாலையின் தனிப்பட்ட அறையில் அழைத்து விசாரிப்பது, முறையற்ற நடத்தைகள் என்பவற்றில் ஈடுபடுவதுடன் இடுப்பை பிடித்து நடனம் […]

Continue Reading

மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர்  வரை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அந்த கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும், கொழும்பிலிருந்து காலி மற்றும் மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகளின் உயரம் 2.5 – 3.0 மீற்றர் வரை உயரும் சாத்தியம் காணப்படுவதாகவும் அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அலைகள் நிலத்தை நோக்கி வரும் […]

Continue Reading

ஐ.நா. அமைதிப்படை நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்: 600 இந்திய வீரர்கள் நிலை குறித்து மத்திய அரசு அச்சம்

லெபனானில் நிலை கொண்டுள்ள ஆகிய நாடுகள் சபையின் அமைதிப்படை மீது இஸ்ரேல் தாக்குதல் நடாத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த அமைதிப் படையில் அங்கம் வகிக்கும் 600 இந்திய வீரர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக இந்தியா கவலை தெரிவித்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறிவைத்து லெபனான் நகரங்களின் மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 2 ஆயிரத்துக்கும் அதிகமான லெபனானியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி அண்டை நாடான சிரியாவுக்குள்ளும், […]

Continue Reading

திருகோணமலையில் ரயிலில் மோதி தாயும் மகனும் பலி

திருகோணமலை – சீனக்குடா பகுதியில் வெள்ளிக்கிழமை (11) பிற்பகல் ரயில் மோதி தாயும் மகனும் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர். சீனக்குடா பகுதியைச் சேர்ந்த ரன்மடு ஹேவகே நிஷாந்தி (வயது 47) மற்றும் அவரது மகன் ஷெஹான் ஜயம்பதி பெரேரா (10) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். தந்தை கொண்டு வந்த உணவுப்பொதியினை வாங்கிக்கொண்டு ரயில் பாதையை கடக்கும் போதே இந்த விபத்து இடம் பொற்றுல்லதென பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்ஓயாவிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த ரயிலேயே இருவரும் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். […]

Continue Reading

வவுனியா வாள்வெட்டு: பலி எண்ணிக்கை இரண்டாக உயர்வு

வவுனியா ஓமந்தை, கதிரவேலு பூவரசன்குளம் பகுதியில் நேற்று முன்தினம் (10) காணி பிணக்கு காரணமாக இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் மரணமடைந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார். வவுனியா, ஓமந்தை, கதிரவேலுபூவரசன்குளம் பகுதியில்  காணி முரண்பாடு வாள்வெட்டில் முடிந்தது.  குறித்த காணியில் மாமன் மற்றும் மருகன் ஆகிய இருவரும் வேலை செய்து கொண்டிருந்த போது அங்கு வந்த நபர்கள் இருவர் மீதும் மிளகாய் தூளை அள்ளி வீசி வாள் […]

Continue Reading

விருப்பு எண்களை வெளியிடுவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு!

ஏற்றுக் கொள்ளப்பட்ட வேட்பு மனுக்களுக்கு அமைய வேட்பாளர்களின் விருப்பு எண்கள் அடுத்த வாரத் தொடக்கத்தில் வெளியிடப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கும் பணி நேற்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது. இதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களிடம் இருந்து 690 வேட்பு மனுக்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் […]

Continue Reading

மாவைக்கு மாம்பழம் கொடுத்த புதிய கட்சி!

இலங்கைத் தமிழரசு கட்சியில் இருந்து விலகியோரால் உருவாக்கப்பட்ட  ஜனநாயகத் தமிழரசு கூட்டமைப்பினர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். அதனைத் தொடர்ந்து இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சோ சேனாதிராஜாவினை சந்தித்து தமது தேர்தல் சின்னமான மாம்பழத்தை அன்பளிப்பு செய்து ஆசி பெற்றனர்.

Continue Reading

வெலிப்பன்ன இடமாறல் மீண்டும் திறப்பு

களுத்துறை மாவட்டத்தில் பெய்துவரும் பலத்த மழை தணிந்ததையடுத்து, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிப்பன்ன இடமாறல் இன்று (12) காலை 7.00 மணிக்கு போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பலத்த மழை காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள வெலிபன்ன இடமாறல்  வெள்ளத்தில் மூழ்கியதால் அந்த இடம் மூடப்பட்டிருந்தது.

Continue Reading

8 பெண்களில் ஒருவருக்கு 18 வயதுக்குள் பாலியல் துன்புறுத்தல்: ஐ.நா. வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை

உலகம் முழுவதும் உள்ள 8 பெண்களில் ஒருவர் 18 வயதை அடைவதற்கு முன் பாலியல் வன்கொடுமைக்கு துன்புறுத்தலுக்கும் ஆளாவதை ஐ.நாவின் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பான UNICEF தெரிவித்துள்ளது. சர்வதேச பெண் குழந்தைகள் தினம் இன்று [அக்டோபர் 11] அனுசரிக்கப்படுவதை ஒட்டி ஐ.நா. இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகில் தற்போதுள்ள பெண்களில் 37 கோடி பேர் [8 இல் ஒருவர்] பாலியல் பலாத்காரம் அல்லது துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர் என்ற அதிர்ச்சி புள்ளிவிவரத்தை ஐ.நா. வெளியிட்டுள்ளது. உடல் ரீதியாக […]

Continue Reading