பாடசாலை அதிபருடன் தகராறு: மூவர் கைது

யாழ்ப்பாணம், ஏப் 1 அராலி சரஸ்வதி வித்தியாலயத்தின் அதிபருடன் தகராறில் ஈடுபட்ட மூவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நெல்லியடியைச் சேர்ந்த ஒருவர் வட்டுக்கோட்டையில் உள்ள அவரது உறவினர் வீட்டில் கடந்த சில நாட்களாக வசித்து வந்திருக்கிறார். அந்த நபரும் வட்டுக்கோட்டையை சேர்ந்த இருவருமென மொத்தமாக மூவர் குறித்த பாடசாலையின் மதில் பாய்ந்து உள்ளே சென்று அதிபருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனை அறிந்த பழைய மாணவர்கள் அவ்விடத்திற்கு வந்தவேளை இருவர் […]

Continue Reading

மிரிஹானை சம்பவம் குறித்து சனத்ஜெயசூரிய கருத்து

கொழும்பு, ஏப் 1 அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுங்கள்,பொதுச்சொத்துக்களிற்கு சேதம் விளைவிக்காதீர்கள், உங்கள் சகோதர சகோதரியை காயப்படுத்தாதீர்கள்,இது கலவரம் தொடர்பானது இல்லை, இது எது சரியானதோ அதற்காக குரல் கொடுப்பது என வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்திற்கு அப்பாவி மக்களின் துயரங்களும் நியாயமற்ற ஒடுக்குமுறையுமே காரணம் என இலங்கை கிரிகெட் அணியின் முன்னாள் தலைவர் சனத்ஜெயசூரிய சமூக ஊடக பதிவொன்றில் கூறியுள்ளார். மேலும் அவர், கடந்த ஒரு மாதத்தில் நாங்கள் இலங்கையர்கள் ஒன்றாக அமைதியாக துன்பங்களை அனுபவித்தோம். எல்லாம் மற்றும் அனைவருக்கும் […]

Continue Reading

புத்தாண்டுக்கு எரிவாயு விநியோகம் இல்லை: லாஃப்ஸ் நிறுவனம் தெரிவிப்பு

கொழும்பு, ஏப் 1 தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் சமையல் எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. இதே வேளை 5,500 மெட்ரிக் டன் லாஃப்ஸ் சமையல் எரிவாயு கப்பல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அந் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Continue Reading

மீண்டும் ஊரடங்கு உத்தரவு

கொழும்பு, ஏப் 1 மேல்மாகாணத்தில் இன்று நள்ளிரவு முதல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சனிக்கிழமை காலை 6 மணி வரையில் இவ்வாறு ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

காபந்து அரசாங்கமொன்றை அமைக்க வேண்டும்: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்து

கொழும்பு, ஏப் 1 அமைச்சரவையைக் கலைத்து அனைத்து அரசியல் கட்சிகளின் பங்களிப்புடன் காபந்து அரசாங்கமொன்றை அமைக்கவும், எரிபொருள் மற்றும் மின்சாரம் தொடர்பான பிரச்சினைகளை உடனடியாக தீர்க்கவும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, தற்போதைய அமைச்சரவையைக் கலைத்து காபந்து அரசாங்கமொன்றை அமைக்குமாறு அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சிகள் ஒன்றிணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் […]

Continue Reading

கொவிட்-19 தொற்று இன்று 150 பேருக்கு உறுதி

கொழும்பு, ஏப் 1 கொவிட் தொற்று உறுதியான மேலும் 150 பேர் வெள்ளிக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 661,781ஆக அதிகரித்துள்ளது.

