நடு வானில் விபத்தில் சிக்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒருவர் பலி – பலர் காயம்

லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம், மோசமான வானிலை காரணமாக கடும் டர்புலன்ஸை எதிர்கொண்டதில் நடு வானில் நிலை தடுமாறி குலுங்கியது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர். இதுதொடர்பாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், போயிங் 777-300ER விமானத்தில் மொத்தம் 211 பயணிகளும் 18 பணியாளர்களும் இருந்தனர். விமானம் லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் செல்லும் வழியில் கடுமையான டர்புலன்ஸை சந்தித்தபோது, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3:45 மணிக்கு […]

Continue Reading

பாகிஸ்தானில் மிகக் கடுமையான வெப்ப அலை வீசக்கூடும் அபாயம்

பாகிஸ்தானில் மிகக் கடுமையான வெப்ப அலை வீசக்கூடும் அபாயம் காணப்படுவதால் பொதுமக்கள் அனைவரும் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என பாக்கிஸ்தான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அந்நாட்டின் வானிலை ஆய்வு மைய மூத்த அதிகாரி ஜாஹீர் அகமது பாபர் கருத்துத் தெரிவிக்கையில்” பாகிஸ்தானில் இம்மாதம் முழுவதும் கடுமையான வெப்ப அலை நிலவும். அதிகபட்ச வெப்பநிலை 6 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரிக்கக் கூடும் இந்த வாரத்தில் பாகிஸ்தானின் பல பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் […]

Continue Reading

பனி சிகரத்தில் நடைபெற்ற பிரமாண்ட திருமணம்

திருமணத்தை பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும். சிலர் தங்களது திருமணம் பிரமாண்டமாகவும், வித்தியாசமாகவும் நடைபெற வேண்டும் என நினைப்பார்கள். சிலர் எளிமையான முறையில் திருமணத்தை நடத்துவார்கள். தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் பனி சிகரத்தில் நடைபெற்ற பிரமாண்ட திருமண காட்சிகள் பயனர்களை ரசிக்க செய்கிறது. சுவிட்சர்லாந்தில் உள்ள ஸ்னோ அல்பைன் சிகரங்களில் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. 2,222 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பனி சிகரத்தில் நடைபெற்ற இந்த திருமணத்தின் போது மணமக்கள் ஐஸ்கியூப்பில் […]

Continue Reading

தைவான் அதிபர் லாய் சிங் டேவுக்கு தலாய் லாமா வாழ்த்து

தைபே:21 தைவானின் புதிய அதிபராக வில்லியம் லாய் சிங் டே சமீபத்தில் பதவியேற்றார். தைபே நகரத்தில் உள்ள அதிபர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. தைவான் நாட்டை சீனா நீண்ட காலமாக உரிமை கொண்டாடி வருகிறது. சமீபகாலமாக சீனாவிடம் இருந்து தைவானுக்கு ராணுவ அழுத்தம் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் தைவானின் புதிய அதிபராக வில்லியம் லாய் பதவியேற்றார். அவரை ஒரு பிரிவினைவாதி என சீனா விமர்சித்துள்ளது. இதற்கிடையே, பதவியேற்பு விழாவின்போது பேசிய வில்லியம் லாய், தைவானை […]

Continue Reading

காசாவில் நடப்பது இனப்படுகொலை அல்ல; ஹமாஸ் படை தோற்கடிக்கப்பட வேண்டும்! பைடன்

காசாவில் நடப்பது இனப்படுகொலை அல்ல என்றும், ஹமாஸ் படையினர் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற யூத – அமெரிக்க பாரம்பரிய மாத நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜோ பைடன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”காசாவில் ஹமாஸ் படையினருக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில், இஸ்ரேலியப் படைகள் இனப்படுகொலை செய்யவில்லை. காசாவில் நடப்பது இனப்படுகொலை அல்ல. இனப்படுகொலை நடப்பதாக மேற்கொள்ளப்படும் பிரச்சாரத்தை நாங்கள் நிராகரிக்கிறோம். […]

Continue Reading

கல்லால் தாக்கி மனைவியைக் கொலை செய்த கணவர்

மனைவியின் தலையில் பெரிய கல் ஒன்றால் தாக்கி அவரைப் படுகொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, லுணுகலை – ஜனதாபுர , தம்பபிட்டிய வத்த கும்புக்கன் ஓயாவில் இருந்து 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய், தலைப் பகுதியில் காயங்களுடன் நேற்றுமுன்தினம் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து 17 வயதுடைய மகள் தனது தாயின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என்று பொலிஸாரிடம் கூறினார். அதற்கமைய பொலிஸார் விசாரணை வேட்டையை ஆரம்பித்தனர். இதன்போது […]

Continue Reading

ரயில் தண்டவாளத்தில் முறிந்து விழுந்த மரம்!

