யாழில் இடம்பெற்ற மர்ம உயிரிழப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

யாழ்ப்பாணம்,ஒக் 14 யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை, வேம்படி சந்திக்கு அண்மையில் புதிதாக அமைக்கப்படும் கட்டடத் தொகுதியில் சடலமாக மீட்கப்பட்டவர் நிலைதடுமாறு படிக்கட்டுகளில் வீழ்ந்து தலையில் ஏற்பட்ட படுகாயம் காரணமாகவே உயிரிழந்துள்ளார் என விசாரணை மூலம் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் சம்பவ இடத்தில் இடம்பெற்ற விசாரணையின் போது அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி காணொளி பதிவின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் பதிவாகிய சிசிரிவி காணொளி பதிவை சான்றுப்பொருளாக நீதிமன்றில் முற்படுத்த உத்தரவிட்ட […]

Continue Reading

தமிழ் புலம்பெயர் தலைவர்களுடன் கலந்துரையாடுவதாக இலங்கை அரசாங்கம் அறிவிப்பு!

கொழும்பு,ஒக் 14 எந்தவொரு சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கும் பதிலாக ‘உள்நாட்டு பொறிமுறை’ தொடர்பாக தமிழ் புலம்பெயர் தலைவர்களுடன் கலந்துரையாடுவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. நீதி அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் இதனை நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக விரைவில் புலம்பெயர்ந்த தமிழ் தலைவர்களுடன் இலங்கை ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கான திட்டம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த விவாதம் வெற்றியடையும் பட்சத்தில், உள்நாட்டுப் பொறிமுறையின் மூலம் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்றும் […]

Continue Reading

கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

இந்தியா,ஒக் 14 கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகம் “வாழ்நாள் சாதனையாளர்” விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார். பிசினஸ் குளோபல் இன்டர்நேஷனல் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட “வாழ்நாள் சாதனையாளர்” விருது வழங்கி வைக்கும் விழா நாளை (15) சனிக்கிழமை மாலை 3.00 மணியளவில் இந்தியா – சென்னையிலுள்ள சஃபாரி கிறான்ற் விடுதியில் இடம்பெறவுள்ளது. இந்தப் பாராட்டு விழாவில் ஆசியாவின் பல பாகங்களிலும் இருந்து சமூக சேவை ஊடாக கல்வி, சுகாதார மற்றும் பல துறைகளில் சேவையாற்றியவர்களுக்கு இந்த […]

Continue Reading

முன்னாள் ஜனாதிபதிக்கு சீனத்தூதுவர் அளித்துள்ள வாக்குறுதி

கொழும்பு,ஒக் 14 சீனாவின் கொவிட்-19 பொதுக் கொள்கை அனுமதிக்கும் பட்சத்தில் சீன சுற்றுலாப் பயணிகள் விரைவில் இலங்கைக்கு வரத் தொடங்குவார்கள் என இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong இன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு உறுதியளித்துள்ளார். சீனத் தூதுவர் மகிந்த ராஜபக்சவை இன்று மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார், அங்கு இருவரும் இலங்கைக்கும் சீன மக்கள் குடியரசிற்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடினர். கலந்துரையாடலின் போது, ​​சீனாவின் சோசலிச கட்டுமானத்தில் […]

Continue Reading

உக்ரைன் படை தொடர் தாக்குதல்: கெர்சன் பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றும் ரஷியா

கீவ்,ஒக் 14 உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கிய நிலையில் 8 மாதங்கள் ஆகியும் போர் முடிவில்லாமல் நீண்டு வருகிறது. இதனிடையே, போரில் உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமித்த லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய 4 பிராந்தியங்களை தன்னுடன் இணைத்து கொள்ள திட்டமிட்ட ரஷியா, இதுதொடர்பாக பொது வாக்கெடுப்பை நடத்தியது. பின்னர் இந்த பொது வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக கூறி அந்த 4 பிராந்தியங்களையும் ரஷிய தன்னுடன் இணைத்து கொண்டது. ஆனால் சர்வதேச […]

Continue Reading

பும்ராவுக்கு பதிலாக முகமது ஷமி இந்திய அணியில் சேர்ப்பு: பிசிசிஐ அறிவிப்பு

புதுடெல்லி, ஒக் 14 இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்பட 16 அணிகள் பங்கேற்கும் 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் வருகிற 16-ந்தேதி முதல் நவம்பர் 13-ந்தேதி வரை நடக்கிறது. இதில் நேரடியாக சூப்பர்12 சுற்றில் கால்பதிக்கும் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் வருகிற 23-ந்தேதி பாகிஸ்தானுடன் மெல்போர்னில் பலப்பரீட்சை நடத்துகிறது. இதையடுத்து உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு சென்றனர். பெர்த் […]

