கொரோனா தொற்றால் 26 பேர் பலி

கொழும்பு, பெப் 7: கொரோனா தொற்றால் கடந்த 24 நேரத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதன் மூலம் நாட்டில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,621 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்கள் 17 ஆண்கள், 9 பெண்கள் ஆகும். இறந்தவர்களில் 6 பேர் 30-59 வயதுக்கு உட்பட்டவர்கள். இருவர் 30 வயதுக்கு உட்பட்டவர்கள், மீதமுள்ள 18 பேர் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் ஆகும்.

Continue Reading

இன்று, நாளை மின்வெட்டு இல்லை: PUCSL

கொழும்பு, பெப் 7: மின்வெட்டுதொடர்பாக இலங்கை மின்சார சபை இதுவரை எவ்வித கோரிக்கையும் முன்வைக்கவில்லை. எனவே, இன்றும், நாளையும் மின்வெட்டு அமல்படுத்தப்படாது என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக PUCSL இன் தலைவர் ஜானக ரத்நாயக்க கூறுகையில் “‘தற்போதுள்ள மின் கொள்ளளவைக் கொண்டு திங்கள்கிழமைக்கு தேவையான மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய முடியும், எனவே மின்வெட்டை அமல்படுத்தப்பட வேண்டிய தேவை இல்லை. நாட்டு மக்கள் தமது மின்சார பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். […]

Continue Reading

அரச நிறுவனங்களின் செலவுகளைக் குறைக்குமாறு நிதியமைச்சகம் உத்தரவு

கொழும்பு, பெப் 7: அரச நிறுவனங்களில் செலவுகளைக் குறைக்குமாறு அனைத்து அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் விசேட உத்தரவு ஒன்றை நிதி அமைச்சகம் அனுப்பியுள்ளது. மேலும், வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள திட்டங்களைத் தவிர வேறு எந்த திட்டங்களுக்கும் நிதி கோருவதைத் தவிர்க்குமாறு அனைத்து அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு நிதியமைச்சு அறிவுறுத்தியுள்ளது. மேலும், டிசம்பர் 21ஆம் தேதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையிலும், ஜனவரி 12ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசின் செலவினங்களைக் கட்டுப்படுத்தி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையிலும் உள்ள உத்தரவுகளை […]

Continue Reading

அருந்திக பெர்னாண்டோவின் மகன் பிணையில் விடுதலை

கொழும்பு, பெப் 7: ராகம மருத்துவபீட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் மகன் ரண்டில ஜெஹான் பெர்னாண்டோ உள்ளிட்ட 9 பேர் திங்கள்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ராகம மருத்து பீட மாணவர்களின் விடுதிக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத குழுவொன்று கடந்த பெப்ரவரி முதலாம் திகதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், 4 மாணவர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில், […]

Continue Reading

கொரோனா நோயாளிகள் அதிகரிப்பால் மருத்துவமனைகளில் இடம் இல்லை: ஹேமந்த ஹேரத்

கொழும்பு, பெப் 7: இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ள காரணத்தால், மருத்துவமனைகளில் இடவசதி இல்லாமல் படுக்கைகள் நிரம்பியுள்ளன என்று பொதுச் சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். இது தொடர்பாக ஆங்கில செய்திச் சேவை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் ” கடந்த இரண்டு வாரங்களாக தினசரி கொரோனா பாதிப்பை பார்க்கும்போது, ​​கொரோனா பாதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்திருப்பது புலப்படும். இலங்கை மருத்துவ மனைகளில், கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட […]

Continue Reading

எட்டு முன்னாள் எம்பிக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

கொழும்பு, பெப் 7: பதவிக்காலம் முடிந்த பிறகும், அனுமதியின்றி உத்தியோகபூர்வ இல்லங்களில் தங்கியிருந்ததற்கான, அபராதத் தொகையை செலுத்தத் தவறிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எட்டு பேர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள நாடாளுமன்ற நிர்வாகத் திணைக்களம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அரசு மூத்த அதிகாரி கூறுகையில் “இந்த எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த பிறகும், அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை காலி செய்யாமல் அதில் தொடர்ந்தும் தங்கியிருந்தனர். மேலும், இவர்கள் […]

