பிரபல அறிவிப்பாளர் புவனலோஜினி நடராஜசிவம் காலமானார்

யாழ், மே 04 இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மூத்த பிரபல அறிவிப்பாளர் புவனலோஜினி (வேலுப்பிள்ளை) நடராஜசிவம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் காலமானார். இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் முதல் நிலை பெண் அறிவிப்பாளர்களில் ஒருவராக புவனலோஜினி விளங்கிவந்திருந்தார். புவனலோஜனி பிரபல அறிவிப்பாளர் நடராஜசிவத்தின் மனைவியாவார். நடராஜ சிவம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் திகதி காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

கிராம சேவகர்கள் இன்று சுகவீன விடுமுறைப் போராட்டம்

கொழும்பு, மே 4: கிராம உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி, கிராம உத்தியோகத்தர்கள் இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் செயலாளர் திராஜ் தல்பதாது தெரிவித்துள்ளார். நாடு முழுதுவதும் உள்ள கிராம உத்தியோகத்தர்களால் இந்த சுகயீன விடுமுறை போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. சில கிராம உத்தியோகத்தர்கள், கொழும்பு – கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து, காலிமுகத்திடல் சுற்றுவட்டம் வரையில் எதிர்ப்பு பேரணியில் ஈடுபட உள்ளதாகவும் திராஜ் தல்பதாது தெரிவித்துள்ளார்.

Continue Reading

அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்பு

கொழும்பு, மே 04 மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ […]

Continue Reading

வழமைக்குத் திரும்பிய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பணிகள்

கொழும்பு, மே 4: கணனி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. கணனி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, அத்தியாவசியமில்லாத சேவைகளுக்காக இன்று (04) தமது அலுவலகத்திற்கு வருவதை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் அந்த திணைக்களம் நேற்று வேண்டுகோள் விடுத்திருந்தது. இந்நிலையில், கோளாறு திருத்தம் செய்யப்பட்டு, சேவைகள் வழமைபோல இன்று இடம்பெறுமென திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Continue Reading

இன்றைய மின்தடை தொடர்பான அறிவிப்பு

கொழும்பு, மே 04 நாடளாவிய ரீதியில் இன்று  3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இரண்டு பிரதான வலயங்களில் காலை 09.00 மணி முதல் இரவு 09.30 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என சபை தெரிவித்துள்ளது. அதன்படி A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு காலை 09.00 மணி முதல் மாலை 05.30 மணி வரை 02 மணி நேரமும், மாலை 05.00 மணி முதல் இரவு 09.30 மணி […]

Continue Reading

பிரதமர் மஹிந்த நாடாளுமன்றில் இன்று விசேட உரை

கொழும்பு,மே 04 பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ புதன்கிழமை நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்த உள்ளார். பெரும்பான்மையை நிரூபிப்பவர்களுக்கு பிரதமர் பதவியை வழங்க தயாராக இருப்பதாக அவர் அறிவிப்பாரென ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். புதிய பிரதமர் நியமனம் செய்யப்படும் வரை தானே பிரதமராக இருப்பாரென அவர் அறிவிப்பாரெனவும் தெரிவிக்கப்படுகின்றது. நாடு மேலும் பாதாளத்துக்கு செல்வதனை தடுப்பதற்காக, புதிய பிரதமர் தெரிவு செய்யப்படுவதற்கு முன்னர் தான் பதவி விலகப் போவதில்லையென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை […]

Continue Reading

ஷிகர் தவான், லிவிங்ஸ்டன் அதிரடி: குஜராத் அணியை வீழ்த்தி பஞ்சாப் அபார வெற்றி

மும்பை, 10 அணிகள் இடையிலான 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் நடந்து வருகிறது. நவி மும்பையில் உள்ள டி ஒய் பாட்டில் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 48-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன்  ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரராக களமிறங்கிய சுப்மன் கில் 9 ரன்கள் எடுத்திருந்த போது ரிஷி […]

Continue Reading

ஊழல் தொடர்பாக 40 ஆவணங்களை வெளியிட்ட ஜே.வி.பி

கொழும்பு,மே 03 பல்வேறுப்பட்ட ஊழல் மற்றும் முறைக்கேடுகள் தொடர்பான சுமார் 40 ஆவணங்களை ஜே.வீ.பி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. ‘நாட்டை வீழ்ச்சியடைய செய்த திருட்டு கும்பலை கூண்டோடு வெளிப்படுத்துவோம்’ என்ற தொனிப்பொருளில் ஊழல் எதிர்ப்பு குழு கொழும்பில் செவ்வாய்க்கிழமை நடத்திய நிகழ்வின் போது இந்த ஆவணங்கள் வெளியிடப்பட்டன. மேலும் 120 மோசடி சம்பவங்கள் தொடர்பான ஆவணங்கள் வெளியிடப்படவுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் இடம்பெற்ற நிதி முறைக்கேடு, இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற நிதி முறைகேடு, […]

Continue Reading

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் கேப்டனாக நிக்கோலஸ் பூரன் தேர்வு

மும்பை,மே 03 வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் பொல்லார்ட். இவர் 20 ஓவர் போட்டி ,ஒருநாள் கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்தார். இந்நிலையில்  20 ஓவர் போட்டி, ஒருநாள் போட்டி வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக நிக்கோலஸ் பூரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது .

Continue Reading

மதுபான போத்தல்களுடன் சந்தேக நபர் கைது

கொழும்பு,மே 03 யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரிற்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் புதன்கிழமை சாவகச்சேரி நகர பகுதியில் இருந்து பயணிகள் பேருந்தில் சூட்சகமான முறையில் கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகை மதுபான போத்தல்கள் மற்றும் பியர் ரின்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார். கொடிகாமம் பகுதியில் வைத்து சந்தேக நபர் ஒருவர் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் மேற்கொள்ள பட்ட விசாரணையின் அடிப்படையில் அவர் […]

Continue Reading

வெண்கரம் அமைப்பினால் யாழில் தொழில்நுட்பவியல் கற்கைகள் ஆரம்பம்

யாழ்ப்பாணம்,மே 03 வெண்கரம் அமைப்பின் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டின் முன்னோக்கிய பாய்ச்சலாக யாழ்ப்பாணம் கொட்டடியில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியல், ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அட்சய திருதியை தினமான செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு வெண்கரம் பிரதான செயற்பாட்டாளர் மு.கோமகன் தலைமையில் இந்த ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது. கொட்டடி லைடன் சந்தியில் உள்ள கட்டிடம் ஒன்றில் மிக எளிமையான முறையில் ஆரம்ப வைபவம் இடம்பெற்றது. வலிகாமம் கல்வி வலய தமிழ் பாட ஆசிரிய […]

Continue Reading

தடுப்பூசி செலுத்தாத மாணவர்களுக்கு வகுப்பறையில் அனுமதியில்லை

சண்டிகர்,மே 03 இந்தியாவில் கொரோனா வைரசின் 3-வது அலை பரவல் கணிசமாக கட்டுக்குள் வந்தது. தொற்று பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் குறைந்ததால் மக்கள் நிம்மதியடைந்தனர். ஆனால், கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் பல்வேறு மாநில அரசு பொது இடங்களில் முககவசம் கட்டாயம் என தெரிவித்துள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தாதவர்களை விரைவில் தடுப்பூசி செலுத்தவும் அறிவுறுத்தி வருகிறது . இந்நிலையில் சண்டிகரில் புதன்கிழமை முதல்  கொரோனா தடுப்பூசி செலுத்தாத 12 – 18 வயது […]

Continue Reading