மின்சாதன பொருட்களின் விலை சடுதியாக உயர்வு

கொழும்பு,ஒக் 16 நாட்டில் பெறுமதி சேர் வரி 15% மாக அதிகரிக்கப்பட்டமை மற்றும் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் மின் சாதனங்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். முன்னர் 3800 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட 100 மீற்றர் கபில மற்றும் நீல நிற கம்பியின் ஓர் உருளை தற்போது 7600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.பச்சை நிறத்திலான ஓர் உருளை கம்பியின் விலை 7600 ரூபாயில் இருந்து 19,000 ரூபாயாக உயர்ந்துள்ளது சராசரியாக 70 ரூபாய்க்கு விற்கப்பட்ட […]

Continue Reading

இரத்தினபுரி, கேகாலை மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இரத்தினபுரி,ஒக் 16 கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்படலாம் என இடர் முகாமைத்துவ நிலையம், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையங்களின் இரத்தினபுரி-கேகாலை காரியாலயங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மடுல்லை, எஹலியகொட, குருவிட்ட, இம்புல்பே, எலபாத்த, கிரியெல்ல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும் கேகாலை மாவட்டத்தில் அரனாயக்க, தெரணியகல, தெஹியோவிட்ட பிரதேச செயலக பிரிவுகளில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட இடங்களில் மேற்படி மண்சரிவு ஆபத்து […]

Continue Reading

ரஷ்ய இராணுவ பயிற்சி மையத்தில் பயங்கரவாத தாக்குதல் – 11 பேர் பலி!

ரஷ்யாவில் உள்ள ராணுவ பயிற்சி மைதானத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 15 பேர் காயமடைந்தனர் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள ரஷ்ய பிராந்தியமான பெல்கோரோடில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முன்னாள் சோவியத் நாட்டைச் சேர்ந்த இரண்டு குடிமக்கள் இந்தத் தாக்குதலை நடத்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. “ஒக்டோபர் 15 அன்று, பெல்கோரோட் பிராந்தியத்தில் உள்ள மேற்கு இராணுவ மாவட்டத்தின் பயிற்சி மையத்தில் […]

Continue Reading

கனடாவில் தமிழ் கால்ப்பந்தாட்ட வீரர் குத்திக்கொலை!

கனடாவில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் இலங்கைத் தமிழரான கால்ப்பந்தாட்ட வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். சனிக்கிழமை அதிகாலை அஜாக்ஸில் ஒரு மதுக்கடைக்கு வெளியே சண்டையின் போது கத்தியால் குத்தப்பட்டதில் அவர் இறந்தார். அருண் விக்னேஸ்வரராஜா (29) என்ற கால்ப்பந்தாட்ட வீரரே உயிரிழந்தார். வெஸ்ட்னி ரோடு மற்றும் லேக் டிரைவ்வே பகுதியில் உள்ள கிங்ஸ் கேஸில் பார் & கிரில் வாகன நிறுத்துமிடத்தில் அதிகாலை 2 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. இரண்டு நபர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல் […]

Continue Reading

பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பதவி நாமல் ராஜபக்ஷவுக்கு?

பொழும்பு,ஒக்.16 பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பதவியை முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்குமாறும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள கட்சியின் வருடாந்த மாநாட்டின் போது பதவி மறுசீரமைப்பு தொடர்பான உத்தியோகப்பூர்வ தீர்மானத்தை அறிவிக்க கட்சி மட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. மேலும் கட்சியின் முக்கிய பதவி மறுசீரமைப்பு தொடர்பில் கட்சியின் உறுப்பினர்கள் முன்வைத்துள்ள யோசனை தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் சஞ்ஜீவ […]

Continue Reading

உலக தரவரிசையில் இடம்பிடித்துள்ள கொழும்பு பல்கலைக்கழகம்!

