நாட்டில் இன்றும் கனமழைக்கு சாத்தியம்

கொழும்பு,ஒக் 16 வெப்ப வலயங்களுக்கு இடைப்பட்ட ஒடுங்கும் வலயத்தின் (ITCZ – வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக் கோளத்திலிருந்தும் வீசுகின்ற காற்று ஒன்றிணையும் பிரதேசம் தாக்கம் காரணமாக, தற்போதைய பலத்த மழைவீழ்ச்சி மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி […]

Continue Reading

தோட்ட தொழிலாளர்கள் தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பில்

பதுளை,ஒக் 15 தோட்ட நிர்வாகத்தினால் வழங்கப்படும் அழுத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பதுளை – யூரி தோட்ட தொழிற்சாலை பிரிவில் உள்ள தொழிலாளர்கள் நேற்றும் இன்றும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர். தோட்ட நிர்வாகத்தினால் ஆயிரம் ரூபா வேதனம் வழங்குவதற்கு அதிக தேயிலை கொழுந்து பறிக்கப்பட வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்படுவதாக அந்த பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர். அத்துடன் அதிக நேரம் கடமையில் ஈடுபடுமாறு பணிக்கப்படுமாறும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Continue Reading

தூய்மை பணிகளுக்காக நவீன வாகனம் வழங்கிய சூர்யாவின் 2டி நிறுவனம்

இந்தியா,ஒக் 15 தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் 2டி என்ற நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்து வருகிறார். இவர் தயாரிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ போன்ற படைப்புகள் சமூகத்தில் நேர் நிலையான அதிர்வுகளை ஏற்படுத்தியது. படைப்புகளுடன் மட்டும் நில்லாமல் சமூக நல பணிகளுக்காகவும், மக்கள் நல திட்டங்களுக்காகவும் சூர்யாவின் 2டி நிறுவனம் சார்பில் நிதியுதவிகளும், பொருளுதவிகளும் நன்கொடையாக அளித்து வருகிறது. 2டி நிறுவனம் சார்பில் வாகனம் வழங்கிய சிவகுமார்அந்த வகையில் கானாத்தூர் ரெட்டி […]

Continue Reading

ஐந்து நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

இந்தியா,ஒக் 15 வங்கக் கடலில் தெற்கு ஆந்திரா வட தமிழக கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் அநேக இடங்களில் இன்று தொடங்கி வரும் 19ந் தேதி வரை இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த […]

Continue Reading

கடவையில் ரயிலில் மோதுண்டு முதியவர் பலி: கொடிகாமத்தில் சம்பவம்

யாழ்ப்பாணம், ஒக் 15 காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயில் கொடிகாமம் பகுதியில் கடவையை கடக்க முற்பட்ட வயோதிபருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் வயோதிபர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இச்சம்பவம் சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றது. இதில் கொடிகாமத்தைச் சேர்ந்த 67 வயதுடையவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading

வடமராட்சியில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட ஒருவர் கைது

யாழ்ப்பாணம், ஒக் 15 வடமராட்சி பகுதியில் வீடுடைத்து திருட்டு மற்றும் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். பருத்தித்துறை பொலிஸ் புலனாய்வாளர்கள் முன்னெடுத்த விசாரணைகளின் போது, நேற்று அல்வாய் பகுதியில் வைத்து 23 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபரிடமிருந்து 3 பவுண் தாலி, 2 பவுண் தங்க சங்கிலி, மோட்டார் சைக்கிள் மற்றும் ஐ போன் ஒன்றும் கைப்பற்றப்பட்டன. சந்தேக நபரின் உடமையிலிருந்து 3 […]

Continue Reading

ஹட்டனுக்கு பயணமாகும் சஜித் பிரேமதாச

கொழும்பு,ஒக் 15 எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இம்மாத இறுதியில் ஹட்டனுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமை அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்பதற்கே சஜித் ஹட்டன் வருகின்றார். இதன்போது ஹட்டன் கல்வி வலயத்திலுள்ள தமிழ் பாடசாலையொன்றுக்கு பேருந்தொன்றும் வழங்கப்படவுள்ளது.

