குற்றச்சாட்டினை மறுத்த லிட்ரோ நிறுவனம்

கொழும்பு, செப் 13 சமையல் எரிவாயு இறக்குமதி  தொடர்பிலான ஒப்பந்தத்தின் போதும், சர்வதேசத்திடமிருந்து சமையல் எரிவாயுவினை கொள்வனவு செய்யும் போதும், இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ள உலக வங்கியின் நிதி மோசடி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம், சமையல் எரிவாயு கொள்வனவின் போது முழுமையாக வெளிப்படை தன்மையை பின்பற்றுகின்றது. அது மாத்திரமன்றி உலக வங்கியின் கண்காணிப்பின் […]

Continue Reading

யாழில் பெண்களின் கைப்பையுடன் நடமாடியவரிடமிருந்து நகைகளும் போதைப்பொருளும் மீட்பு

யாழ், செப் 13 யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு அருகில் பெண்கள் பாவிக்கும் கைப்பையுடன் நடமாடியவரிடம் இருந்து சுமார் 20 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகளும் , ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.  மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை பெண்கள் பாவிக்கும் கைப்பையுடன் (ஹேண்ட்பேக்) சந்தேகத்திற்கு இடமான முறையில் இளைஞன் ஒருவன் நடமாடியுள்ளான்.  அது தொடர்பில் தகவல் அறிந்த யாழ்ப்பாண பொலிஸ் புலனாய்வு பிரிவினர் சம்பவ இடத்திற்கு சென்று , சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய இளைஞனிடம் விசாரணைகளை […]

Continue Reading

போதைப்பொருள் கடத்தல் அதிகரிப்பு

கொழும்பு, செப் 13 நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நாளொன்றுக்கு 25 வீடுடைப்பு மற்றும் தங்கச் சங்கிலிகளை பறிக்கும் சம்பவங்கள் பதிவாகுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களே இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்தப்படுகின்றமை அதிகரித்துள்ளதாகவும் இதன்போது அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார். 

Continue Reading

தாமரை கோபுரத்திற்குள் பிரவேசிக்க மக்களுக்கு சந்தர்ப்பம்

கொழும்பு, செப் 13 தெற்காசியாவின் மிக உயர்ந்த கட்டடமான ‘தாமரை கோபுரத்தின்’ செயல்பாடுகள் 15 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளன. அதற்கமைய கட்டணங்களை செலுத்தி சகலருக்கும் தாமரை கோபுரத்திற்குள் பிரவேசித்து அதனை பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக கொழும்பு லோட்டஸ் டவர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் ஆர்.எம்.பி.ரத்நாயக்க தெரிவித்தார். வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பின்னர் தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கு பொது மக்கள் அனுமதிக்கப்படுவார்கள். கட்டணங்களை செலுத்தி பெற்றுக் கொள்ளும் நுழைவுச் சீட்டு மூலம் […]

Continue Reading

ஜெனிவாவில் இலங்கைக்கு சீனா ஆதரவு

சுவிஸ், செப் 13 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி சென் சூ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர், நல்லிணக்கத்தை பாதுகாக்க இலங்கை மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளை சீனா பாராட்டுவதாக குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சமூக ஸ்திரத்தன்மையை பேணுவதற்கும், இறையாண்மை மற்றும் […]

Continue Reading

19 ஆம் திகதி சிறப்பு விடுமுறை

கொழும்பு, செப் 13 பிரித்தானிய இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில்   எதிர்வரும் 19 ஆம் திகதி தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 19 ஆம் திகதி அனைத்து அரச நிறுவனங்களுக்கும் சிறப்பு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கமைய  தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது . இதேவேளை 19ஆம் திகதி வரை தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும் எனவும்  பொது […]

