காலியிலும் துறைமுக நகரம்: ரோஹித அபேகுணவர்தன

கொழும்பு, ஜனவரி 27: கொழும்பு துறைமுக நகரத்திற்கு நிகரான சுற்றுலா வலயம் ஒன்று காலி துறைமுகத்தை சுற்றி அமைக்கப்படும் என்று, துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கொழும்பில் செய்தியாளர்களிடம் அவர் அளித்த பேட்டி: காலி துறை முகத்தை சுற்றிய பகுதியில், 40 ஹெக்டேரில் மணல் நிரப்பி இந்த சுற்றுலா வலயத்தை அமைக்க அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. அரசாங்கத்தின் தேசிய கொள்கையின் ஒரு அங்கமாகவே இது மேற்கோள்ளப்படவுள்ளது. […]

Continue Reading

குறைபாடுள்ள காஸ் சிலிண்டர்களை திரும்பிப் பெற அனுமதி

கொழும்பு, ஜனவரி 27: குறைபாடுள்ள பயன்படுத்திய காஸ் சிலிண்டர்களை மீளப் பெற அனுமதிக்குமாறு எரிவாயு நிறுவனங்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை உத்தரவிட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திஸாநாயக்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக சாந்த திஸாநாயக்க கூறுகையில் “குறைபாடுள்ள பயன்படுத்தப்பட்ட எரிவாயு சிலிண்டர்களை ஏற்க மறுக்கும் காஸ் டீலர்கள், விநியோகஸ்தர்கள் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்கலாம். மக்கள் இது தொடர்பில், 1977 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு […]

Continue Reading

பிரதமரின் வங்கிக் கணக்கில் பணம் திருடுபோகவில்லை: பிரதமரின் ஊடகச் செயலர்

கொழும்பு, ஜனவரி 27: பிரதமர் மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து பெருமளவு பணம் திருடப்பட்டதாக வெளிவரும் செய்திகள் தவறானவை என்று பிரதமரின் ஊடகச் செயலர் ரொஹான் வெலிவிட்ட நியூஸ் வயர் ஆங்கில இணையத் தளத்துக்கு தெரிவித்துள்ளார். பிரதமரின் செயலராகப் பணியாற்றிய ஒருவர், பிரதமரின் ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி, பிரதமரின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் இருந்து மில்லியன் கணக்கான பணத்தை எடுத்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகின. ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது அவரின் சம்பளப்பணம் இந்தக் கணக்கில் வைப்பிலிடப்பட்டதாகவும், […]

Continue Reading

இரண்டு எரிபொருள் தாங்கிகளை விடுவிக்க அஜித் நிவார்ட் கப்ரால் நடவடிக்கை

கொழும்பு, ஜனவரி 27: டொலர் நெருக்கடி காரணமாக இலங்கைக்கு அண்மித்த கடற்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள இரண்டு எரிபொருள் தாங்கிகளை விடுவிக்க இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பாக அரசு மூத்த அதிகாரி கூறுகையில் “இலங்கைக்கு எரிபொருளை தாங்கிவந்த இரண்டு தாங்கிகள் நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக இலங்கைக்கு அண்மித்த கடற்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. நாட்டில் மின் நெருக்கடி நிலவும் நிலையில், இந்த எரிபொருள் தாங்கிகளை விடுவிக்க […]

Continue Reading

சபுஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்துக்கு எரிபொருள் வழங்கப்படும்: இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

கொழும்பு, ஜனவரி 27: சபுஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்தை இயக்கத் தேவையான எரிபொருள் வழங்கப்படும் என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க கூறுகையில் “சபுகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த மின் நிலையம் விரைவில் தொழில்படத் தொடங்கும். எனவே எதிர்வரும் வாரங்களில் நாட்டில் மின்வெட்டு ஏற்படாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சூழலில், தேவையான எரிபொருளை வழங்கினால் தடையில்லா […]

Continue Reading

இரண்டு வாரங்களுக்கு மின்தடை இல்லை.

