சுயாதீன எம்.பிகளும் தேசிய அரசாங்கத்திற்கு இணக்கம்

கொழும்பு,மே 02 ஆளும் கட்சியும் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பது என்ற பொது நிலைப்பாட்டுக்கு வந்துள்ளனர். திங்கட்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர்கள் இந்த நிலைப்பாட்டை எடுத்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடலில் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் கலந்துகொண்டதாக சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார். அத்தோடு உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவங்ச உள்ளிட்ட உறுப்பினர்களும் […]

Continue Reading

கடதாசி தட்டுப்பாடு: எதிர்வரும் காலங்களில் புதிய நடைமுறை

கொழும்பு,மே 02 நாட்டில் ஏற்பட்டுள்ள கடதாசி தட்டுப்பாட்டை அடுத்து, எதிர்வரும் காலங்களில் நீர் கட்டணங்களை குறுந்தகவல் முறையிலோ அல்லது மின்னஞ்சல் ஊடாகவோ பெற்றுக்கொடுப்பதற்கு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது. கடதாசி தட்டுப்பாடு காரணமாக இவ்வாறு மாற்று வழிகளில் நீர் கட்டணங்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் தெரிவித்தார்.

Continue Reading

கன்சாஸ் மாகாணத்தை புரட்டிப்போட்ட சூறாவளி: 3 பேர் உயிரிழப்பு

நியூயார்க்,மே 02 அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தை சனிக்கிழமை பயங்கர சூறாவளி தாக்கியது. அங்கு மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று சுழன்றடித்தது. இந்த சுழல் காற்றில் சிக்கி வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள், வாகனங்கள் மற்றும் மரங்கள், மின் கம்பங்கள் என அனைத்தும் துவம்சம் செய்யப்பட்டன. வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களின் மேற்கூறைகள் பல மைல் தொலைவுக்கு தூக்கி எறியப்பட்டன. குறிப்பாக இந்த சூறாவளி கன்சாஸ் மாகாணத்தின் அண்டோவர் நகரை முற்றிலுமாக புரட்டிப்போட்டு விட்டது. அங்கு 100-க்கும் அதிகமான […]

Continue Reading

மின்சார சபையின் முக்கிய அறிவிப்பு

கொழும்பு,மே 02 புதிய மின் இணைப்புக்கள் வழங்குவதை மட்டுபடுத்தியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறையை கருத்திற் கொண்டு குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. எனினும் ரமழான் பண்டிகையையொட்டி நாளைய தினம் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படமாட்டாது என பொதுபயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Continue Reading

வழமைக்கு திரும்பியது எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகள்

கொழும்பு,மே 02 இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக தனியார் தாங்கி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Continue Reading

எரிபொருளின் தரத்தில் சிக்கல் இருந்தால் அறிவிக்கலாம்

கொழும்பு,மே 02 நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களுக்கு பெருந்தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில் எரிபொருளின் தரம் தொடர்பில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் அதனை அறிவிப்பதற்காக இரண்டு விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. அரசாங்க தகவல் திணைக்களத்தில் திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, குறித்த விடயங்கள் தொடர்பான தகவல்களை 0115234234 அல்லது 0115455130 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறியப்படுத்த […]

Continue Reading

எரிபொருள் கொள்வனவு: இந்திய கடனுதவி நீட்டிப்பு

கொழும்பு, மே 2: அவசரகால எரிபொருள் இருப்புக்களை கொள்வனவு செய்வதற்காக 200 மில்லியன் டொலர் இந்திய கடனுதவி நீடித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மேலும், 500 மில்லியன் டொலர் கடன் வரியை நீடிப்பது தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அமைச்சர் கூறியுள்ளார். ஏற்கனவே இந்தியாவிடம் இருந்து இலங்கை, உணவு மற்றும் எரிபொருள், எரிவாயு தேவைக்காக பல பில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading

13 வது திருத்தச் சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை: தமிழக பாஜக தலைவர் உறுதி

யாழ்ப்பாணம், மே 2: இந்திய அரசினால் உருவாக்கப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 13வது திருத்தச்சட்டத்தினை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய பாஜக கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தமிழ் தேசிய கூட்டமைப்பினரை சந்தித்தபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு அண்டை நாடான இந்தியா இலங்கைக்கு பல்வேறுபட்ட உதவிகளை வழங்குகின்றது. எரிபொருள் மருந்து […]

Continue Reading

ஜனாதிபதிக்கு சென்ற அவசர கடிதம்

கொழும்பு,மே 02 குறிப்பிட்ட காலத்திற்குள் நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் தொடர்பில் மக்களுக்குத் தெரியப்படுத்துமாறு, முன்னாள் அமைச்சரவை அமைச்சுக்களின் செயலாளர்கள் சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான 5 விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளது. அரச வருவாயை அதிகரிப்பதற்கும், செலவீனங்களைக் கட்டுப்படுத்துவதற்கும், நாட்டிற்குக் கிடைக்கும் அந்நியச் செலாவணியை அதிகரிப்பதற்கும், அந்நிய செலாவணியை முகாமைத்துவம் செய்வதற்கும் வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்த வேண்டுமென அந்தக் கடிதத்தில் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டியுள்ளதாக சங்கத்தின் தலைவர் எஸ்.அமரசேகர தெரிவித்துள்ளார்.

Continue Reading

ஜனாதிபதி அலுவலகத்துக்கு முன்பாக பதற்றம்

கொழும்பு,மே 02 ஜனாதிபதி அலுவலகத்திற்கு எதிரே அமைக்கப்பட்டுள்ள கோட்டாகோகம பதாகைகளை அகற்றுவதற்கு பொலிஸ் அதிகாரிகள் முற்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. பொலிஸாரின் முயற்சியால் கோபமடைந்த போராட்டக்காரர்கள், பொலிஸாரின் வாகனத்தை முற்றுகையிட்டு அவர்களை வெளியேறுமாறு தெரிவித்தனர். ஜனாதிபதி செயலக நுழைவாயிலில் ஒரு மேடையை அமைப்பதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் முயற்சித்ததாக உயர் பொலிஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதைத் தவிர்க்குமாறு போராட்டக்காரர்கள் வலியுறுத்தப்பட்ட நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலகத் தடுப்புப் பொலிஸார் குவிக்கப்பட்டனர். இதேவேளை அலரிமளிகையினும் நாடளாவிய ரீதியிலும் தற்போது போராட்டங்கள் […]

Continue Reading

மிரிஹானை சம்பவம்: 15 பேர் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைப்பு

மிரிஹானை,மே 02 அண்மையில் மிரிஹானை பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட 15 பேர் திங்கட்கிழமை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காகவே அவர்கள் குறித்த திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தின் போது ஏற்பட்ட அமைதியின்மையால் 26 பேர் காயமடைந்தனர். சம்பவம் தொடர்பில் 54 பேர் கைதாகினர். இதனையடுத்து நுகேகொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் […]

Continue Reading

இடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன இணக்கம்

கொழும்பு,மே 02 அனைத்து கட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன இணக்கம் வெளியிட்டுள்ளது. 40 சுயாதீன எம்.பிக்களுடனான கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அனுர பிரியதர்ஷன யாப்பா இதனைத் தெரிவித்தார்.

Continue Reading