Continue Reading

சாதா போதை விற்பனையாளரை மடக்கி பிடித்த மானிப்பாய் பொலிஸார்

யாழ்ப்பாணம், ஒக் 15 மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை பகுதியில் உள்ள கடை ஒன்றில் சாதா போதைவஸ்து விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர் ஒருவரை மானிப்பாய் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,சங்கானை சைவப்பிரகாச வித்தியாலயத்திற்கு அண்மையில் உள்ள கடை ஒன்றில் சாதா போதைவஸ்து விற்பனை செய்வதாக மானிப்பாய் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. அதனையடுத்து மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்ட அதிரடி சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இதன்போது சாதா […]

Continue Reading

நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

கொழும்பு,ஒக் 15 தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நாட்டின்  பல இடங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, களுத்துறை மாவட்டத்தின் வலல்லாவிட்ட, இங்கிரிய, பாலிந்தநுவர மற்றும் புலத்சிங்கள பிரதேச செயலகப் பிரிவு  நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலகம் மற்றும் கலவான மற்றும் எஹலியகொட பிரதேச செயலகங்களுக்கு 3 ஆம் நிலை (சிவப்பு) அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கேகாலை மாவட்டத்தின் தொடங்கொட, ஹொரண, பண்டாரகம, மில்லனிய, மத்துகம, அகலவத்த, களுத்துறை, ருவன்வெல்ல, வரகாபொல மற்றும் தெஹியோவிட்ட ஆகிய பிரதேச […]

Continue Reading

ஓ.பன்னீர்செல்வம் பண்ணை வீட்டில் கொள்ளை: பொலிஸார் விசாரணை

பெரியகுளம்,ஒக் 15 தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளது. வெள்ளிக்கிழமை இரவு இந்த வீட்டின் மதில் சுவரை ஏறி குதித்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர், வீட்டின் கீழ் தளத்தின் கதவை உடைக்க கொள்ளையர்கள் முயற்சி செய்துள்ளனர். ஆனால் கதவை உடைக்க முடியவில்லை. இதனால் படிக்கட்டு வழியாக கொள்ளையர்கள் மாடிக்கு சென்றுள்ளனர். அங்கு ஒர் அறையில் இருந்த பீரோவை உடைத்துள்ளனர். அதில் ஒன்றும் கிடைக்கவில்லை என்பதால் அங்கிருந்த […]

Continue Reading

வவுனியாவில் ஏற்பட்ட வாகன விபத்து: சம்பவ இடத்திலேயே முதியவர் பலி

வவுனியா,ஒக் 15 வவுனியா, வைத்தியசாலை சுற்றுவட்டத்தில் இ.போ.சபை பஸ் வண்டியும் துவிச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில் இன்று (15) மாலை இடம்பெற்றுள்ளது. இவ் விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா புதிய பஸ் நிலையத்தில் இருந்து மாலை 5.30 இற்கு மன்னார் நோக்கி புறப்பட்ட இ.போ.சபை பஸ் பயணிகளை ஏற்றுவதற்காக வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியூடாக குடியிருப்பு நோக்கி சென்ற போது, வைத்தியசாலை வீதியில் […]

Continue Reading

துருக்கியில் நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் உயிரிழப்பு 40 ஆக உயர்வு

இஸ்தான்புல், ஒக் 15 துருக்கி நாட்டின் வடக்கே பார்தின் மாகாணத்தில் அமாஸ்ரா நகரில் அமைந்த நிலக்கரி சுரங்கம் ஒன்றில் திடீரென நேற்று வெடிவிபத்து ஏற்பட்டு உள்ளது. இதில் 14 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர் என முதற்கட்ட தகவல் வெளியானது. இந்நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதுபற்றி துருக்கி உள்துறை மந்திரி சுலேமான் சொய்லு இன்று கூறும்போது, இதுவரை நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 40 ஆக உயர்ந்து உள்ளது. அவர்களின் […]

Continue Reading