Continue Reading

இலங்கை மக்களை வாட்டும் பிரச்சினைக்கு, தீர்வு காண முடியாததன் விளைவே போராட்டமாக வெடித்தது: ரணில் விக்ரமசிங்க

கொழும்பு, ஏப் 1 மிரிஹானவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்ட ரணில் விக்ரமசிங்க பிரஜைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளிற்கு தீர்வு எதுவும் காணப்படாததே பெரும் ஆர்ப்பாட்டமாக வெடித்தது எனக் கூறியுள்ளார் மேலும் அவர் குறிப்பிடுகையில், அரசாங்கம் இந்த சம்பவங்களிற்கு பல தரப்பட்ட குழுக்கள்மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றது,ஆனால் அவர்கள் தங்கள் குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை முன்வைக்கவேண்டும். அரசாங்கம்இனவாத கருத்துக்களை தவிர்த்துக்கொள்ளவேண்டும்,அதேவேளை யார் இந்த வன்முறைகளிற்கு காரணம் என்பதை வெளிப்படுத்தவேண்டும். இது இனவாத சம்பவமில்லை,இது பயங்கரவாத சம்பவமில்லை,அவ்வாறான விதத்தில் கருத்துக்களை […]

Continue Reading

இந்தியாவின் முதற்கட்ட இறக்குமதி அரிசி, வரும் வாரம் முதல் இலங்கைக்கு

கொழும்பு, ஏப் 1 அடுத்தவாரம் இந்தியாவின் கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படும் முதலாவது கட்ட அரிசித் தொகை நாட்டை வந்தடையவுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. சுமார் 40,000 மெற்றிக் டன் அளவான நாடு, சம்பா, வெள்ளை அரிசி ஆகிய அரிசி வகைகள் நாட்டிற்கு கிடைக்கப்பெறவுள்ளன. அவற்றை உடனடியாக மக்களுக்கு சலுகை விலையில், விநியோகிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது

Continue Reading

சாதாரண போராட்டம் சிலரின் தூண்டுதலாலேயே சேதத்தை ஏற்படுத்தியது: கெஹெலிய ரம்புக்வெல்ல

கொழும்பு, ஏப் 1 சாதாரணமாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் சிலரின் தூண்டுதலின் மத்தியிலேயே பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் போராட்டமாக மாறியுள்ளது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவினை கோருவதற்காக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே இந்த சம்பவத்தின் பின்னணியில் அரசியல் அடிப்படை வாதிகளே செயற்பட்டுள்ளனர் என்பது தெளிவாகின்றது. அவ்வாறு […]

Continue Reading

இரண்டு பயிற்சி விமானங்கள் மோதியதில் மூவர் பலி

தென் கொரியா, ஏப் 1 தென் கொரியாவில் இரண்டு பயிற்சி விமானங்கள் நடுவானில் மோதிக் கொண்ட சம்பவம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இங்கு இம்மாதிரியான விபத்து நடைபெறுவது அரிதிலும் அரிதான ஒன்றானாலும் இவ் விபத்தில் மூன்று விமானிகள் உயிரிழந்ததாகவும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. தென்கிழக்கு நகரமான சச்சியோனில் உள்ள விமான தளம் அருகே விபத்து நடைபெற்றதாக விமானப் படை தெரிவித்துள்ளது. எத்தனை பேர் இறந்துள்ளனர் என்பது குறித்து ஆராய்ந்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று விமானிகள் உயிரிழந்ததாகவும் ஒருவர் […]

Continue Reading

ரஷ்ய எண்ணெய்க் கிடங்கு மீது தாக்குதல்

மாஸ்கோ, ஏப் 1 உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 37வது நாளாக நீடிக்கின்ற நிலையில் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள ரஷ்யா, இப்போது உக்ரைன் தலைநகர் கீவை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் வான் தாக்குதல் காரணமாக உக்ரைன் நகரங்களில் உட்கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.  உக்ரைன் படைகளும் சளைக்காமல் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்தவண்ணம் உள்ளனர்.  இந்நிலையில், உக்ரைன் எல்லையை ஒட்டிய ரஷ்ய பகுதியில் உள்ள எண்ணெய் கிடங்கு மீது வெள்ளிக்கிழமை […]

Continue Reading