இலங்கையில் தலைமறைவாகியுள்ள ஸ்கொட்லாந்து பெண்ணின் தற்போதைய நிலை

கொழும்பு,ஓக் 15 இலங்கையின் காலிமுகத்திடல் போராட்டத்தில் பங்கேற்று போராட்டங்களை நேரலை செய்தமைக்காக, விசாரணை செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாகியுள்ள, பிரித்தானிய- ஸ்கொட்லாந்தின் பெண், பிரித்தானியாவின் இணையம் ஒன்றுக்கு செவ்வியளித்துள்ளார். அதில் தாம் வெளிவராத இடம் ஒன்றில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.டெய்லி ரெக்கோட் என்ற இணையத்துக்கு செவ்வியளித்துள்ள அவர், தம்மிடம் கடவுச்சீட்டு இல்லை என்றும், பணம் மிகவும் குறைவாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தாம் யாரையும் நம்பவில்லை என்றும் சோர்வடைந்து, குற்றவாளியை போன்று நோய்வாய்ப்பட்டிருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். […]

Continue Reading

கார் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு

மாரவில,ஒக் 15 மாரவில மதர பகுதியில் வலஹபிட்டிய நோக்கிச் சென்ற காரை துரத்திச் சென்ற பொலிஸார், அதன் பின் சக்கரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். உத்தரவை மீறி பயணித்த கார் ஒன்றின் மீதே இவ்வாறு பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்நிலையில், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார், வீதியை விட்டு விலகி, மின்கம்பத்தில் மோதி நின்றதாக, பொலிசார் தெரிவித்தனர். பின்னர் கார் சாரதியை பொலிஸார் கைது செய்தனர். வாகனத்தை சோதனையிட்ட போது அதில் 125 சட்டவிரோத மதுபாட்டில்கள் இருந்ததாக […]

Continue Reading

களனி ஆற்றை ஒட்டிய பகுதிகளில் பயணிப்பவர்களுக்கான அறிவுறுத்தல்

களனி,ஒக் 15 களனி ஆறு பெருக்கெடுத்து ஓடுவதால் பல பகுதிகளில் 1620 பேர் வரை இடம்பெயர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பியகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீதியொன்று வெள்ளத்தில் மூழ்கியதால் மல்வான, யபரலுவ வடக்கு, யபரலுவ தெற்கு, பியகம கிழக்கு மற்றும் தெற்கு ஆகிய பிரதேசங்களில் உள்ள 682 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பியகம – களனி வீதியின் பண்டாரவத்தை சந்தியில் இருந்து ரக்கஹவத்த பாலம் வரையிலான பகுதி, பண்டாரவத்தையிலிருந்து மல்வானை நோக்கிச் செல்லும் சந்தி, […]

Continue Reading

நாட்டின் சீரற்ற காலநிலையால் 3 மரணங்கள் பதிவு

கொழும்பு,ஒக் 15 நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை மூன்று மரணங்கள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், சீரற்ற காலநிலை காரணமாக 13,902 குடும்பங்களை சேர்ந்த 55,435 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

Continue Reading

நாளை ஆரம்பமாகிறது டி20 உலக கோப்பை

மெல்போர்ன்,ஒக் 15 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. நவம்பர் 13-ந்தேதி வரை 7 நகரங்களில் நடைபெறும் இந்த போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. இதில் முதல் சுற்றில் 8 அணிகள் விளையாடும். அவற்றில் இருந்து 4 அணிகள் சூப்பர்12 சுற்றுக்கு தகுதி பெறும். இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகள் நேரடியாக சூப்பர்12 சுற்றில் விளையாட […]

Continue Reading

வேலணை, அனலைதீவுகளுக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்: மக்களின் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல்

யாழ்ப்பாணம்,ஒக் 15 பெரும்போக விவசாய செய்கைக்கு தேவையான மண்ணெண்ணையைப் பெற்றுத் தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விவசாயிகள் கோரிக்கை முன்வைத்துள்ளதுடன், கமநலத் திணைக்களத்திற்கு கிடைக்கின்ற உர வகைகள் முழுமையாக விவசாயிகளுக்கு கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை முன்வைத்தனர். வேலணை கமநலத் திணைக்களத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலிலேயே குறித்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. மேலும் அனலைதீவு பொது வைத்தியசாலைக்கு கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வைத்தியசாலையின் செயற்பாடுகள் தொடர்பாக […]

