எல்லைதாண்டி மீன் பிடித்த 6 இலங்கை மீனவர்கள் இந்தியாவில் கைது

சென்னை, மே 02 நாகை மாவட்டம் கோடியக்கரை கடல் பகுதியில் இந்திய கடலோர காவல் படையினர் கப்பலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோடியக்கரைக்கு அருகே வெள்ளபள்ளம் நாலுவேதபதிக்கு இடையே இலங்கையை சேர்ந்த ஒரு படகு நிற்பதை பார்த்த கடலோர காவல்படையினர் உடனடியாக படகின் அருகே சென்று பார்த்தனர். அதில் இலங்கை நாட்டை சேர்ந்த 6 மீனவர்கள் இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், தமிழக எல்லைக்குள் மீன் பிடித்தது தெரிய வந்தது. இதையடுத்து எல்லைதாண்டி மீன் பிடித்ததாக […]

Continue Reading

எரிபொருள் விநியோகம் தொடர்பில் அமைச்சரின் விஷேட அறிவிப்பு

கொழும்பு, மே 02 இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையங்கள் மற்றும் களஞ்சியசாலைகளில் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, புகையிரதங்கள், அரசாங்கத்திற்கு சொந்தமான பௌசர்கள் மற்றும் தனியார் பௌசர்களைப் பயன்படுத்தி எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Continue Reading

வரிகளை அதிகரிக்க வேண்டும்: நிதியமைச்சர் அலி சப்ரி

கொழும்பு, மே 02 தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண வரிகளை அதிகரிக்க வேண்டும் என நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இப்தார் நிகழ்வொன்றில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களை சந்தித்தபோது நிதியமைச்சர் அலி சப்ரி இதனைத் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல தாமதித்தமை உள்ளிட்ட சில தீர்மானங்களே இந்த பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என நிதியமைச்சர் அலி சப்ரி இதன்போது குறிப்பிட்டார். குறித்த இப்தார் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசர் […]

Continue Reading

ஹரின்- பொன்சேகா பகிரங்க சண்டை

கொழும்பு, மே 02 ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்ணான்டோ மற்றும் சரத் பொன்சேகா ஆகிய இருவருக்கும் இடையில், கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதுடன் இவ்விருவரும் பகிரங்கமாக சண்டையிட்டுக் கொண்டுள்ளனர் என அறியமுடிகின்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தின் போதே இவ்வாறு இருவரும் பகிரங்கமாக சண்டையிட்டுக்கொண்டுள்ளனர். அவ்விருவருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டபோது அருகிலிருந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் எம்.பியுமான ரவூப் ஹக்கீம், இருவரையும் விலகிவிட்டார். அத்துடன், மனுஷ நாணயக்கார […]

Continue Reading

ஓமந்தையில் ஆவா குழு உறுப்பினர்கள் 16 பேர் கைது

வவுனியா,மே 02 வவுனியா, ஓமந்தைப் பகுதியில் விசேட அதிரடிப் படையினரின் சுற்றி வளைப்பில் காட்டுப் பகுதியில் கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஆவாக்குழுவைச் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ஓமந்தைப் பொலிஸாரிடம் ஞாயிற்றுக்கிழமை மாலை ஒப்படைக்கப்பட்டுள்ளனர். வவுனியா, ஓமந்தை, கோதாண்டர் நொச்சிக்குளம் காட்டுப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் இருப்பதாக விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த பகுதியில் விசேட அதிரடிப் படையினர் விசேட சோதனையை முன்னெடுத்திருந்தனர். இதன்போது அங்கு கத்தி, வாள் […]

Continue Reading

ஈஸ்டர் தாக்குதல்கள் பற்றிய விவரங்களை வேண்டுமென்றே மறைக்கிறார்கள்: பேராயர்

கொழும்பு, மே 02 தேர்தலில் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஈஸ்டர் தாக்குதல்கள் பற்றிய விவரங்களை பலர் வேண்டுமென்றே மறைக்கிறார்கள் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களை தவிர பலர் அறிந்திருந்தார்கள் என்றும் அதனை முன்கூட்டியே தெரிவித்திருந்தால் அந்த மக்களைக் காப்பாற்றியிருக்கலாம் என்றும் அவர் கூறினார். மேலும் சிலர் அதிகாரத்தை கைப்பற்ற விரும்பிய காரணத்தினால் மக்கள் பலியாக்கப்பட்டனர் என்றும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். […]

