தீவிரமடையும் ‘மண்டாஸ்’ புயல் – வடக்கு, கிழக்கு மக்களுக்கு அவசர எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் பருத்தித்துறைக்கு கிழக்காக 492 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டிருந்த தாழமுக்கம் மண்டாஸ் புயலாக மாறியுள்ளது. தற்போது இதன் மையப்பகுதியின் அமுக்கமானது 997 மி.பா. ஆக மாறியுள்ளது. இது நாளை அதிகாலை 3.00 மணியளவில் 995 மி.பா. ஆகவும் இன்று பிற்பகல் 994மி.பா. ஆகவும் குறைவடைய வாய்ப்புக்கள் உண்டு. ஏற்கெனவே அறிவித்தபடி இதற்கு ‘மண்டாஸ்’ என பெயரிடப்படும். இது வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து எதிர்வரும் 09.12.2022 இரவு அல்லது 10.12.2022 அருகே இந்தியாவின் […]

Continue Reading

முல்லைதீவில் அவசர நிலைமை – கிராமங்களுக்குள் புகுந்த கடல் நீர்

நாட்டில் அண்மைக் காலமாக சீரற்ற காலநிலை நிலவுகிறது.பல பிரதேசங்களில் மழை ,காற்று ,பனி என வானிலை மாற்றம் நிகழ்கிறது. இன்றும் கூட நாட்டுக்கு சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கடல் அதிக கொந்தளிப்புடன் காணப்படுகிறது. அலைகள் கரையை தாண்டி வெளிப்புறமாக வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் செம்மலை பகுதியில் கிராமங்களுக்குள் கடல் நீர் உட்புகுந்துள்ளது.இதனை அடுத்து மண் மூடைகளை அடுக்கி பிரதேச மக்கள் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். எனினும் தொடர்ச்சியாக கடல் நீர் […]

Continue Reading

தேசிய கொள்கை வகுக்கப்பட வேண்டும் – சித்தார்த்தன்

பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண வேண்டுமாயின் நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்த வகையில் தேசிய கொள்கை வகுக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் (வியாழக்கிழமை) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்ளைகள் அமைச்சு, முதலீட்டு மேம்பாடு ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, நாடு […]

Continue Reading

மின் கட்டணம் அதிகரிக்கப்படும்; இல்லை வரியை அதிகரிக்க வேண்டும்! ஜனாதிபதி

மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இல்லை என்றால் பணத்தை அச்சடிக்க வேண்டும் அல்லது வாட் வரியை அதிகரிக்க வேண்டும் என்றார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்திருந்தார். ஆகஸ்ட் மாதம் மின்கட்டணத்தை உயர்த்தினோம், அது போதாது. 151 பில்லியன் ரூபா நட்டம் கிடைத்துள்ளது. 2013 முதல் நமது மொத்த இழப்பு 300 பில்லியன். 300 பில்லியன் கண்டுபிடிக்க வேண்டும். அடுத்த ஆண்டு வறட்சி நிலவுகிறது. வறட்சி […]

Continue Reading

தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் வழமைக்கு!

தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக நானுஓயா ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. பதுளையிலிருந்து கொழும்பு புகையிரத நிலையத்தை நோக்கி சென்ற தபால் புகையிரதம் நேற்று இரவு நானுஓயா மற்றும் கிரேட்வெஸ்டன் ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையில் 124/½வது மைல் கல் இடத்தில் வைத்து தடம்புரண்டுள்ளமையால் மலையகத்திற்கான புகையிரத சேவை பாதிப்படைந்தது. குறித்த புகையிரதத்தின் பெட்டி ஒன்று தடம்புரண்டதன் காரணமாகவே மலையகத்திற்கான புகையிரத சேவை பாதிக்கப்பட்டிருந்தது. எனினும், இன்று காலை 8 மணியளவில் ரயில் பாதை […]

Continue Reading

நாமல் உட்பட சிலர் மீதான விசாரணைகள் ஒத்திவைப்பு!

சட்டவிரோதமாக முறையில் சம்பாதித்த பணதொடர்பான விசாரணை எதிர்வரும் 2023ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கமைய நாமல் ராஜபக்க்ஷ உட்பட சிலர் சட்டவிரோதமாக முறையில் சம்பாதித்த பணத்தை நிறுவனமொன்றில் முதலீடு செய்தமை தொடர்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இன்று (வியாழக்கிழமை) இந்த வழக்கு கொழும்பு மேலதிக நீதிவான் மஞ்சுள ரத்நாயக்க முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது . இதன்போது சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், சட்டமா அதிபருக்கு […]

Continue Reading

உலகின் அதிநவீன விவசாய தொழில்நுட்பத்தை இலங்கைக்கு வழங்கும் அமெரிக்கா!

