நீர் கட்டணம் செலுத்தாதவர்களுக்கான அறிவித்தல்

கொழும்பு, மார்ச் 17 நீர் கட்டணத்தை செலுத்தாமல் நிலுவையிலுள்ள அனைத்து நுகர்வோருக்குமான நீர் விநியோகத்தை துண்டிப்பதற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது. நாடளாவிய ரீதியில் குறித்த நீர் விநியோக துண்டிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் உதவிப் பணிப்பாளர் ஏக்கநாயக்க வீரசிங்க தெரிவித்துள்ளார்.

Continue Reading

புலமைச் சொத்து சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்

கொழும்பு, மார்ச் 17 பாராளுமன்றத்தில் கடந்த 08ஆம் திகதி விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட புலமைச் சொத்து (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபபேவர்த்தன தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். இலங்கையின் பொருளாதாரத்திற்கு கணிசமான பங்களிப்பைச் செலுத்தும் புவியியற்சார் சுட்டிக்காட்டுகைகளான சிலோன் சினமன் (Ceylon Cinnamon) போன்ற தயாரிப்புக்களைப் பதிவுசெய்வதற்கு புலமைச் சொத்துச் சட்டத்தில் உரிய நடைமுறைகள் உள்வாங்கப்படாமையால் அவை இதுவரை சான்றிதழ் குறி (Certificate marks) என்ற விடயத்தின் கீழேயே பதிவுசெய்யப்பட்டன. இந்த நிலையில் சிலோன் டீ (Ceylon […]

Continue Reading

நாட்டில் மேலும் 320 பேருக்கு கொவிட் தொற்று

கொழும்பு, மாரச் 17 நாட்டில் மேலும் 320 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 657,134 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் மேலும் ஒருவர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 16,416 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர். இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 619,073 ஆக […]

Continue Reading

களனிவெளி ரயில் சேவையில் பாதிப்பு

கொழும்பு, மார்ச் 17 மருதானையிலிருந்து அவிசாவளை நோக்கி பயணித்த ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளமையினால் களனிவெளி ரயில் பாதையில் ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்படக்கூடும் என ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. பேஸ்லைன் ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

டோக்கியோ, மார்ச் 17 ஜப்பான் டோக்கியோவின் வடகிழக்கு பகுதியில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அத்தோடு, கிழக்கு ஜப்பானில் 7.3 ரிச்டர் அளவில் மற்றுமொரு சக்திவாய்ந்த நிலநடுக்கமும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பானில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Continue Reading

20 அடி உயரும் ஈபிள் கோபுரம்

பாரிஸ், மார்ச் 17 பிரான்ஸின் பாரிஸில் உலக பிரசித்தி பெற்ற ஈபெல் கோபுரம் மீது தொலைதொடர்பு துறை ஆன்டனா 20 அடி உயரத்தில் வைக்கப்படுகின்றமையினால் கோபுரம் உயரம் 1063 அடியாக உயருகிறது. இது 1889 ஆம் ஆண்டு நிறுவப்பட்டபோது அதன் உயரம் 1024 அடியாக இருந்தது. சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்திழுக்கும் இந்த கோபுரம் முழுவதும் இரும்பினால் ஆனது

Continue Reading

விரைவில் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வு

கொழும்பு, மார்ச் 17 கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள LP எரிவாயு கப்பல்களுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத் இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய, நாளைய தினம் எரிவாயு தரையிறக்கப்பட்டு விரைவில் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Continue Reading

மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்

கொழும்பு, மார்ச் 17 நாடு முழுவதும் இன்றைய தினமும் சுழற்சி முறையிலான மின்வெட்டு அமுலாகும். என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L முதலான வலயங்களில் காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதிக்குள் இரண்டு மணித்தியாலமும்,மாலை 5 மணி முதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதிக்குள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்தடை அமுலாக்கப்படவுள்ளது. அத்துடன், P, Q, R, S, T, U, V, W முதலான வலயங்களில் மாலை 3.00 […]

Continue Reading

பல வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞனும், தந்தையும் கைது

யாழ்ப்பாணம், மார்ச் 17 யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் யாழ்.மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருடைய தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வீட்டிலிருந்து வாள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தொிவிக்கின்றன.  யாழ்ஃ மாவட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடா்புடைய குறித்த நபர் தலைமறைவாக இருந்த நிலையிலேயே மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரின் வீட்டில் வாள் மீட்கப்பட்டதாகவும் அதனடிப்படையிலேயே தந்தையும் கைது செய்யப்பட்டதாகபொலிஸ் தகவல்கள் தொிவிக்கின்றன.

Continue Reading

பறாளை முருகன் கோவிலில் புத்தர் சிலை வைப்பதற்கோ, பௌத்த அனுட்டானங்கள் செய்யவோ அனுமதி இல்லை

யாழ்ப்பாணம், மார்ச் 17 யாழ்.சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தின் கீழ் புத்தர் சிலை வைப்பதற்கோ பிரித் ஓதுவதற்கோ தாங்கள் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என ஆலய தர்மகத்தா சபையும் ஊர் மக்களும் தீர்மானித்துள்ளனர். சைவ ஆலயமான இவ்வாலயத்தில் எந்த மதத்தவர்களும் வந்து வழிபட முடியும் எனவும், அவர்கள் தமது மதச் சின்னங்களை நிறுவுவதற்கோ அது சார்ந்த வழிபாடுகளை மேற்கொள்வதற்கோ முருகன் அடியார்களும் ஊர் மக்களும் அனுமதிக்கமாட்டார்கள் எனவும் உறுதிபடத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (16) புதன்கிழமை […]

Continue Reading

மரணச் சான்றிதழையோ, இழப்பீடுகளையோ உறவுகள் எதிர்பார்க்கவில்லை சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டு

கொழும்பு, மார்ச் 17 பெரும்பாலான உறவுகள் மரணச் சான்றிதழையோ, இழப்பீட்டையோ எதிர்பார்க்கவில்லை என சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய பிராந்திய ஆய்வாளரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான தியாகி ருவன்பத்திரன தெரிவித்தார். காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தில் ‘காணக் கிடைக்கவில்லை’ எனும் சான்றிதழைப் பெற்றுக்கொண்டவர்களின் குடும்ப மீள்வாழ்விற்காக ஒருமுறை மாத்திரம் ஒரு லட்சம் ரூபாயைச் செலுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. அரசாங்கத்தின் குறித்த முடிவு தொடர்பாக தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், உள்ளக மற்றும் சர்வதேச ரீதியில் அரசாங்கம் […]

Continue Reading

தமிழரின் உயிர் ஆடு, மாடுகளைவிடக் கேவலமானதா? முன்னாள் எம்.பி. சுரேஷ் சீற்றம்

யாழ்ப்பாணம், மார்ச் 17 இலங்கையில் ஆடு, மாடுகளுக்கான விலையே இலட்சக் கணக்கில் இருக்கின்றபோது ஒரு மனித உயிருக்கு ஒரு இலட் சம் ரூபா நட்டீடு என்பதிலிருந்து சிங்கள ஆளும் வர்க்கத்தினர் தமிழ் மக்களை எவ்வளவு தூரம் ஒரு கிள்ளுக்கீரை போல் எடைபோடுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றது. இவ்வாறு ஈழமக்கள் புரட்சி கர விடுதலை முன்னணியின் தலைவர் க. சுரேஷ் பிறேமச் சந்திரன் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக் கையின் முழுமையான விவரம் […]

Continue Reading