10 நாட்களில் 19 ஆமைகள் உயிரிழப்பு : காரணம் இதுதான் என்கின்றனர் சூழலியல் ஆய்வாளர்கள்

சூழலியல் ஆய்வாளர்களின் கருத்தின் படி கடல் கொந்தழிப்பு, மீன்பிடி வலைகளில் சிக்கிக் கொள்ளல் மற்றும் மீனவப்படகுகளில் மோதுதல் உள்ளிட்ட காரணிகளே இதுவரையில் கடல் ஆமைகளின் இறப்பில் தாக்கம் செலுத்தும் பிரதான காரணிகளாகவுள்ளன. எவ்வாறிருப்பினும் தற்போது இலங்கை கடற்பரப்பில் அவ்வாறு கடல் கொந்தழிப்போ, கடலுக்குள் நில அதிர்வோ ஏற்பட்டு அசாதாரணமானதொரு நிலைமையை தோற்றுவிக்கவில்லை. கடற்பரப்பில் காணப்பட்ட ஒரேயொரு ஆபத்து யதெனில் விபத்துக்குள்ளான கப்பலிலிருந்த இரசாயன பதார்த்தங்களாகும். ஆனால் 10 நாட்கள் என்ற குறுகிய காலத்திற்குள் 19 கடல் ஆமைகளும் […]

Continue Reading

எரிபொருள் விலையினை அதிகரிப்பதற்கு தீர்மானம்!

நாட்டில் எரிபொருள் விலைகளை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவுக்கான அமைச்சரவை உபகுழு இதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பை அமுலாக்கும் தினம் குறித்து நிதி அமைச்சு மற்றும் எரிசக்தி அமைச்சு ஆகியன இணைந்து தீர்மானிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Continue Reading

ஒட்சிசன் தேவையுடைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – மரணங்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கும் என பரபரப்பு தகவல்

நாட்டில் ஒட்சிசன் தேவையுடைய கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த வியாழனன்று மாத்திரம் இவ்வாறு ஒட்சிசன் தேவையுடைய 800 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதேநிலைமை தொடருமாயின் அடுத்த இரு வாரங்களில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. எனவே எதிர்காலத்தில் பதிவாகக் கூடிய கொவிட் மரணங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்கு வினைத்திறனான தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் நடைபெற்ற […]

Continue Reading

கப்பல் தீவிபத்து : அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

இலங்கை கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்திற்குள்ளானமையால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவும் நோக்கில் அமெரிக்க மக்கள் 1,00,000 அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்கவுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. பேர்ள் கப்பல் தீவிபத்தினால் ஏற்படக்கூடிய சுற்றுசூழல் தாக்கங்களை தணிக்க உதவுவதற்கு அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க துணைநிலைத் தூதுவர் மார்ட்டின் கெலி , இந்த உடனடி உதவியானது வாழ்வாதாரங்களுக்கு உதவும் என்பதுடன், தற்போதைய இந்த நிலைமையை தொடர்ந்து ஏற்படக்கூடிய சூழ்நிலையை சமாளிக்க […]

Continue Reading

கொரோனா ஊசியை ஏற்றிக்கொள்ளமாட்டேன் : தொற்றிலிருந்து குணமடைந்து இன்று வீடு திரும்பிய சஜித் அதிரடி அறிவிப்பு

கொவிட் -19 தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளாத காரணத்தினாலேயே எனக்கும் எனது பாரியாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. ஆனால் நாட்டு மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி ஏற்றிமுடிக்கும் வரையில் நான் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள மாட்டேன் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் அவரது பாரியாரும் குணமடைந்து நேற்று வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியிருந்தனர். இந்நிலையில் இன்று காலை கங்காராம விகாரைக்கு வழிபடச்சென்றிருந்த எதிர்க்கட்சி தலைவர் அங்கு ஊடகங்களுக்கு […]

Continue Reading

தீ விபத்துக்குள்ளான கப்பல் : 20 வருடங்களுக்கு இலங்கைக்கு பேராபத்து

எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ல் என்ற கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால் இலங்கையின் கடல் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு இன்னும் 20 வருடங்களுக்கு நீடிக்குமென சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார் குறித்த சேதங்களை டொலர்களிலும் மதிப்பிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மஹிந்த அமரவீர இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நாங்கள் ஏற்கனவே நாடு முழுவதும் கரை ஒதுங்கியுள்ள பிளாஸ்டிக் துகள்களின், பெரிய குவியல்களை […]

Continue Reading

சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய சிறுவனின் செயல் : பொலிஸார் அதிரடி நடவடிக்கை

சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுவந்த, சிறுவன் ஒருவன் மதுபானம் அருந்துவது போன்ற காணாளி தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அதற்கமைய, சிறுவனுக்கு மது அருந்தக் கொடுத்து, அக்காட்சியை ஒளிப்பதிவு செய்ததாக கருதப்படும் நபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர் பேலியகொடை, நுகே வீதியை சேர்ந்த 25 வயதான ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள அதேவேளை, மேலதிக […]

Continue Reading

ரஷ்யாவின் 65 ஆயிரம் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன

ரஷ்யாவின் மொஸ்கோவை தளமாகக் கொண்ட கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கிய ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியின் மற்றொரு தொகுதி இன்று (11.06.2021) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளது. இதன்மூலம், ரஷ்யாவால் தயாரிக்கப்பட்ட 65,000 தடுப்பூசிகளில் 15,000 இரண்டாம் கட்ட தடுப்பூசிகளும், 50,000 முதலாம் கட்ட தடுப்பூசிகளும் இலங்கைக்கு கிடைத்துள்ளது என ஒளடத உற்பத்திகள், விநியோக ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்தார். நாட்டின் தடுப்பூசி உந்துதலை அதிகரிப்பதற்காக இலங்கை அரச மருந்தக கூட்டுத்தாபனம் (எஸ்.பி.சி) வழங்கிய கொள்வனவு […]

Continue Reading

இலங்கையில் அதிகரித்துள்ள கொரோனா தொற்றாளர்களின் மரணம் : அதிர்ச்சி காரணம் வெளியானது

கொவிட் -19 வைரஸ் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை உண்மையே, ஆனால் இது ஒரே நாளில் பதிவான மரணங்களாக கணக்கிடக்கூடாது. இறுதியாக பதிவான 67 மரணங்களும் கடந்த இருவாரகாலத்தில் ஏற்பட்டது என்கிறார் சுகாதார பணிப்பாளர் அசேல குணவர்தன. வைத்தியசாலைகளில் போதிய இடவசதி இல்லாதமை மற்றும் கொவிட் நோயாளர்களை உடனடியாக சிகிச்சையளிக்க முடியாதமையே கொவிட் மரணங்கள் அதிகரிக்க காரணம் என்பதை சுகாதார பணியகம் கண்டறிந்துள்ளதாகவும் அவர் கூறினார். கடந்த சில தினங்களாக நாட்டில் கொவிட் மரணங்கள் அதிகரித்துள்ள நிலையில் சுகாதார […]

Continue Reading