Continue Reading

ஜி.எல் பீரிஸ், ஜெய்சங்கர் சந்திப்பு

டெல்லி, பெப் 7: இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியா சென்றுள்ள இலங்கை வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் திங்கள்கிழமை டெல்லியில் உள்ள இந்திய வெளிவிவகார அமைச்சகத்தில், இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்து இரு தரப்பு உறவுகள் தொடர்பாகப் பேசினார். இதன்போது, மீனவர் பிரச்சினை உள்பட இருதரப்பு உறவுகள் தொடர்பான பல்வேறு விஷயங்கள் கலந்துரையாடப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பில், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸுடன் இந்தியாவுக்கான இலங்கை தூதர் மிலிந்த மொரகொட, […]

Continue Reading

குடிநீர் போத்தல்களில் விலை அதிகரிப்பு

கொழும்பு, பெப் 7: குடிநீர் போத்தல்களின் அதிகபட்ச சில்லறை விலையை அரசாங்கம் கடந்த வாரம் நீக்கியதை அடுத்து, அதிகரித்த புதிய தண்ணீர் போத்தல்களின் விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இலங்கை தண்ணீர் போத்தல் சங்கம் இந்த விலையை திங்கள்கிழமை அறிவித்துள்ளது. அதன்படி, புதிய தண்ணீர் போத்தல் விலைகள்- 500ML – ரூ.50 1லி – ரூ.70 1.5லி – ரூ.90 5லி – ரூ.200 7லி – ரூ.240 ஆக உள்ளன.

Continue Reading

மேற்பார்வை மூலமே கௌரவமான ஊடக கலாசாரத்தை உருவாக்க முடியும்: டலஸ் அழகப்பெரும

கொழும்பு, பெப் 7: கௌரவமான ஊடக கலாசாரத்திற்கு தணிக்கைகள் அல்ல. முறையான மேற்பார்வையே அவசியமானது என்று தகவல் ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார் மேலும், மக்களின் கருத்தை கையாளும் ஊடகங்களின் பலம் அரசியல் நிறுவனங்களின் பலத்தை விட மிக அதிகம் என்றும், அந்த பெரும் பலத்துடன் ஊடகங்களுக்கு பெரிய பொறுப்பும் இருப்பதாகவும் ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார். மேலும் தற்போதைய ஊடகங்களை அர்த்தமுள்ள, தரமான மற்றும் ஒழுக்கமான திசையை நோக்கி செலுத்துவதற்கு, சில சட்ட […]

Continue Reading

சைப்பிரஸிடம் இருந்து 4,50,000 பீப்பாய் மசகு எண்ணெய் கொள்வனவுக்கு அமைச்சரவை அனுமதி

கொழும்பு, பெப் 7: சைப்ரஸ் நாட்டின் டெரா கேவிஸ் நிறுவனத்திடமிருந்து, 4 இலட்சத்து 50 ஆயிரம் பீப்பாய் மசகு எண்ணெய் கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. குறித்த நிறுவனம் சமர்ப்பித்த விலை மனுக் கோரலின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.டொலர் பிரச்சினை காரணமாக எரிபொருள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் கொடுப்பனவு கிடைக்கும் வரையில் எரிபொருளை விநியோகிக்காது காத்திருக்கும் நிலையை அண்மைய நாட்களில் அவதானிக்க முடிகின்றது. எரிபொருள் கொள்வனவிற்காக இலங்கைக்கு வருடாந்தம் 400 முதல் 500 ட்ரில்லியன் […]

Continue Reading

பதவி ஏற்ற ஒரு வாரத்திற்குள் ராஜினாமா செய்த பெரு பிரதமர்

பியூனோஸ் அயர்ஸ், பெப் 7: பெரு நாட்டின் பிரதமர் ஹெக்டர் வலர் பின்டோ பதவி ஏற்ற ஒரு வாரத்திற்குள் ராஜினாமா செய்தார். தென் அமெரிக்க நாடான பெருவின் பிரதமராக ஹெக்டர் வலர் பின்டோ (வயது 63), கடந்த 1-ஆம் திகதி பதவி ஏற்றார். ஆனால் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும், அவர் 2016-ம் ஆண்டு குடும்ப வன்முறையில் ஈடுபட்டதாக அவரது மனைவியும், மகளும் புகார் அளித்துள்ளதாகவும் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. இதையெல்லாம் அவர் மறுத்தார். இந்த […]

Continue Reading

இந்தியாவில் 1 லட்சத்தை விடக் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

புதுடெல்லி, பெப் 7: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 83,876 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 1,07,474 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று 83,876 ஆக குறைந்துள்ளது. இதன்மூலம், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,21,88,138 லிருந்து 4,22,72,014 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 895 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். நேற்று 865 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் இன்று 895 ஆக உயர்ந்துள்ளது. […]

Continue Reading