இன்று மின்வெட்டு அமுலாகும் விதம்
கொழும்பு, செப் 13 இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய இன்று 1 மணி நேர மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
Continue Readingகொழும்பு, செப் 13 இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய இன்று 1 மணி நேர மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
Continue Readingகொழும்பு, செப் 13 கைதிகள் தினத்தை முன்னிட்டு 417 கைதிகள் விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளர். திங்கட்கிழமை கைதிகள் தினத்தை முன்னிட்டு, அரசியலமைப்பின் 34 ஆவது சரத்தின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அபராதம் செலுத்த முடியாத மற்றும் சிறிய குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, சிறைச்சாலைகளில் கூட்ட நெரிசலைக் குறைக்க புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்த வேண்டும் […]
Continue Readingகொழும்பு, செப் 13 மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையானவேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது […]
Continue Readingஇந்தியா,செப் 12 தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்கான அர்ப்பணிப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினால் முன்னேற்றம் எதுவும் காணப்படாமை குறித்து இந்தியா இன்று கவலை தெரிவித்துள்ளது. ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வில் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் தொடர்பான கலந்துரையாடலில் பேசிய இந்திய பிரதிநிதிகள், இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்கான உறுதிப்பாடுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தால் முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயம் என்று குறிப்பிட்டனர். அண்டை தீவு தேசத்தில் […]
Continue Readingஇஸ்லமாபாத்,செப் 12 பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக பயங்கரவத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய இம்ரான் கான், போலீஸ் உயர் அதிகாரிகளியும் நீதிபதியை மிரட்டும் வகையில் பேசியதாக இம்ரான் கானுக்கு எதிராக வழக்குபதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் அவருக்கு இஸ்லமாபாத் ஐகோர்ட் முன் ஜாமீன் வழங்கி அதை ஏற்கனவே நீட்டித்து இருந்தது. இந்த நிலையில் பயங்கரவாத குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு விதிக்கப்பட்ட முன் ஜாமீனை மேலும் 8 […]
Continue Readingசத்தீஸ்கர்,செப் 12 21 ஆண்டுகளுக்குப் பிறகு நபர் ஒருவர் தாடியை (சவரம்)ஷேவ் செய்துள்ள தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ராம்சங்கர் குப்தா என்ற சமூக ஆர்வலரான இவர் “மானேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர்” என்ற புதிய மாவட்டம் உருவாகும் வரை தனது தாடியை வெட்ட மாட்டேன் என சபதம் எடுத்துள்ளார். இதற்காக, அவர் 21 ஆண்டுகளாக தனது தாடியை ஷேவ் செய்யாமல் இருந்துள்ளார். மானேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் மற்றும் சக்தி ஆகிய இரண்டு புதிய மாவட்டங்களை உருவாக்க அம்மாநில அரசு ஒப்புதல் […]
Continue Readingகொழும்பு, செப் 12 ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி நாளை (13) இலங்கை வரவுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி நாளை அதிகாலை 4.30 மணியளவில் இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, ஆசிய வலைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி இன்று நாட்டிற்கு வரவுள்ளது. வலைப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற பெண்கள் இன்று இரவு 11.50 மணிக்கு இலங்கையை வந்தடைவார்கள் என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார […]
Continue Readingவாஷிங்டன், செப் 12 அமெரிக்காவின் நியூயார்க்கில் உலக வர்த்தக மையம் அமைந்திருந்த இரட்டை கோபுரத்தை கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி பயங்கரவாதிகள் விமானங்களை கொண்டு மோதி தகர்த்தனர். அத்துடன், ராணுவ தலைமையகமான பெண்டகன் மற்றும் பென்சிலிவேனியாவிலும் கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த கோர சம்பவத்தின் 21-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அமெரிக்காவில் அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில் 9/11 பயங்கரவாத தாக்குதல்களின் நினைவாக அன்றைய நாளில் நாசாவின் விண்வெளி வீரர்களில் ஒருவர் விண்வெளியில் இருந்து […]
Continue Readingகொழும்பு,செப் 12 கொரோனா தொற்று உறுதியான மேலும் 27 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 670,471ஆக அதிகரித்துள்ளது.
Continue Readingகொழும்பு,செப் 12 நாட்டில் மேலும் 3 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். உயிரிழந்த நபர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 2 ஆண்களும் 1 பெண்ணும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, நாட்டில் மேலும் 27 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 670,471ஆக அதிகரித்துள்ளது.
Continue Readingகொழும்பு,செப் 12 இந்த வருடத்தின் இதுவரை இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக சென்றுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். அவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாடு சென்றவர்களில் சிலர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுசெய்யாதவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். மூன்று லட்சத்து முப்பது ஆயிரத்திற்கும் அதிகமானோர் வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
Continue Readingகொழும்பு,செப் 12 கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுவரும் தங்களது உறவினர்களை விடுவிக்க அல்லது பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரி அவர்களது உறவினர்கள் வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக இன்று உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2019ஆம் மற்றும் 2020ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 12 பேர், தமது விடுதலையை வலியுறுத்தி கொழும்பு மகசின் சிறைச்சாலையில் கடந்த ஆறாம் திகதி முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு […]
Continue Reading