இலங்கையில் விவசாயத் துறையை அதிகரிக்க தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் பாரம்பரிய விவசாய அறிவுக்குப் பதிலாக புதிய விவசாய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. விவசாய அமைச்சர் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர்கள் இந்தக் கருத்துகளை வெளியிட்டுள்ளனர். உலகின் அதிநவீன விவசாய தொழில்நுட்பத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்த தமது நிறுவனம் தீர்மானித்துள்ளதாக சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவர் நிலையத்தின் பிரதிநிதிகள் அங்கு தெரிவித்துள்ளனர். […]

Continue Reading

பாடசாலைகளுக்கு விடுமுறை!

பதுளை மாவட்டத்தின் பசறை ,லுணுக்கலை ,மடுல்சீமை, நமுனுகுல உட்பட பல பகுதிகளில் நேற்று பிற்பகல் வேலை தொடக்கம் வீசி வரும் கடும் காற்றின் காரணமாக மக்கள் குடியிருப்புகள் மற்றும் பாடசாலைகள், பொது கட்டிடங்கள் என பலவற்றிற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. காற்றின் காரணமாக பாரிய மரங்கள் வீதியிலும், வீடுகளிலும் விழுந்துள்ளன. காற்று தொடர்ந்து வீசுவதால் சேதம் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. லுணுக்கலை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஹொப்டன் உட்பட்ட பல பகுதிகளில் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புகள், பாடசாலைகள் […]

Continue Reading

திருகோணமலையில் கடல் கொந்தளிப்பால் வீழ்ந்த பாரிய மரங்கள்

கடந்த இரு தினங்களாக நிலவும் சீறற்ற காலநிலை காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் – போக்குவரத்துக்கு சாலைக்கு முன்னாள் உள்ள கடற்கரையில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் போது குறித்த கடற்கரையில் இருந்த இரண்டு மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. பழுதடைந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூதூர் சாலைக்கு சொந்தமான பேருந்தின் மீது மரமொன்று சாய்ந்து வீழ்ந்துள்ளது. அத்தோடு மரம் முறிந்து விழுந்தமையின் காரணமாக ரெலிக்கோம் நிறுவனத்திற்கு சொந்தமான கம்பம் ஒன்றும் அதன் வயரும் அறுந்து வீழ்ந்து காணப்படுகிறது. […]

Continue Reading

கசினோவிற்கு கிடைத்த அனுமதி

கசினோ வர்த்தக ஒழுங்குப்படுத்தல் சட்டம் கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (டிச.8) கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 2023ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி நாட்டில் கசினோக்களை ஒழுங்குபடுத்தும் வகையில், கசினோ ஒழுங்குப்படுத்தல் முகவர் நிலையம் ஒன்று ஸ்தாபிக்கப்படும் என்ற வாக்குறுதியின் பேரில் அரசாங்கத்தின் நலன்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக ஹர்ஷ டி சில்வா தெரிவித்தா

Continue Reading

மரம் முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு

உடப்புசலாவை போலீஸ் பிரிவிற்குட்பட்ட கல்கடபத்தனை கிராமத்தில் வீடு ஒன்றின் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 4:15 மணியளவில் மரம் ஒன்றின் கிளைகள் விழுந்துள்ள நிலையில் வீட்டின் ஒரு பகுதி உடைந்து வீட்டில் வசித்து வந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் 55 வயது உடைய வி.கே ஆரியபால என்பவரே உயிரிழந்தார். சம்பவம் இடம்பெற்றபோது வீட்டில் நால்வர் இருந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சம்பவத்தை அறிந்த கிராமவாசிகள் […]

Continue Reading

அமைச்சுப் பதவியை ஏற்க தயார் – துமிந்த

அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்க தயாராகவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பதவியேற்க தயாராகவுள்ள துமிந்த திஸாநாயக்க ‘எப்போது அமைச்சராகப் போகின்றீர்கள்?’ என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த வேலையைப் பாரம் கொடுத்தால் இதைச் சரியாகச் செய்வார் என்று ஜனாதிபதி நினைத்து என்னிடம் பொறுப்பை ஒப்படைத்தால் அதை நான் ஏற்றுக்கொள்வேன். அதற்காகத் தருகின்ற அமைச்சைப் பாரமேற்கமாட்டேன். என்னால் செய்ய முடியும் என்று நான் […]

Continue Reading