வெள்ளை வானில் தமிழரசு இளைஞர் அணி முக்கியஸ்தரை கடத்த முயற்சி

இலங்கை தமிழரசுக் கட்சி இளைஞர் பிரிவின் செயலாளர் நிதர்சனை வெள்ளை வான் (படத்தில் உள்ள வான்) ஒன்றில் கடத்துவதற்கான முயற்சி ஒன்று இடம்பெற்றிருப்பதாக தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார். இது தொடர்பில் கல்முனை பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவு முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அரச புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவர்களே இந்த கடத்தல் முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்த அவர், பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிரான கையெழுத்து வேட்டையில் இளைஞர் அமைப்பின் செயலாளர் முன்னணியில் […]

Continue Reading

உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் முடிவு; நாளை வாக்களிப்பு

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் நேற்றிரவுடன் முடிவுக்கு வந்துள்ளது. நாளை 19 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. தங்களது கட்சி வேட்பாளர்களுக்காக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்தச் சூழலில் தேர்தல் நடப்பதற்கு 48 மணி நேரத்துக்கு முன்னதாக […]

Continue Reading

போதைப் பொருள் வியாபாரி ‘தெமட்டகொட’ ருவானின் ரூ.7.9 கோடி சொத்து பறிமுதல்

கொழும்பு, பெப் 18: பிரபல போதை பொருள் வியாபாரி ‘தெமட்டகொட’ ருவானின் ரூ.7.9 கோடி பெறுமதியான சொத்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) தெரிவித்துள்ளது.மேலும், இலங்கையில் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் கைப்பற்றப்பட்ட சொத்துக்களில், ‘தெமட்டகொட’ ருவானிடம் கைப்பற்றப்பட்ட சொத்துக்களே அதிக மதிப்புடையவை என்று அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள மூத்த அதிகாரி கூறுகையில் “சந்தேகநபர் கடந்த 2011 ஆம் ஆண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபடத் தொடங்கியுள்ளார். பின்னர் பெரியளவில், […]

Continue Reading

700 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய சிங்கள இனத்தை பூர்வ குடிகள் என கூற முடியாது: விக்னேஸ்வரன் காட்டம்

யாழ்ப்பாணம், பெப்.18: இலங்கையில் சுமார் மூவாயிரம் ஆண்டுகள் தமிழர்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன. இந்நிலையில் 700 முன்பு தோன்றிய சிங்கள இனத்தை இலங்கையின் முதன்மை இன என கூற முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் க.வி. விக்னேஸ்வரன் காட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் க.வி. விக்னேஸ்வரன் கூறியது: சுமார் மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழருடைய இருப்பில் இருந்து கி.பி ஆறாம் நூற்றாண்டுகளில் சிங்கள இனம் உருவாக்கம் பெற்றதாக வரலாறு […]

Continue Reading

கச்சதீவு திருவிழாவில் பங்கேற்க யாத்திாிகர்களுக்கு அனுமதி இல்லை

கச்சதீவு திருவிழாவில் பங்கேற்க இலங்கை மற்றும் தமிழக யாத்திரிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். 500 பக்தர்களை அனுமதிப்பதாக யாழ் மாவட்ட ரீதியாக தீர்மானம் எடுக்கப்பட்ட போதிலும், இம்முறை யாத்திரிகர்களை அனுமதிப்பதில்லை எனவும் அருட்தந்தைகளின் பங்கேற்புடன் மாத்திரம் திருவிழாவை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவைக்கு ஜனாதிபதி இதனை தெரியப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் மேலும் தெரிவித்தார்.

Continue Reading

முடிவுக்கு வந்த யாழ். பல்கலை மாணவர்களின் போராட்டம்

யாழ். பல்கலையின் துணைவேந்தர் மாணவர்களது போராட்ட இடத்திற்கு சென்று, நாளை (18) காலை 9 தொடக்கம் மாலை 4 மணிவரையான நேரத்திற்குள் மாணவர் ஒன்றியம் அமைப்பதாக உறுதிமொழியை வழங்கினார். அதனைத்தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு, பல்கலைக்கழகத்தின் நுழைவாயில்களை திறந்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அந்தவகையில் நாளையதினம் பிரதான மாணவர் ஒன்றியமும், கலைப்பீட மாணவர் ஒன்றியமும் அமைக்கப்படவுள்ளது.

