இன்று முதல் மின்சாரம் தடைப்படலாம்: பி.யூ.சி.எஸ்.எல்.

கொழும்பு, பெப் 12: இரண்டு மின் உற்பத்தி நிலையங்கள் தற்காலிகமாக பழுதடைந்துள்ளதால், நாட்டின் சில பகுதிகளில் இன்று முதல் மின்சாரம் தடைப்படலாம் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜனக ரத்நாயக்க மேலும் கூறுகையில் “கெரவலப்பிட்டியில் உள்ள வெஸ்ட் கோஸ்ட் அனல்மின் நிலையம், கொழும்பில் உள்ள தனியாருக்குச் சொந்தமான சோஜிட்ஸ் களனி திஸ்ஸ மின் உற்பத்தி நிலையம் ஆகியவை தொழில்நுட்பக் கோளாறினால் தற்காலிகமாக செயலிழந்துள்ளன. வெஸ்ட் கோஸ்ட் […]

Continue Reading

கைதிகள் விடுதலையில் ஐக்கிய நாடுகள் சபை செல்வாக்கு செலுத்த முடியாது – நாமல்

கொழும்பு, பெப் 12: ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அல்லது வேறு சர்வதேச அமைப்பினருக்கு தேவையான வகையில் கைதிகள் விடுவிப்பு தொடர்பான தீர்மானங்களை அரசு எடுக்காது என்று விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அம்பலாங்கொடையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் ” இலங்கையில் கைதிகளை விடுதலை செய்யவில்லை என்பதற்காக அரசாங்கத்திற்கு ஜெனீவாவில் எந்த பிரச்சினையும் ஏற்படாது. கைதிகள் விடுதலை தொடர்பாக அரச […]

Continue Reading

கடல் அட்டை பண்ணைகளை அமைக்க தனியார் முதலீட்டாளர்கள் முன்வரவேண்டும்: டக்ளஸ் தேவானந்தா அழைப்பு

மன்னார், பெப் 12: கடல் அட்டை பண்ணைகளை அமைக்க தனியார் முதலீட்டாளர்கள் முன்வரவேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார். மன்னார், பள்ளிமுனையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கடலட்டை குஞ்சு இனப் பெருக்க நிலையத்தினை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சனிக்கிழமை ஆரம்பித்து வைத்தார். வடக்கு மாகாணத்தில் சாத்தியமான பிரதேசங்களில் எல்லாம் பாரம்பரிய தொழில் முறைகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்தாக வகையில் கடலட்டை பண்ணைகளை உருவாக்கி பிரதேசத்தின் பொருளாதாரத்தினை வலுப்படுத்தும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் எண்ணக் கருவிற்கு […]

Continue Reading

திரைப்படமாகும் சக்திமான்

மும்பை, பெப் 11: 90-களின் காலக்கட்டத்தில் மிக முக்கியமான தொடர் “சக்திமான்”. பல குழந்தைகளை கவர்ந்த இந்த தொடர் 1997-ஆம் ஆண்டு முதல் 2005-ஆம் ஆண்டுவரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. இந்தத் தொடரை நடிகர் முகேஷ் கண்ணா தயாரித்து நடித்திருந்தார். தமிழில் டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பான இந்த தொடர் பல ரசிகர்களை தன் வசம் படுத்தியிருந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அச்சமயம் சூப்பர் ஹீரோ தொடரான சக்திமான் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதற்கு […]

Continue Reading

ரூ. 41.15 கோடிக்கு ஏலம் போன கிரிக்கெட் வீரர்

பெங்களூரு, பெப் 12: இந்திய வீரர் இஷான் கிஷனை, ரூ 41.15 கோடிக்கு (இந்திய பணம் ரூ.15.25) மும்பை இந்தியன்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது. 15-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் கடைசி வாரத்தில் இந்தியாவில் தொடங்குகிறது. இந்த முறை வழக்கமான 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் புதிதாக இணைந்துள்ளன. இந்த 15-வது ஐ.பி.எல்தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்று நடைபெற்றது மதியம் 12 மணிக்கு இந்த […]

Continue Reading

கொரோனா தொற்றில் இருந்து 390 பேர் குணமாகினர்

கொழும்பு, பெப் 12: கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 390 நோயாளிகள் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 594,738 ஆக உயர்ந்துள்ளது. அராசு வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, நாட்டில் தற்போது சுமார் 15,312 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை நாட்டில் 625,804 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் இதுவரை 15,754 பேர் உயிரிழந்துள்ளனர்.