கொழும்பு, ஜனவரி 27: இலங்கை மின்சார சபைக்கு (CEB) அடுத்த இரண்டு வாரங்கள் மின்சாரத்தை உற்பத்தி செய்யத் தேவையான எரிபொருளை வழங்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) இணங்கியுள்ளது. இதனால், வரும் இரண்டு வாரங்களுக்கு நாட்டில் மின்தடை ஏற்படாது என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டில் நிலவும் மின்சார நெருக்கடி தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் கூட்டம் நடந்தது. இதில், எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, நிதியமைச்சர் பசில் ராஜபக்ச உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் […]

Continue Reading

சீமெந்து விநியோகஸ்தர்களிடம் சோதனை நடத்த முடிவு

கொழும்பு, ஜனவரி 27: சீமெந்து பதுக்கலைத் தடுக்கும் வகையில் சீமெந்து விநியோகஸ்தர்களிடம் சோதனை நடத்த கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை, கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு ராஜாங்க அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த அமைச்சின் ராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்தவுக்கும், சீமெந்து தொழிற்துறையினர், மற்றும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்போது, சீமெந்து விநியோகஸ்தர்களின் பட்டியலை தயாரித்து சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. இது […]

Continue Reading

சிறைச்சாலைகள் அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படை அறிமுகம்

கொழும்பு, ஜனவரி 27: இலங்கை சிறைச்சாலைகளில் நிலவும் ஊழல் மற்றும் முறைகேடுகளை முறியடிக்கும் வகையில் ‘ஸ்ரீலங்கா சிறைச்சாலைகள் அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படை’ (SPEAT Force) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள திருத்தங்கள் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தில் நடந்த ‘SPEAT Force’ இன் ஆரம்ப பாஸிங் அவுட் அணிவகுப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கமல் குணரத்ன பேசியது: ஜனாதிபதி கோட்டாபய […]

Continue Reading

உக்ரைன் மீது ராணுவ தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டம் – அமெரிக்கா குற்றச்சாட்டு

கொழும்பு, ஜனவரி 27: உக்ரைன் மீது ராணுவ தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளது என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. அண்டை நாடான உக்ரைன் எல்லையில் ரஷ்யா ஒரு லட்சம் ராணுவ வீரர்கள் நிறுத்தி உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய அச்சுறுத்தலை தடுக்க அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நட்பு நாடுகள் முயற்சித்து வருகின்றன. இந்நிலையில் அடுத்த மாதம் மத்தியில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷ்ய அதிபர் புடின் திட்டமிடுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. அவரது நடவடிக்கையை தடுக்க […]

Continue Reading

2021 ஏ.எல். பரீட்சையின் தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான அறிவிப்பு

கொழும்பு, ஜனவரி 27: நிகழாண்டு பெப்ரவரியில் நடைபெறவுள்ள 2021 G.C.E ஏ.எல். தேர்வில் பங்கேற்கும் தனியார் பரீட்சார்த்திகளில், தேர்வு அனுமதி அட்டையை இன்னும் பெறாதவர்கள், பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்து தேர்வு அனுமதி அட்டையை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

Continue Reading

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் புதிய விதிமுறைகளை அமல்படுத்த தடை

கொழும்பு, ஜனவரி 27: பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) புதிய விதிமுறைகளை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட புதிய விதிமுறைகளை எதிர்த்து, மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் (CPA), அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கைத் தொடர உச்ச நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி வழங்கியுள்ளது. மேலும், வழக்கு முடியும் வரை விதிமுறைகளை செயல்படுத்த தடை விதித்து இடைக்கால […]

Continue Reading

பழுதடையும் நிலையில் 160 ரயில் பெட்டிகள்: சுட்டிக் காட்டும் ரயில்வே தொழிற்சங்கக் கூட்டமைப்பு

கொழும்பு, ஜனவரி 27: கடந்த 2018 இல் சுமார் 80 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் இந்தியாவிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 160 ரயில் பெட்டிகள் பயன்படுத்தாத நிலையில் பழுதடைந்து வருகின்றன என்று ரயில்வே தொழிற்சங்கக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பாக ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் எஸ்.பி.விதானகே கூறுகையில் “இந்தியாவில் நிர்மாணிக்கப்பட்ட ரயில் பெட்டிகள், வகையின் அடிப்படையில் ஒவ்வொன்றும் USD 500,000 முதல் USD 800,000 வரையிலான விலைக்கு கடந்த 2018 இல் கொள்வனவு செய்யப்பட்டன. […]

Continue Reading