Continue Reading

இலங்கையின் பொருளாதார நெருக்கடி துரதிஷ்டவசமானது: இஸ்ரேலிய தூதுவர்

கொழும்பு, மே 02 இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி நிலையானது துரதிர்ஷ்ட வசமானது எனவும் சுற்றுலா மற்றும் விவசாய துறையினை மேம்படுத்துவதன் மூலம் நாடு மீண்டும் ஸ்திரத் தன்மையினை அடைய முடியுமெனவும் இஸ்ரேலின் இந்தியா, இலங்கை மற்றும் பூட்டானுக்கான தூதுவர் நோர் கிலோன் (Naor Gilon) தெரிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் தமது நற்சான்றிதழ்களை சமர்ப்பிக்க இலங்கைக்கு சென்றிருந்தபோது இலங்கை மிகவும் அழகான நாடு எனவும், இங்கு பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளமையானது மிகவும் […]

Continue Reading

தனியார் பௌசர் உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பிற்கு IOC ஆதரவு

கொழும்பு, மே 02 பெற்றோலிய கூட்டுத்தாபன தனியார் பௌசர் உரிமையாளர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் லங்கா இந்தியன் ஒயில் நிறுவன தனியார் பௌசர் சாரதிகளும் இணைந்துகொள்ளவுள்ளனர். எரிபொருள் விலை அதிகரிப்பிற்கேற்ப போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இலங்கை பெட்ரோலிய தனியார் பௌசர் உரிமையாளர்கள் சங்கம் கடந்த 30 ஆம் திகதி நள்ளிரவு முதல் சேவையிலிருந்து விலகியுள்ளனர். இந்த வேலை நிறுத்தம் காரணமாக நேற்று எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன. இதேவேளை, தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ள […]

Continue Reading

தனியார் பெற்றோலிய கொள்கலன் உரிமையாளர்கள் சங்கத்தின் எச்சரிக்கை

கொழும்பு, மே 02 எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டதன் விளைவுகளை இன்று முதல் உணரமுடியுமென இலங்கை தனியார் பெற்றோலிய கொள்கலன் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை தனியார் பெற்றோலிய கொள்கலன் உரிமையாளர்கள் சங்கம் கடந்த 30 ஆம் திகதிமுதல் சேவையிலிருந்து விலகி செயற்படுகின்றது. அத்துடன், தாம் முன்வைத்த 60 வீத கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படவில்லையெனவும் குறித்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது

Continue Reading

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகத் தயார்: டிலான் பெரேரா

பதுளை, மே 02 இடைக்கால அரசாங்கம் தொடர்பில் ஏற்றுக்கொள்ளக்கூடிய திட்டத்தை முன்வைத்தால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகத் தயார் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். புதிய திட்டத்தின் கீழ் இடைக்கால அரசாங்கத்தில் பிரதமர் பதவியை பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவிற்கு வழங்குவதற்கு தானும் உடன்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பதுளையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

Continue Reading

இன்று விசேட பொது விடுமுறை

கொழும்பு, மே 02 நாட்டில் இன்றைய தினம்  விசேட பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறியினால் இதற்கான சுற்றுநிரூபம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. தொழிலாளர் தினம் நேற்றைய விடுமுறை தினத்தில் கொண்டாடப்பட்டிருந்ததால் இன்று விசேட பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

Continue Reading

கைக்குழந்தையுடன் தமிழகத்திற்கு அகதிகளாக சென்ற ஐவர்

தனுஸ்கோடி, மே 02 நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக உணவு, அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் தட்டுபாட்டால் இலங்கையில் இருந்து 75 இலங்கை தமிழர்கள் தமிழகத்தில் அகதிகளாக மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று திங்கட்கிழமை  (2) அதிகாலை 2 மாத கைக்குழந்தையுடன் ஒரே  குடும்பத்தை சேர்ந்த  மேலும் 5 பேர் அகதிகளாக ராமேஸ்வரம் சென்றுள்ளனர். நேற்று (1)  நள்ளிரவு யாழ்ப்பாணம்  -நெடுந்தீவு கடற்கரையில் இருந்து ஒரு   படகில் […]

Continue Reading