சட்டவிரோத மணல் கொள்ளையை தடுக்க அனைத்துத் தரப்பினரும் இணைந்து பணியாற்ற வேண்டும் : கிளிநொச்சி அரச அதிபர்

கிளிநொச்சி, ஜனவரி 25: கிளிநொச்சி மாவட்டத்தில் நிகழும் சட்டவிரோத மணல் கொள்ளையைத் தடுக்க அனைத்துத் தரப்பினரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கிளிநொச்சி அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், இந்த மணல் கொள்ளை தொடர்ந்தால், கிளிநொச்சியில் இருக்கும் பெரிய வளமான இரணை மடுக் குளம் பாதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். கிளிநொச்சியில் நிகழும் சட்ட விரோத மணல் கொள்ளையைக் கட்டுப்படுத்துவது தொடர்பான கூட்டம் கிளிநொச்சி அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடந்தது. […]

Continue Reading

சஜித்தும், சம்பிக்கவும் இணைந்து செயல்பட வேண்டும்: தமுகூ தலைவர் மனோ கணேசன்

கொழும்பு, ஜனவரி 25: இந்த ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்றால் சஜித் பிரேமதாசவும், சம்பிக்க ரணவக்கவும் தமக்கிடையிலான முரண்பாடுகளை மறந்து இணைந்து செயல்பட வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் (தமுகூ) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஊழல் எதிர்ப்பு குழு அங்கத்தவர்களை விசாரிக்கும் விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்பு சாட்சியம் அளித்து விட்டு, மனோ கணேசன் எம்பி அளித்த பேட்டி: வழமையாக அரசாங்கங்கள் […]

Continue Reading

ஆறு மாதங்களுக்குக் கூடுதலாக நீர் விநியோகக் கட்டணம் செலுத்தாதவர்களின் இணைப்பு துண்டிக்கப்படும்

கொழும்பு, ஜனவரி 25: ஆறு மாதங்களுக்கு கூடுதலாக நீர் விநியோகக் கட்டணத்தை செலுத்தாதவர்களின் நீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த சபையின் உதவிப் பொது முகாமையாளர் ஏகநாயக்க வீரசிங்க கூறியது: கடந்த ஆண்டு 7 ஆயிரத்து 200 மில்லியன் ரூபாயை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு செலுத்த பாவனையாளர்கள் தவறியுள்ளனர். இந்நிலையில், ஆறு மாதங்கள் அல்லது அதற்கு கூடுதலாக நீர் விநியோகக் […]

Continue Reading

கொரோனாவால் 15 பேர் உயிரிழப்பு

கொழும்பு, ஜனவரி 25: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 15 பேர் உயிரிந்துள்ளனர். அதேநேரம் கடந்த 24 மணி நேரத்தில் 877 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம், நாட்டில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 6,02, 763 ஆக அதிகரித்துள்ளது.இவர்களில் 5,76,324 பேர் கொரோனா பாதிப்பில் இருந்துஏற்கனவே குணமாகியுள்ள நிலையில், தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 11,126 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 6 […]

Continue Reading

நாடு மீண்டும் முடக்கப்படாது: சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வல

கொழும்பு, ஜனவரி 25: நாட்டில் மீண்டும் லாக் டவுன் அமல்படுத்தப்படாது என்று இலங்கை சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வல நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் “நாட்டில் மீண்டும் லாக் டவுன் அமல்படுத்தப்பட்டால் நாடு கடும் பொருளாதார நெருக்கடியை சந்திக்கும். இதனால், நாட்டில் மீண்டும் லாக்டவுனை அமல்படுத்தும் எண்ணம் இல்லை. தடுப்பூசி செலுத்தும் பணிகளை துரிதப்படுத்தியுள்ளோம். பூஸ்டர் தடுப்பூசி தொடர்பாக சிலர் வேண்டுமென்றே வதந்தி பரப்பி வருகிறார்கள். பூஸ்டர் தடுப்பூசியால் உடல் நலத்துக்கு எவ்வித […]

Continue Reading

அமெரிக்க போர் விமானம் விபத்து: ஏழு பேர் காயம்

வாஷிங்டன், ஜனவரி 25: பசுபிக் கடலில் அமெரிக்க போர் விமானம் விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். பசிபிக் கடல் பகுதியில் சீன ஆக்கிரமிப்பைத் தடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்க கடற்படை ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், தென் சீனக் கடல் பகுதியில் யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன் என்ற விமானம் தாங்கி போர் கப்பல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. இதன்போது, கப்பலின் மேல்தளத்தில் உள்ள ஓடுபாதையில் எஃப்-35 சி ரக போர் விமானம் ஒன்று தரையிறங்க முற்பட்டது. இதன்போது, விமானியின் கட்டுப்பாட்டை மீறிய […]