பொழும்பு,ஒக்.16 உலக பல்கலைக்கழகங்கள் 2023 தரவரிசையில் கொழும்பு பல்கலைக்கழகம் இடம்பிடித்துள்ளது. அதன்படி, கொழும்பு பல்கலைக்கழகம் 601 – 800 ஆவது இடத்தை பிடித்துள்ளது. டைம்ஸ் உயர்கல்வி உலக பல்கலைக்கழகங்கள் 2020 ஆம் ஆண்டிற்கான தரவுகளின் அடிப்படையில் முடிவுகள் உருவாக்கப்பட்டன. டைம்ஸ் உயர்கல்வி உலக பல்கலைக்கழகங்கள் கற்பித்தல், ஆராய்ச்சி, அறிவு பரிமாற்றம், சர்வதேச கண்ணோட்டம் உள்ளிட்ட குறியீட்டு அம்சங்களின் அடிப்படையில், 1799 உயர் கல்வி நிறுவனங்கள் தரவரிசைப்படுத்தப்படுகின்றனர். இதன்படி, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் 5வது ஆண்டாக முதலிடத்தைத் தக்க […]

Continue Reading

அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு: கிராமப்புறங்களுக்கு இடம்பெயரும் நிலையில் கொழும்பு மக்கள்

பொழும்பு,ஒக்.16 அதிக உணவு பணவீக்கம் காரணமாக கொழும்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழ்வதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக சிலர் வெளியூர்களுக்கு இடம்பெயரும் நிலை ஏற்பட்டுள்ளதாக உள்ளுராட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சிலர் பயிரிடுவதற்காக வெளி மாகாணங்களில் இருந்து நிலத்தை வாங்க ஆசைப்படுவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால், வெளி மாகாணங்களுக்கு இடம்பெயர்பவர்களில் பெரும்பாலானோர், நகர்ப்புறங்களில் விவசாயம் செய்ய இடமில்லாத சொத்துக்களில் வசிப்பவர்கள், சிலர் கொழும்பில் உள்ள வீடுகளை வாடகைக்கு விட்டு வெளியேறியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. […]

Continue Reading

வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வாட்ஸ்அப் பயனர்களுக்கு இணைய பாதுகாப்பு நிறுவனம் எச்சரிக்கை தகவலொன்றினை விடுத்துள்ளது. இதற்கமைய, Clone Whatsapp போன்ற செயலிகளால் பயனர்களின் தரவுகள் திருடப்படுவதாக ESET என்ற இணைய பாதுகாப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. பாதுகாப்பற்ற செயலிகளை உபயோகிப்பதால் பயனர்களின் கைபேசி பாதிக்கப்படுவதாகவும், அனுமதியின்றி பயனர்களின் கைபேசி உரையாடல்கள், புகைப்படங்கள், காணொளிகள் போன்றவை திருடப்படும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Continue Reading

பணவீக்கம் குறைவடைந்து செல்வது போன்ற மாயை தோற்றுவிக்கப்படுகிறது!

பொழும்பு,ஒக்.16 70 சதவீதமாக உள்ள நாட்டின் பணவீக்கம் குறைவடைந்து செல்வது போன்ற மாயை ஒன்று தோற்று விக்கப்படுவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.கணேசமூர்த்தி தெரிவித்தார். ஏற்றுமதிகள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்ற போதிலும் உற்பத்திகள் குறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Continue Reading

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பம்: இலங்கை – நமீபியா மோதல்

கீலாங், ஒக் 16 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2007-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக அமீரகத்தில் கடந்த ஆண்டு நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்த நிலையில் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நவம்பர் 13-ந்தேதி வரை நடைபெறுகிறது. மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன் உள்பட 7 நகரங்களில் நடக்கும் இந்த போட்டியில் 16 […]

Continue Reading

பிலிப்பைன்ஸ்: திடீர் தீ விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்ஸ்,ஒக் 16 பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் உள்ள ஒரு வீட்டில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் அந்த வீட்டில் உள்ளவர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களால் கடைசி வரை தீயில் இருந்து வெளியே வர முடியவில்லை. திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பெண்கள், சிறுவர்கள் உள்பட ஒரே குடும்பத்தை 6 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Continue Reading

இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

கொழும்பு,ஒக் 16 இன்று 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்பட பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

Continue Reading