Continue Reading

தொலைபேசி மூலம் யாழில் பண மோசடி

யாழ்ப்பாணம், பெப்.17: தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டவர்களை நம்பி யாழ்.சித்தங்கேணி மற்றும் சங்கரத்தை பகுதிகளை சேர்ந்த இருவர் பணத்தை பறி கொடுத்துள்ளனர்.  இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, சித்தங்கேணி பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்த மர்ம நபர்கள்,அதிஸ்ட லாப சீட்டில் பெருமளவு பணம் கிடைத்துள்ளது. அதனை பெறுவதற்கு 1 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தை இலங்கை வங்கியில் வைப்பிலிடுமாறு கூறியுள்ளனர். இதனை நம்பிய குறித்த பெண்ணும் தன்னுடைய தங்க நகைகளை […]

Continue Reading

முல்லைத்தீவில் முன்பள்ளி ஆசிரியர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம்

முல்லைத்தீவு, பெப்.17: முல்லைத்தீவு மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் அடிப்படை சம்பளத்தினை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்னால் ஒன்றுகூடிய முன்பள்ளி ஆசிரியர்கள் தங்களுக்கான சம்பள உயர்வினை கோரி கவனயீர்ப்பினை முன்னெடுத்து முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனிடம் மனு ஒன்றினை கையளித்துள்ளனர். அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலான சேவை நோக்கில் கற்பித்தல் பணிகளை முன்னெடுத்து வருகின்றோம். பல தடவைகள் கொடுப்பனவு தொடர்பான வேண்டுதல்களால் வட மாகாணசபை […]

Continue Reading

உள்நாட்டு அரிசியின் விற்பனை விலை வீழ்ச்சி

வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுவதால், உள்நாட்டு அரிசியின் விற்பனை விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தேசிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. அரசாங்கத்தினால் அரிசி இறக்குமதி செய்யப்படுவதால், நுகர்வோர் இறக்குமதி அரிசியை கொள்வனவு செய்து வருவதாக அந்த சங்கத்தின் தலைவர் பீ.கே ரஞ்சித் தெரிவித்தார். இதனால் உள்நாட்டு அரிசியின் விற்பனை 60 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. முன்னதாக விற்பனை செய்யப்பட்ட விலையை காட்டிலும் தற்போது குறைவடைந்துள்ளதாக தேசிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தலைவர் பீ.கே ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்த வேண்டாம்: ஜனாதிபதி

கொழும்பு, பெப்,17: பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்றும் பயங்கரவாதத்துடன் தெளிவான தொடர்புகள் இருந்தால் மாத்திரம் பயன்படுத்துமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்தார். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் விசாரணைகளை கைவிடுவதற்கு பயங்கரவாத தடைச்சட்டத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி பொலிஸாரிடம் கூறியதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பாக பொறுப்பற்ற பயன்பாடு நிறுத்தப்பட வேண்டும் என்று அரசாங்கம் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும் அது […]

Continue Reading

மக்கள் பிரச்சனைகள் தொடர்பாக விவாதிக்கத் தயார்: ஆளுநர்

யாழ்ப்பாணம், பெப் 17: வடக்கு மாகாணத்தில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் துறைசார்ந்த அதிகாரிகள் மற்றும் சமூக அமைப்புகளுடன் வெளிப்படைத்தன்மையுடன் கலந்துரையாடல் நடத்தப்படும் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் – வடமாகாண மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சிவில், துறைசார் குழுக்களுடன் குறித்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு வழங்கிய முறைப்பாடுகள் தொடர்பில் வெளிப்படைத் தன்மையுடன் மக்கள் மத்தியில் குறித்த விடயங்கள் தொடர்பில் விவாதிக்கப்பட […]

Continue Reading

விகாரைகளில் திருடிய கணவன், மனைவி கைது

புத்தளம், பெப்.17 புத்தளம் உள்ளிட்ட பகுதிகளில் பௌத்த விகாரைகளை இலக்கு வைத்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கணவனும், மனைவியும் புத்தளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் குறித்த தம்பதியினர் ஆண்டியாகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பல்லம பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கைது செய்யப்பட்டவர்கள் அநுராதபுரம் உடுபந்தாவ பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண்ணும், 22 வயதுடைய இளைஞனும் திருமணம் முடித்த தம்பதியினர் எனக் கூறப்படுகிறது. இந்த […]

Continue Reading