Continue Reading

 63 இலட்சம் மக்கள் தீவிர உணவு நெருக்கடியில்

கொழும்பு, செப் 13 இலங்கையில் சுமார் 63 இலட்சம் மக்கள் சாதாரண தன்மையில் இருந்து தீவிரமான உணவுப் பாதுகாப்பின்மைக்கு முகங்கொடுத்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனமும் உலக உணவு திட்டமும் தெரிவித்துள்ளன. வாழ்வாதார உதவி போதியளவு வழங்கப்படவில்லையெனின் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என குறித்த அமைப்புகள் விவசாய அமைச்சரிடம் கையளித்துள்ள புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளன. தொடர்ச்சியாக இரு பயிரிடல் பருவங்கள் தவறவிடபட்டமையினால் உற்பத்தியில் சுமார் 50 வீத வீழ்ச்சியுடன், வெளிநாட்டு நாணய நெருக்கடியினால் உணவு […]

Continue Reading

ராணி எலிசபெத்தின் நாய்களை பராமரிக்கும் இளவரசர் ஆண்ட்ரூ

லண்டன், செப் 13 இங்கிலாந்தில் மறைந்த ராணி 2-ம் எலிசபெத் மிகப்பெரிய நாய் பிரியர். தனது வாழ்நாளில் 30-க்கும் மேற்பட்ட கோர்கிஸ் ரக நாய்களை வளர்த்துள்ளார். கடைசியாக அவரிடம் மிக் மற்றும் சாண்டி என்ற 2 இளம் நாய்கள் இருந்தன. அத்துடன் கேண்டி என்ற டோர்கி ரக நாய் ஒன்றும் இருந்தது. தற்போது ராணி மறைந்ததை தொடர்ந்து இந்த நாய்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருந்தது. இது தொடர்பாக பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர். இந்த நிலையில், இந்த […]

Continue Reading

வழிகாட்டி கருவியாக இருந்தார்: ராணி எலிசபெத்துக்கு இளவரசர் ஹாரி புகழாரம்

லண்டன், செப் 13 இங்கிலாந்து இளவரசர் ஹாரி தனது அரச குடும்பத்தில் இருந்து வெளியேறி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் குடிபெயர்ந்தார். தற்போது ராணி எலிசபெத் மறைவை தொடர்ந்து கடந்த 8-ந் திகதி முதல் இங்கிலாந்து அரச குடும்பத்துடனேயே இருந்து வருகிறார். இளவரசர் வில்லியம்-கேதரின் தம்பதி, இளவரசர் ஹாரி-மேகன் தம்பதியர் ஒன்றாக இணைந்து, விண்ட்சார் கோட்டையின் வாயிலில் ராணிக்கு மலரஞ்சலி செலுத்தி பொதுமக்களிடம் பேசி தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தி இருந்தனர். இந்த நிலையில் மறைந்த தனது […]

Continue Reading

துனிசியாவில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து 11 பேர் பலி

துனிஸ், செப் 13 உள்நாட்டு போர் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக படகுகளில் பயணம் செய்து ஐரோப்பாவை அடைய முற்படுகின்றனர். இதுபோன்ற ஆபத்தான பயணங்கள் பல நேரங்களில் துயரத்தில் முடிந்து விடுகிறது. இந்த நிலையில் வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் உள்ள ஸ்பாக்ஸ் பிராந்தியத்தில் இருந்து 30-க்கும் மேற்பட்ட அகதிகள் படகு ஒன்றில் இத்தாலி நோக்கி புறப்பட்டனர். இந்த படகு […]

Continue Reading

வீரர்கள் வாகன பேரணியில் கொழும்புக்கு

கொழும்பு, செப் 13 நாட்டை வந்தடைந்துள்ள விளையாட்டு வீரர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வாகன பேரணியில் கொழும்புக்கு அழைத்து வரப்படுகின்றனர். இன்று காலை 06.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்படும் வாகன பேரணி கொழும்பு – நீர்கொழும்பு வீதி ஊடாக பேலியகொட சந்தி, மருதானை சந்தி, டாலி வீதி, யூனியன் பிளேஸ், அலெக்ஸாண்ட்ரா வீதி ஊடாக சுதந்திர மாவத்தையை சென்றடைவதுடன், அவ்விடத்தில் விசேட வரவேற்பு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் புகழ் […]

Continue Reading

பொருட்கள் இறக்குமதி செய்ய அனுமதி

கொழும்பு, செப் 13 பல பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் திருத்தப்பட்டுள்ளது. இதன்படி கட்டுப்பாடுகளுடன் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Continue Reading