Continue Reading

கொட்டவெஹர ரஜமஹா விஹாரையில் தொல்பொருட்கள் திருட்டு

கொழும்பு, பெப் 12: கொட்டவெஹர ரஜமஹா விஹாரையில் இருந்த பல தொல்பொருட்கள் திருடப்பட்டுள்ளன. ரம்புக்கன கொட்டவெஹர ரஜமஹா விகாரையில் வைக்கப்பட்டிருந்த ஐந்து தங்கப் பெட்டிகளும், மூன்று ஸ்படிகப் பெட்டிகளும் திருடப்பட்டுள்ளதாக தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Continue Reading

பொருளாதார நெருக்கடிக்கு எதிர்க்கட்சிகளின் கூட்டுப் பதில் வெளியீடு

கொழும்பு, பெப் 12: நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களை முன்வைத்து, அதற்கான கூட்டுப் பதில் ஆவணத்தை எதிர்க் கட்சிகள் வெளியிட்டுள்ளன. இந்த கூட்டுப் பதில் ஆவணத்தில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர்கள் ரவூப் ஹக்கீம், திஸ்ஸ விதாரண, எம்.ஏ.சுமந்திரன், கபீர் ஹாசிம், ஹர்ஷ டி சில்வா, எரான் விக்ரமரத்ன, சாணக்கியன் ராசமாணிக்கம், மனோ கணேசன், ரிஷாட் பதியுதீன், கரு ஜயசூரிய, ஆர். சம்பந்தன் ஆகியோர் இந்த ஆவணத்தில் கையொப்பமிட்டுள்ளனர். அந்த ஆவணத்தில், […]

Continue Reading

12-15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு இரண்டாவது டோஸ் வழங்கப்படுமா? ராஜாங்க அமைச்சர் விளக்கம்

கொழும்பு, பெப் 12: 12 வயதுக்கும் 15 வயதுக்கும் இடைப்பட்ட குழந்தைகளுக்கு, கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை வழங்குவது தொடர்பாக சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளை எதிர்பார்ப்பதாக மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை ராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் “கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் இதுவரை கிட்டத்தட்ட 600,000 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 12 வயதுக்கும் 15 வயதுக்கும் இடைப்பட்ட குழந்தைகளுக்கு, கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை வழங்குவது தொடர்பாக சுகாதார அதிகாரிகளின் […]

Continue Reading

ஐ.பி.எல்: ரூ.28.7 கோடிக்கு ஏலம் போன இலங்கை வீரர்

பெங்களூர், பெப் 12: ஐ.பி.எல். ஏலத்தில் இலங்கை அணியின் சூழல் பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க இலங்கை பணம் சுமார் ரூ.28.7 கோடிக்கு (இந்திய ரூபாய்-10.7 கோடி) பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய இரு அணிகளும் வனிந்து ஹசரங்கவை ஏலத்தில் எடுக்க முனைப்புக் காட்டின. இறுதியில் ஏலத்தில் வென்ற பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி அவரை சுமார் 28.7 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஐபிஎல் ஏலம்-2022 […]

Continue Reading

ஓமிக்ரோன் விரைவாக பரவும் தன்மையுடையது: சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர்

கொழும்பு, பெப் 12: ஓமிக்ரோன் திரிபின் தனிப்பட்ட சிறப்பியல்புகளாக, விரைவான ஆரம்பம், விரைவான தொற்று, விரைவான குணமடைதல் ஆகியவற்றைக் கூறலாம் என்று சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் ஜி. விஜேசூரிய தெரிவித்தார். இது தொடர்பாக வர மேலும் கூறுகையில் “ஓமிக்ரோன் திரிபு விரைவாக பரவும் தன்மை உடையதுடன், விரைவாக குணமடையும் இயல்பும் கொண்டது. இதனால், ஓமிக்ரோன் தொற்றிலிருந்து மீண்டவர்கள் ஒரு வாரத்தில் இயல்பு வாழ்கைக்குத் திரும்பலாம். இருப்பினும், பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி உடையவர்களுக்கு, ஓமிக்ரோன் திரிபு […]

Continue Reading

யேமன் கிளர்ச்சியாளர்களின் ஆளில்லா விமானம் வெடித்து இலங்கையர் காயம்

கொழும்பு, பெப் 12: யேமன் கிளர்ச்சியாளர்களால் சவூதி அரேபிய நாட்டுக்குள் அனுப்பப்பட்ட, குண்டு நிரம்பிய ஆளில்லா விமானத்தை சவூதி ராணுவம் வெடிக்கச் செய்தது. அப்போது, அதன் இடிபாடுகள் விழுந்து 12 பேர் காயமடைந்தனர். அதில் ஒரு இலங்கையர் அடங்கும். இது தொடர்பாக சவூதி அரேபியாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிப்பது: சவூதி, யேமன் எல்லைக்கு அருகில் உள்ள விமான நிலையத்தை குறிவைத்து யேமன் கிளர்ச்சியாளர் குண்டு நிரப்பப்பட்ட ஆளில்லா விமானத்தை அனுப்பினர். இதை இடை வழியில் மறித்த […]

Continue Reading