ரயில் தண்டவாளத்தில் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கொட்டாவ மற்றும் பன்னிபிட்டிக்கு இடையிலான ரயில் பாதையிலேயே மரம் ஒன்று வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக களனிவெளி ரயில் பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Continue Reading

பொதுமக்களிடையே நிதியியல் அறிவை மேம்படுத்த புதிய திட்டம் – மத்திய வங்கி ஆளுநர் நந்தலால்

பொதுமக்கள் மத்தியில் நிதியியல் அறிவை மேம்படுத்தல் மற்றும் நிதியியல் செயற்பாடுகளில் அனைவரையும் உள்வாக்குதல் ஆகியவற்றின் ஊடாக பொருளாதார மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் இலங்கை மத்திய வங்கியினால் ‘நிதியியல் அறிவு வழிகாட்டி’ வெளியிடப்பட்டுள்ளது. நாட்டு மக்களிடையே நிதியியல் அறிவை மேம்படுத்துவதையும், நிதியியல் செயற்பாடுகளில் அனைவரையும் உள்வாங்குவதையும் இலக்காகக்கொண்டு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டத்தின் அனுசரணையுடன் இலங்கை மத்திய வங்கியினால் தயாரிக்கப்பட்டுள்ள ‘நிதியியல் அறிவு வழிகாட்டி’ செவ்வாய்கிழமை (21) மத்திய வங்கியின் கேட்போர்கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றிய […]

Continue Reading

ஈரான் ஜனாதிபதி ரைசியின் உடலுக்கு இறுதிக்கிரியைகள் ஆரம்பம் – நாளை மறுதினம் நல்லடக்கம்!

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இறுதிக்கிரியைகள் வடமேற்கு ஈரானில் ஆரம்பமாகியுள்ளன. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பணித்த ஹெலிகாப்டர் அஜர்பைஜான் எல்லையிலுள்ள மலைப்பகுதியில் நேற்று முன்தினம் விபத்துக்குள்ளானது. குறித்த ஹெலிகொப்டரில் ஈரானிய ஜனாதிபதியுடன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் உட்பட 9 பேர் பயணித்துள்ள நிலையில், அனைவரும் உயிரிழந்து விட்டதாக அரசு ஊடகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதையடுத்து ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் உடல், தெற்கு கொராசான் மாகாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அவரது சொந்த ஊரான மஷாத்தில் […]

Continue Reading

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி ஒத்துழைப்பை ஆராய தாய்லாந்து தூதுக்குழு இலங்கை விஜயம்

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி ஒத்துழைப்பை ஆராய்வதற்காக தாய்லாந்து அதிகாரிகள் மற்றும் தனியார் துறை பிரதிநிதிகள் அடங்கிய உயர்மட்டக் குழுவொன்று நாட்டுக்கு விஜயம் செய்துள்ளதோடு, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சில் விசேட கலந்துரையாடலொன்றிலும் கலந்து கொண்டதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். வெளியுறவுகள் அமைச்சு, வலு சக்தி அமைச்சு, தாய்லாந்து தூதரகம், தாய்லாந்து மின்னுற்பத்தி நிறுவனம், பி.டி.டி. நிறுவனம் மற்றும் குளோபல் பவர் சினெர்ஜி பப்ளிக் கம்பெனி லிமிடெட் உட்பட பல்வேறு தாய்லாந்து நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை அதிகாரிகள் […]

Continue Reading

பலத்த காற்று – வீடுகளின் மீது மரம் முறிந்து விழுந்ததில் நால்வர் படுகாயம்

இரத்தினபுரி, கொல்லகல பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக வீடொன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததில் மூவர் காயமடைந்துள்ளனர். அத்துடன், பலாங்கொடை ஹெரமிட்டிகல பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக மேலும் ஒரு வீடு மீது மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த சம்பவத்தை பார்வை இட சென்றவர் மீது கித்துள் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் குறித்த நபரும் காயமடைந்துள்ளார். அதேபோல பலாங்கொடை வட்டவல பிரதேசத்தில் வீசிய பலத்த காற்று காரணமாக வீடொன்றின் மீது […]

Continue Reading

புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை திறக்கப்படும்: கல்வியமைச்சு

வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (22) மீண்டும் திறக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக பெய்துவரும் பலத்த மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் பாடசாலைகள் உட்பட பல பிரதேசங்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன. மேலும், நிலைமைக்கு அமைய தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் மாகாண கல்வி செயலாளர்கள் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கே உள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading