யாழ் கலாச்சார மத்திய நிலையத்தை பார்வையிட்ட அண்ணாமலை

யாழ்ப்பாணம்,மே 02 திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் கு. அண்ணாமலை காலை 10 30 மணியளவில்  இந்திய அரசின் நிதி உதவியுடன் கட்டப்பட்ட யாழ்ப்பாணம் கலாச்சார மத்திய நிலையத்தை பார்வையிட்டார். இதன்போது கலாச்சார மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள விசேட வசதிகள் தொடர்பாகவும் அதன் திறன்கள் தொடர்பாகவும்  யாழ். இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ் விளக்கம் அளித்தார். இதன்போது தமிழக பாஜக மாநில தலைவர் கு.அண்ணாமலை, இலங்கை தொழிலாளர் […]

Continue Reading

நாடாளுமன்றில் தொலைபேசி பாவனைகளுக்கு மட்டுப்பாடு

கொழும்பு,மே 02 நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமைகளை கருத்தில் கொண்டு நாடாளுமன்றத்தின் தொலைபேசி பாவனை உள்ளிட்ட பல சேவைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, நாடாளுமன்ற தொலைபேசிகளில் பிரத்தியேக தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்ள வேண்டாம் என சகல பிரிவு பிரதானிகள் ஊடாக அனைத்து சேவையாளர்களுக்கும் நாடாளுமன்ற செயலாளர் தம்மிக தசநாயக அறிவுறுத்தல் விடுத்துள்ளார். அத்துடன் நாடாளுமன்றில் மின்சாரம், நீர் பயன்பாடு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், நாடாளுமன்றில் நாளாந்த உணவில் சேர்த்து கொள்ளப்படும் உணவு வகைககளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற படைக்கள […]

Continue Reading

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக வழக்கு தாக்கல்

பாக், மே 02 பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அண்மையில் சவுதி அரேபியா சென்றிருந்தபோது, அங்கு இம்ரான்கானின் ஆதரவாளர்கள் ஷபாஸ் ஷெரீப்பை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண பொலிஸார் இம்ரான்கான் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பலர் உட்பட 150 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இந்த சம்பவத்தில் இம்ரான்கானுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்ததால் அவர் கைது செய்யப்படுவார் என பாகிஸ்தானின் உள்துறை மந்திரி […]

Continue Reading

வரும் 4 திகதி அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிப்பு

கொழும்பு, மே 02 தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் 4 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இன்று (02) காலை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பாரளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே இதனை தெரிவித்தார். நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் கையளிக்க குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Continue Reading

மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிழக்கு பல்கலை மாணவர்கள்

மட்டக்களப்பு,மே 02 கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாண்டு மாணவர் ஒருவர் நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் இடையே அண்மையில் முறுகல் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து விரிவுரையாளர்கள் சிலர் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைநெறி நிறுவகத்தின் கட்டடம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டு மாணவர்களால் கடந்த வாரம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் விரிவுரையாளர் ஒருவரால் மாணவர்கள் இருவர் தாக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர். பின்னர் குறித்த […]

Continue Reading

ரம்புக்கனை சம்பவத்தில் 15 வயது சிறுவனுக்கும் துப்பாக்கிச்சூடு

கேகாலை, மே 02 ரம்புக்கனையில் இடம்பெற்ற சம்பவத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தின் போது 15 வயதுடைய சிறுவன் ஒருவரும் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் அறிக்கை கோருவதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. ரம்புக்கனையில் எரிபொருள் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு, பலர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading

போதைப் பொருளுடன் தொடர்புடைய பெண் கைது

கொழும்பு,மே 02 விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் வர்த்தகரான ஹந்தபான்கொட ஹந்தாய என்பவரின் உதவியாளர் ஒருவரும் பெண்ணொருவரும் களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினரால் ஒரு தொகை ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹோமாகம ககா (Gaga) என அறியப்படும் பெண்ணொருவரும் அவருடன் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட 27 வயதுடைய வட்டரக்க சஞ்சு என்ற இளைஞர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மாதாந்தம் 35,000 ரூபா என்ற வாடகை அடிப்படையில் அத்துருகிரிய – கஹன்தொட பகுதியிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்த நிலையில் […]

Continue Reading

மீண்டும் தொடங்கியது எரிபொருளுக்கான நீண்ட வரிசை

கொழும்பு. மே 03 தனியார் எரிபொருள் தாங்கி சாரதிகளின் வேலை நிறுத்தம் காரணமாக நாடு முழுவதும் மீண்டும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. IOCக்குச் சொந்தமான பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளமை நிலைமையை மோசமாக்கியுள்ளது. இந்த நிலைமையால் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன், எரிபொருள் இருப்புக்கள் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading

பிரதமராக யார் வந்தாலும் எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை: சுமந்திரன்

யாழ், மே 02 தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலையில் யார் புதிய பிரதமராக வந்தாலும் நாட்டில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படப் போவதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்தில் அவர் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது யார் பிரதமராக வந்தால் நாட்டில் மாற்றம் ஏற்படலாம் என நீங்கள் கருதுகிறீர்கள் என ஊடகவியலாளர் கேள்வியெழுப்பியபோதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், நாட்டில் […]

Continue Reading

தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்கு மட்டுப்பாடு

கொழும்பு. மே 02 நாடுபூராகவும் உள்ள தனியார் வைத்தியசாலைகளில் பாரிய மருந்து தட்டுப்பாடு காணப்படுவதால், அவசர சத்திரசிகிச்சைகளை மாத்திரம்  முன்னெடுக்க  தனியார் வைத்தியசாலை மற்றும் நேர்சிங் ஹோம் சங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய நாடுபூராகவுமுள்ள 200 தனியார் வைத்தியசாலைகளில் 76 வகையான மருந்துகளுக்கு தட்டுபாடு காணப்படுவதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.   மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்கள் தட்டுபாடு குறித்து சுகாதார அமைச்சு மற்றும் தனியார் சுகாதார சேவை ஒழுங்குப்படுத்தும் சபைக்கு அறிவித்துள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் கலாநிதி ஆனந்த குருப்பு […]

Continue Reading

பா.ஜ.கவின் தமிழக தலைவருக்காக இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் காத்திருப்பு

யாழ், மே 02 இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாஜக கட்சியின் தமிழ்நாட்டு தலைவர் அண்ணாமலை பல்வேறு சந்திப்புகள் மேற்கொள்ளும் நிலையில் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சந்திப்பு இன்று காலை 11 மணிக்கு தனியார் விடுதியில் சந்திப்பு இடம்பெறும் என தெரிவித்திருந்த போதிலும் 11.52 மணிவரை அண்ணாமலை வராததன் காரணமாக கட்சி தலைவர்கள், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்  காத்திருந்தனர்.

Continue Reading

ஈரானில் ஆறு ஏவுகணை தாக்குதல்கள்

ஈரான், மே 02 ஈரானிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அருகில் ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குர்திஷ் கிளர்ச்சியாளர்களினால் குறித்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இலக்குவைத்து ஆறு ஏவுகணை தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதல் தொடர்பில் ஏற்பட்ட  உயிரிழப்பு அல்லது சேதம் தொடர்பில் தகவல் வெளியிடப்படவில்லை.

Continue Reading