Continue Reading

திருப்பதிக்கு செல்ல கரோனா தடுப்பூசி அட்டை அவசியம்

திருமலை, ஜனவரி 25: திருப்பதி திருமலையில் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி திருமலையில் கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் கடுமையாக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக திருப்பதி தேவஸ்தானம் செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஏழுமலையானை தரிசனம் செய்ய திருமலைக்கு வரும் பக்தர்களில் பலர் கொரோனா இல்லை என்ற, நெகட்டிவ் சான்றிதழ், தடுப்பூசி அட்டை இல்லாமல் திருமலைக்கு வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களை, தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புத்துறை ஊழியர்கள் திருப்பி […]

Continue Reading

முள்ளியவளை தண்ணீர் ஊற்று சந்தை மீது தாக்குதல்: மூவர் கைது

முல்லைத்தீவு, ஜனவரி 25: முள்ளியவளை தண்ணீர் ஊற்று சந்தை மீது தாக்குதல் நடத்திய மூன்று பேரை காவல்துறை கைது செய்துள்ளது. இது தொடர்பாக காவல்துறை வட்டாரங்கள் கூறியது: முள்ளியவளை தண்ணீர் ஊற்று பொதுச் சந்தையை குத்தகைக்கு எடுத்தது தொடர்பாக எழுந்த பிரச்சினையில் நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று சந்தை மீது திங்கள்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் இரண்டு கடைகளின் கதவுகள் சேதமடைந்துள்ளன. தாக்குதலில் காயமடைந்த சந்தையின் காவலாளி முல்லைத்தீவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் […]

Continue Reading

அபிருத்தித் திட்டங்களின்போது வட்டாரங்களின் முக்கியத்துவத்தை கருத்தில் கொள்ள வேண்டும்: வலி தெற்கு பிரதேச சபையில் தீர்மானம்

யாழ்ப்பாணம், ஜனவரி 25: பிரதேசத்தில் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளும்போது வட்டாரங்களின் முக்கியத்துவம், தேவைப்பாடுகளின் அவசியம் ஆகியன கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் தர்சன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதன்போது கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திகளில் பல தாமதங்கள், குழப்பங்கள் காணப்பட்டதாகவும் இவற்றை நிகழாண்டிலும் தொடர அனுமதிக்க கூடாது என்று சபையின் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இந்நிலையில், பிரதேசத்தில் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளும்போது வட்டாரங்களின் முக்கியத்துவம், தேவைப்பாடுகளின் […]

Continue Reading

300 கிலோ போதைப் பொருளுடன் இழுவைப் படகு பறிமுதல்

கொழும்பு, ஜனவரி 25: தெற்கு கடலில் 300 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் இழுவைப் படகு ஒன்றை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக இலங்கை கடற்படை உயர் அதிகாரி கூறியது: தெற்கு கடலில் போதைப் பொருளுடன் இழுவைப் படகு ஒன்று வருவதாக போலீஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவுக்கு (பி.என்.பி ) இரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, புலனாய்வுப் பிரிவினரும், இலங்கை கடற்படையும் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதன்போது, 300 கிலோகிராம் போதைப் பொருளுடன் […]

Continue Reading

இலங்கை குடிமக்கள் அனைவருக்கும் டிஜிற்றல் பணப்பை மென்பொருள்– நாமல்

கம்பஹா, ஜனவரி 24: இலங்கையில் டிஜிற்றல் தேசிய அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்பு நாட்டு மக்கள் அனைவருக்கும் டிஜிற்றல் பணப்பை மென்பொருளை அறிமுகம் செய்யப்படும் என்று இளைஞர் விவகார அமைச்சரும் டிஜிற்றல் உள்கட்டமைப்புக்கான இராஜாங்க அமைச்சருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கையடக்க தொலைபேசி மூலம் பணத்தை செலுத்துவதற்காக இலங்கை மத்திய வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்ட LANKA QR குறியீட்டை கம்பஹாவில் மக்கள் மயப்படுத்தும் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் ” கடவுச்சீட்டு, பிறப்பு, […]

Continue Reading

பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

கொழும்பு, ஜனவரி 24: இலங்கையில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கோரியுள்ளதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை சுகாதார அமைச்சகத்தின் கொரோனா தலைமை ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் அன்வர் ஹம்தானி இது குறித்துக் கூறுகையில் ‘கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை பல ஐரோப்பிய நாடுகளும், பல வளர்ந்த நாடுகளும் கட்டாயமாகியுள்ளன. பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதவர்கள் […]

Continue Reading