Continue Reading

யாழில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றத்தில் நால்வர் கைது

யாழ்ப்பாணம்,ஒக் 15 யாழ்ப்பாண நகர் பகுதியில் ஆயிரம் போதை மாத்திரைகள் மற்றும் ஒரு தொகை ஹெரோயின் போதைப்பொருளுடன் நான்கு போதை வியாபரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபர்கள் இன்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் யாழ்.நகர் பகுதியில் உள்ள மூன்று புடவைக்கடைகளில் வேலை செய்து கொண்டு, போதை மாத்திரைகள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்து வந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர்களை யாழ்ப்பாண பொலிஸ் […]

Continue Reading

மத வழிபாட்டு தலங்களில் சூரிய சக்தி மின்சார பிறப்பாக்கியை பொருத்த திட்டம்

கொழும்பு,ஒக் 15 இலங்கை அரச நிறுவனங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களில் கூரை சூரிய சக்தி மின்சார பிறப்பாக்கிகளை பொருத்துவதற்காக, இந்தியக் கடன் திட்டத்தின் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை பயன்படுத்தவுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன் விஜேசேகர தெரிவித்துள்ளார். அரசால் நடத்தப்படும் இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட பாரிய இழப்பைக் குறைப்பதற்காக அரசாங்கம் மின்சாரக் கட்டணத்தை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தியது. இதனையடுத்து, சில பௌத்த பிக்குகள் மின்சாரப் பாவனைக்கான கொடுப்பனவுகளை செலுத்தப்போவதில்லை என்று […]

Continue Reading

அரசியலை புறந்தள்ளி உணவு பிரச்சினைக்கு தீர்வு காண உறுதி கொள்வோம்: ஜனாதிபதி ரணில்

கொழும்பு,ஒக் 15 சம்பிரதாய கட்சி அரசியலை புறந்தள்ளி, உணவுப் பாதுகாப்பை உருவாக்குவதன் மூலம் மக்களின் உணவுப் பிரச்சினையைத் தீர்க்கும் வேலைத்திட்டத்தில் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் வலியுறுத்தியுள்ளார். கிராமிய பொருளாதார மையங்களை வலுவூட்டும் பல்துறை ஒருங்கிணைந்த பொறிமுறை தொடர்பில் அம்பாறை மாவட்டத்திற்கான அரச அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு இன்று (15) முற்பகல் அம்பாறை ஹார்டி உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் […]

Continue Reading

update- முகமாலை பஸ் விபத்து: 46 பேர் இதுவரை காயம்

கிளிநொச்சி,ஒக் 15 கிளிநொச்சி, முகமாலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 46 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று சனிக்கிழமை (15) பஸ் ஒன்றுடன் டிப்பர் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், குறித்த விபத்தில் காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் கூறுகின்றனர். இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Continue Reading

பாணந்துறையில் இரு மாடி கட்டிடத்திலிருந்து விழுந்து இளைஞர் பலி

பாணந்துறை,ஒக் 15 இரண்டு மாடி கட்டிடத்தின் மேல் மாடியில் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹசித லக்மால் விக்ரமசிங்க (28 வயது) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும், இவர் பாணந்துறை கைத்தொழில் பகுதியில் உள்ள தங்கும் அறை ஒன்றில் தற்காலிகமாக வசித்து வந்தவர் எனவும் பின்வத்த பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் பகமூன ஒருபந்தி, சியம்பலாவ பகுதியைச் சேர்ந்தவர் எனவும், பாணந்துறை, நல்லுருவ பிரதேசத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிபவர் எனவும் அடையாளம் […]

Continue Reading

நடுத்தர வருமானம் கொண்ட நாடாகவே இலங்கை உள்ளது: IMF

கொழும்பு,ஒக் 15 இலங்கை ஒரு நடுத்தர வருமான நாடு என்றும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வீழ்ச்சி காணப்பட்டாலும் நடுத்தர வருமானம் கொண்ட நாடாகவே உள்ளது என்றும் சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது. ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தியத்தின் பொருளாதாரக் கண்ணோட்டம் தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் ஊடகவியலாளர் மாநாட்டின் போது, பிரதிப் பணிப்பாளர் எனே மாரி குல்ட் இதனை குறிப்பிட்டுள்ளார். கடந்த சில மாதங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள போதிலும், இலங்கை ஒரு நடுத்தர […]

Continue Reading