Continue Reading

திருகோணமலையில் அடைமழை: வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்

திருகோணமலை,ஒக் 14 திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர், தோப்பூர், கிண்ணியா, சம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மாலை முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக பல வீடுகள் ,வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.அத்தோடு பல வீதிகளில் வெள்ளநீர் நிறைந்து காணப்படுவதால் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு மத்தியில் பிரயாணங்களை மேற்கொண்டு வருவதையும் அவதானிக்க முடிகின்றது. தொடர்ந்தும் திருகோணமலை மாவட்டத்தில் அடைமழை பெய்து வருகின்றது.

Continue Reading

லங்கா பிரீமியர் லீக் தொடர் டிசம்பரில்

கொழும்பு,ஒக் 14 3 ஆவது லங்கா பிரீமியர் லீங் போட்டித் தொடர் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Continue Reading

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான நலன்புரி வசதிகள்

கொழும்பு,ஒக் 14 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் ‘ எவரையும் கைவிடாதீர்கள்’ எனும் தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நலன்புரி நன்மைகள் திட்டத்தின் கீழ் நன்மைகள் தேவைப்படும் குடும்பங்கள் மற்றும் தனி ஆட்களை அடையாளம் காண்பதற்கான விண்ணப்ப இறுதித் திகதி ஒக்டோபர் 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த திகதி அக்டோபர் 15 என அறிவிக்கப்பட்டிருந்து. இந்தநிலையில் நிவாரணங்களை எதிர்பார்ப்போர் மற்றும் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கத் தவறியவர்கள், இந்தக் காலகட்டத்தில் விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம். சமுர்த்தி, […]

Continue Reading

பிரித்தானிய நிதியமைச்சர் குவாசி குவார்டெங் பதவி நீக்கம்

பிரித்தானியா,ஒக் 14 ஆறு வாரங்களுக்கும் குறைவான காலத்துக்கு பதவி வகித்த நிலையில் பிரித்தானிய நிதியமைச்சர் குவாசி குவார்டெங் பதவி நீக்கப்பட்டுள்ளார். அரசாங்கத்தின் பாரிய வரிக் குறைப்புக்கள் நிதிச் சந்தைக் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்தே இது நிகழ்ந்திருக்கிறது. 1970ஆம் ஆண்டுக்கு பின்னர் பிரித்தானியாவில் குறுகிய காலத்துக்கு பதவி வகித்த நிதியமைச்சராக குவாசி குவார்டெங் கருதப்படுகிறார். மேலும் நாடு வாழ்க்கைச் செலவு நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பல மாதங்களில் பிரித்தானியாவின் நான்காவது நிதி அமைச்சராக அவர் பதவி வகித்து வந்தார். […]

Continue Reading

கடவுள் எனக்கூறி பக்தர்களிடம் பல மில்லியன் டொலர்கள் மோசடி செய்த பெண்

சிங்கப்பூர்,ஒக் 14 தன்னை கடவுள் அவதாரம் என அறிவித்துக்கொண்டு, மக்களிடம் பல மில்லியன் டொலர்களை மோசடி செய்ததுடன் அவர்களை கொடூரமான வகையில் துன்புறுத்தியதாகவும் சிங்கப்பூரைச் சேர்ந்த பெண்ணொருவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. வூ மே ஹோ எனும் 52 வயதான பெண், தன்னை இந்திய கடவுளொன்றின் அவதாரம் எனக் கூறிக்கொண்டராம். இதன் மூலம் தனது பக்தர்களிடம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தனது பக்தர் ஒருவரிடம் 3.5 மில்லியன் டொலர்களை காணிக்கையாக வூ மே ஹோ […]

Continue Reading

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக அனைத்து கட்சிகளும் எழ வேண்டும்: சிவாஜிலிங்கம்

யாழ்ப்பாணம்,ஒக் 14 அனைத்து கட்சிகளும் எவ்வித பேதமின்றி இணைந்து போதைப்பொருள் பாவனைக்கு எதிராக செயற்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வல்வெட்டித்துறையில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,போதைவஸ்து பாவனை மற்றும் திருட்டு சம்பவங்கள் என்பன தற்போது அதிகரித்து காணப்படுகின்றது. இதனை கட்டுப்படுத்தஅனைத்து கட்சிகளும் எவ்வித பேதமின்றி இணைந்து போதைப்பொருள் பாவனைக்கு எதிராக செயற்பட வேண்டும். விழிப்புக்குழுக்களை உருவாக்கி செயற்பட வேண்டும். […]

Continue Reading