ஐ.நா. அமர்வில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட 7 நாடுகளின் வரைபு

சுவிஸ், செப் 14 ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிள் 51வது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக வரைபொன்று முன்மொழியப்பட்டுள்ளது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தும் நோக்கில் 18 முன்மொழிவுகள் குறித்த வரைபில் சேர்க்கப்பட்டுள்ளன. அமெரிக்கா, பிரித்தானியா, கனடா மற்றும் ஜேர்மனி உள்ளிட்ட ஏழு நாடுகளால் இந்த வரைபு தயார் செய்யப்பட்டுள்ளது.

Continue Reading

போலி நுழைவுச்சீட்டு

கொழும்பு, செப் 14 தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடமாக நிர்மாணிக்கப்பட்ட தாமரை கோபுரத்தின் செயற்பாடுகளை நாளை முதல் பொதுமக்களின் பாவனைக்காக திறக்கப்படவுள்ள நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களின் ஊடகபோலி நுழைவுச்சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகஇலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

Continue Reading

யாழில் 11 வாள்களுடன் 22 வயதான இளைஞன் கைது

யாழ், செப் 14 வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துணவி பகுதியில் 11 வாள்களுடன் விசேட அதிரடிப்படையினரால் 22 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட் துணவி பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு இந்தக் கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துணவி பகுதியில் வாள்களை பயன்படுத்தி கட்டுச் சொல்லும் கோவில் ஒன்றில் வாள்களை உடமையில் வைத்திருப்பதாக யாழ்ப்பாணம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த […]

Continue Reading

அமைச்சுப் பதவி வேண்டாம்: ரணிலிடம் நாமல் கோரிக்கை

கொழும்பு, செப் 14 விரைவில் வழங்கப்படவுள்ள அமைச்சரவை அமைச்சுப் பதவிகளில் தனக்கு அமைச்சுப் பதவி வழங்க வேண்டாம் என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். நாமல் ராஜபக்‌ஷவுக்கு அமைச்சுப் பொறுப்பு வழங்க வேண்டுமென பொதுஜன  பெரமுன கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையிலேயே தனக்கு அமைச்சு பொறுப்பை வழங்க வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நாமல் ராஜபக்‌ஷ இவ்வாறான வேண்டுகோளை விடுத்துள்ளார்.

Continue Reading

உணவு நெருக்கடி அடுத்த வருடமும் நீடிக்கும்: ஜனாதிபதி எச்சரிக்கை

கொழும்பு, செப். 14: மக்கள் வருமானத்தை இழந்துள்ளனர். இதனால், நாட்டில் ஒரு பகுதியினர் உணவின்றி தவிக்கின்றனர். இந்த நெருக்கடி அடுத்த வருடமும் நீடிக்கும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். மேலும், நாட்டில் உணவு மற்றும் போசாக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தேசிய திட்டமொன்று நடைமுறைப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்கை உறுதிப்படுத்தும் கிராமிய பொருளாதார மறுமலர்ச்சி நிலையங்களை வலுவூட்டுவதற்கான பல்துறை ஒருங்கிணைந்த பொறிமுறையொன்றை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்வில் […]

Continue Reading

புதிய சமுர்த்தி பயனாளிகளுக்கான அறிவித்தல்

கொழும்பு, செப் 14 சமுர்த்தி உள்ளிட்ட அரசாங்கத்தின் சலுகைகளை எதிர்பார்க்கும் மக்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி சமுர்த்தி, முதியோர், ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக உதவித்தொகை கோரும் மக்கள் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்கள் ஊடாக பிரதேச செயலகங்களில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி தெரிவித்தார். சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கிராம உத்தியோகத்தர் ஆகிய […]

Continue Reading

கரையோர மார்க ரயில் சேவை பாதிப்பு

கொழும்பு, செப் 14 சமிக்ஞை கோளாறு காரணமாக கரையோர மார்கத்தினூடான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது. களுத்துறை பிரதேசத்தில் இன்று (14) காலை இந்த சமிக்ஞை கோளாறு ஏற்பட்டுள்ளதாக அத்திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

Continue Reading

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60ஆக மட்டுப்படுத்தும் சுற்றறிக்கை இன்று வெளியீடு

