பிரேமதாசவின் 29 ஆவது வருட நினைவு தினம் இன்று அனுஷ்டிப்பு

கொழும்பு, மே 01 மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 29 ஆவது நினைவு தினம் இன்று (01) அனுஷ்டிக்கப்பட்டது. புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் உள்ள மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஹேமா பிரேமதாச, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பலர் நிகழ்விடத்திற்கு வந்திருந்தனர்.

Continue Reading

ஜனாதிபதி எடுக்கும் எந்த முடிவுக்கும் இணங்கத் தயார்: பிரதமர்

கொழும்பு,மே 01 பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி எடுக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ளத் தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். பிரதமர் தனது நிலைப்பாட்டை ஞாயிற்றுக்கிழமை காலை ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக பிரதமர் அலுவலகத்தின் உயர் அதிகாரி ஒருவர் எமது செய்திக்கு தெரிவித்தார். சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை நியமிப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இராஜினாமா செய்யுமாறு கோரிய மகாநாயக்க தேரர்களின் பிரேரணையை உடனடியாக அமுல்படுத்துமாறு பௌத்த பிக்குகள் குழு நேற்று ஜனாதிபதி மற்றும் […]

Continue Reading

மசகு எண்ணெய் பெறுவதில் இலங்கை ஆர்வம்

கொழும்பு,மே 01 உக்ரைனுடனான மோதல் காரணமாக சர்வதேச தடைகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும் ரஷ்யாவிடம் இருந்து மசகு எண்ணெய்யை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக் தொடர்பில் இலங்கை அவதானம் செலுத்தியுள்ளது. வெளிநாட்டு கையிருப்பில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் குறைந்த விலையில் மசகு எண்ணெய்யை பெற்றுக் கொள்வதன் மூலம் செலவை குறைக்க முடியும் என நம்பப்படுகிறது. இது குறித்து இலங்கை கனியவள கூட்டுதாபனம் முன்வைத்துள்ள யோசனை தொடர்பில் திறைசேரி அவதானம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் அமெரிக்காவின் பொருளாதார தடைக்குள்ளாகியுள்ள ரஷ்யாவுடன் […]

Continue Reading

தனியார் பஸ் சேவைகள் இன்றைய தினம் மட்டுப்பாடு

கொழும்பு, மே 01 நாடு முழுவதும் இன்றைய தினம் மட்டுப்படுத்தப்பட்டளவு பஸ்களே சேவையில் ஈடுபடும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை, நாடு பூராகவும் 60 சதவீதமான பஸ்கள் இன்றைய தினம் சேவையில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய வார இறுதி விடுமுறைக்கு அமைவாக இ.போ.ச பஸ்கள் வழமைப் போல் சேவையில் ஈடுபடும் என இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி முகாமையாளர் பண்டுக சுவர்ணஹங்ச தெரிவித்துள்ளார்.

Continue Reading

முச்சக்கரவண்டி பஸ்ஸுடன் மோதியதில் மூவர் பலி

மனம்பிட்டிய, மே 01 மனம்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முச்சக்கரவண்டி ஒன்று பஸ் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன் மற்றும் மனைவி உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் பஸ் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மனம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading

மதுபானசாலைகளுக்கு பூட்டு

கொழும்பு, மே 01 மே தின பேரணிகளை அண்மித்த பகுதிகளில் இருக்கும் அனைத்து மதுபானக் கடைகளையும் இன்று (1) நண்பகல் முதல் நள்ளிரவு வரை மூடுமாறு கலால் திணைக்களம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

அலரிமாளிகைக்கு முன் நடுவீதியில் மக்கள் ஆர்ப்பாட்டம்

கொழும்பு,மே 01 நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு வேண்டி அலரிமாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியின் நடுவே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அலரிமாளிகைக்கு அருகில் வீதியோர போராட்டக் கூடாரங்களை பொலிஸார் அகற்றியதையடுத்து, அவர்கள் இவ்வாறு நடுவீதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading

முதல் தடவையாக நாட்டை அரசாங்கம் வங்குரோத்துக்கு தள்ளியுள்ளது: சஜித்

கொழும்பு,மே 01 சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையானது மிகவும் துயரமான மற்றும் நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள தருணத்தில் மே தினத்தை கொண்டாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள அவர், தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளை உறுதி செய்வதற்காக 136 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட மாபெரும் போராட்டத்தின் தொடக்கத்தை நினைவுகூரும் சர்வதேச தொழிலாளர் தினம் இன்று மே தினம் என்று அழைக்கப்படுகிறது […]

Continue Reading

டொலர் நெருக்கடி: சாரதி அனுமதிப்பத்திர அட்டை விநியோகம் நிறுத்தம்

கொழும்பு,மே 01 நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி காரணமாக சாரதி அனுமதிப்பத்திர அட்டை விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்துள்ளது. சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான உரிய பரீட்சைகளில் சித்தியடைந்த சுமார் 300,000 பேருக்கு இதுவரை சாரதி அனுமதிப்பத்திர அட்டைகள் வழங்கப்படவில்லை என அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் ஜெனரல் அலுவலகம் மாதத்திற்கு சுமார் 60,000 சாரதி அனுமதி பத்திரங்களை வழங்குவதாகவும், டிசம்பர் 2021 முதல் புதிய சாரதி அனுமதி […]

Continue Reading

இந்தியாவில் சற்று குறைந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 3,324 பேருக்கு தொற்று

புதுடெல்லி,மே 01 நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 3,377 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், கடந்த 24 மணி நேரத்தில் 3,688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று புதிதாக 3,324 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 ஆயிரத்து 324 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி […]

Continue Reading

பசுக்களுக்கு தனி ஆம்புலன்ஸ் சேவை: அசாமில் அதிரடி திட்டம்

அசாம்,மே 01 அசாம் மாநிலத்தில் முதல் முறையாக நோய் வாய்ப்பட்ட பசு மாடுகளை காக்கும் நோக்கில் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது. திப்ருகர் மாவட்டத்தில் இந்த சேவை தொடங்கப்பட்டிருக்கிறது. கோபால் கவுசாலா என்கிற பசுக்கள் நல அமைப்பால் நடத்தப்படும் இந்த சேவையை திப்ருகர் துணை ஆணையர் பிஸ்வஜித் பெகு தொடங்கி வைத்தார். இதுகுறித்து கோபால் கவுசாலா தலைவர் நிர்மல் பெரியா கூறுகையில், “வடக்கு கிழக்கு மாநிலங்களின் முதல் பசு ஆம்புலன்ஸ் சேவை. பசுக்களை அழைத்து வருவதில் காப்பக நிர்வாகிகள் […]

Continue Reading

பொலிஸாரின் வீதித் தடைகள்: உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு தாக்கல்

கொழும்பு,மே 01 சட்ட கட்டமைப்பிற்கு உட்பட்டு போராட்டம் நடத்தும் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பொலிஸார் வீதி தடைகளை அமைத்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த ஷெனால் ஜயசேகர என்ற நபரால் முன்வைக்கப்பட்ட மனுவில், பொலிஸ்மா அதிபர், கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, வீதி அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். பொதுமக்களின் போராட்டங்களுக்கு […]

Continue Reading