கொழும்பு, செப் 14 அரச உத்தியோகத்தர்களின் ஓய்வுபெறும் வயதை 60ஆக மட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கான சுற்றறிக்கை இன்று (புதன்கிழமை) வெளியிடப்படவுள்ளது. சுற்றறிக்கை வெளியானதன் பின்னர், அரச ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக மட்டுப்படுத்தப்படும் என அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே தெரிவித்தார். இதேவேளை, தமது சேவை தொடர்பான ஓய்வுபெறும் வயதை 60 ஆக மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருவதாக அரச நிறுவனங்களின் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர். அப்படியானால், நீர்ப்பாசன திணைக்களம், ரயில்வே திணைக்களம் போன்ற […]

Continue Reading

இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது: பில் கேட்ஸ் பாராட்டு

வாஷிங்டன், செப் 14 மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், ஒரு தனியார் நிகழ்ச்சியில் இந்தியாவின் கொரோனா தடுப்பூசி திட்டத்தை பாராட்டினார். டிஜிட்டல் பணம் செலுத்துதல், சுகாதாரம், தடுப்பூசி இயக்கம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்றவற்றில் வளர்ச்சிக்கான மோடியின் முயற்சிகளை பில் கேட்ஸ் பாராட்டி பேசினார். கொரோனா காலத்தில் இந்தியாவில் பல விஷயங்கள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரித்திருப்பது, மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார். மேலும் கொரோனா பேரிடர் காலத்தில் இந்தியா […]

Continue Reading

ஆஸ்திரேலியாவில் செல்லப் பிராணியாக வளர்த்த கங்காரு தாக்கியதில் முதியவர் பலி

சிட்னி, செப்.14 ஆஸ்திரேலியாவில் மேற்கு ஆஸ்திரேலியா மாகாணத்தின் தலைநகர் பெர்த்தில் இருந்து 400 கி.மீ. தொலைவில் உள்ள ரெட்மாண்ட் நகரில் வசித்து வந்த 77 வயதான முதியவர் ஒருவர் வனவிலங்கான கங்காருவை செல்லப்பிராணியாக வளர்த்து வந்தார். இந்த நிலையில் வீட்டின் அருகில் உள்ள தோட்டத்தில் நின்றுகொண்டிருந்த அந்த முதியவரை கங்காரு பயங்கரமாக தாக்கியதாக தெரிகிறது. இதில் அந்த முதியவர் பலத்த காயம் அடைந்த நிலையில், இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரின் உறவினர்கள் அவரை ஆஸ்பத்திரியில் சேர்க்க ஆம்புலன்சை வரவழைத்தனர். […]

Continue Reading

ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள்கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

லண்டன், செப் 14 இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் உடல், ஓக் மரத்தைக்கொண்டு தயாரிக்கப்பட்ட சவப்பெட்டியில் வைக்கப்பட்டு, அவர் உயிர்பிரிந்த பால்மோரல் கோட்டையில் இருந்து கடந்த 11-ந்தேதி, ஸ்காட்லாந்தின் தலைநகரான எடின்பரோ நகருக்கு கொண்டு செல்லப்பட்டது. முதலில் உடல் அங்குள்ள ஹோலிரூட் ஹவுஸ் மாளிகையில் வைக்கப்பட்டது. அங்கு அரச குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ் தேவாலயத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டிக்கு […]

Continue Reading

போதைப்பொருள் நுகர்ந்து கொண்டிருந்த நால்வர் கைது

யாழ்,செப் 14 யாழ்ப்பாணம் மானிப்பாய் சுதுமலைப் பகுதியில் வைத்து போதைப் பொருளை நுகர்ந்து கொண்டிருந்த நான்கு பேரை இன்று (14) அதிகாலை 2 மணியளவில் யாழ் மாவட்ட பொலிஸார் கைது செய்ததுடன், அவர்கள் வசமிருந்த 61 கிராம் போதைப் பொருளையும் கைப்பற்றினார். யாழ் மாவட்ட பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் கைப்பற்றப்பட்ட போதை பொருளும் மானிப்பாய் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் மூவர் யாழ்ப்பாணத்தையும் ஒருவர் கொழும்பையும் சேர்ந்தவரென தெரியவருகிறது. கைது செய்யப்பட்டவர்கள் போதைப்பொருள் […]

Continue Reading