ஆட்சிக்காலம் நிறைவடைய முன் யாழில் காணிகள் விடுவிக்கப்படும் – பாதுகாப்பு செயலாளர்

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்காலம் நிறைவடைய முன் பாதுகாப்பு படைகளின் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் யாழில் நேற்று (28) தெரிவித்தார். ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கேள்வி – யாழ் மாவட்டத்தில் 2,700 ஏக்கர் காணிகளே விடுவிக்கப்பட வேண்டி உள்ளது. விடுவிக்கபடுமா? காணி விடுவிப்பு தொடர்பில் நாம் சிந்தித்து வருகின்றோம். எதிர்காலத்தில் நாங்கள் சரியான மதிப்பீட்டை செய்வோம் . அது […]

Continue Reading

மின்சாரம் தாக்கியதில் இருவர் பலி!

முந்தலம 412 ஏக்கர் பகுதியில் மின்சாரம் தாக்கி தம்பதி உயிரிழந்துள்ளதாக முந்தலம பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று 28ஆம் திகதி இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் ஸ்டேன்லி திலகரத்ன (வயது: 55) மற்றும் சந்திரிகா மல்காந்தி (வயது: 52) என்ற தம்பதியினரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த இருவரும் தங்களுடைய குடியிருப்புக்கு அருகாமையில் வர்த்தக இடத்தை பராமரித்து வந்ததாகவும் வர்த்தக நிலையத்துக்கு மின்சாரம் வழங்கியதாக கூறப்படும் கம்பியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய சென்ற கணவன் மின்சாரம் தாக்கி […]

Continue Reading

வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு நீடிப்பு!

மல்வத்து ஓயாவிற்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை,நாட்டின் வானிலையில் காணப்படும் தாக்கமானது இன்று (29) முதல் படிப்படியாகக் குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 240 கிலோமீற்றர் தொலைவிலும் காங்கேசன்துறையில் இருந்து சுமார் 290 கிலோ மீற்றர் தொலைவிலும் நிலை கொண்டிருந்த சக்திமிக்க தாழமுக்கமானது தமிழ் நாட்டுக் கரையை நோக்கி நகர்ந்து செல்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Continue Reading

அமைச்சுகளுக்கு சொந்தமான 254 சொகுசு வாகனங்களை ஏலத்தில் விட தீர்மானம்!

தற்போது அமைச்சுக்களுக்குச் சொந்தமான சுமார் 254 அதி சொகுசு வாகனங்களை ஏலம் விடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவை, அரசாங்க மதிப்பீட்டாளரின் சான்றிதழைப் பெற்று இந்த கார்கள் ஏலம் விடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இந்த சொகுசு கார்களை பராமரிக்க அரசு பாரிய செலவை சுமக்க வேண்டியுள்ளதுடன், இவற்றில் பெரும்பாலானவை முன்னாள் அமைச்சர்களே பயன்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வரியில்லா வாகன அனுமதிப்பத்திரம் வழங்குவதையும் அரசாங்கம் […]

Continue Reading

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக புதிய வேட்பு மனு கோரப்பட வேண்டும் – சாகர

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காகக் கோரப்பட்ட வேட்பு மனுவை இரத்து செய்து மீண்டும் புதிய வேட்பு மனு கோரப்பட வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்ற அங்கத்தவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து ஊடகங்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தக் கூடிய தினம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளது. தேர்தல்கள் […]

Continue Reading

வடக்கு- கிழக்கில் வைத்தியசாலை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம்!

வடக்கு- கிழக்கில் பணியாற்றிய சுகாதார சேவைகள் திணைக்கள பிரதி பணிப்பாளர் மற்றும் வைத்தியசாலை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, வைத்தியர் ஆர்.முரளிஸ்வரன் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வைத்தியர் ஜி.சுகுணன் மட்டக்களப்பு கல்முனை வடக்கு வைத்தியசாலையின் பணிப்பாளராகவும், வைத்தியர் டி.வினோதன் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும், வைத்தியர் கே.ஜி.சீ.வை.எஸ்.வீ.வீரக்கோன் ஊவா மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும், திருமதி பி.எஸ்.என்.விமலரட்ண கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும், […]

Continue Reading

பயங்கரவாத இயக்கத்தையும் அதன் தலைவரையும் போற்றுவது முன்நோக்கிப் பயணிக்க உதவாது – அலி சப்ரி

இரக்கமற்ற வகையில் பயங்கரவாதத்தைக் கட்டமைத்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையோ அல்லது அதன் தலைவரையோ போற்றுவது நாம் முன்நோக்கிப் பயணிப்பதற்கு ஏதுவான வழிமுறையாக அமையாது எனச் சுட்டிக்காட்டியிருக்கும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இனவாதத்தைப் பரப்புவதற்கு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தெற்கின் கடும்போக்கு சக்திகளுக்கு அந்த வாய்ப்பை வழங்குவதைத் தவிர்த்துக்கொள்ளவேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார். மாவீரர் தினத்தை முன்னிட்டு புதன்கிழமை (27) கடும் மழைக்கு மத்தியிலும் வட, கிழக்கு மக்கள் மாவீரர் துயிலும் இல்லங்களுக்குச்சென்று பெரும் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களை […]

Continue Reading

9 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 09 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, கண்டி, கேகாலை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை, கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை, கொழும்பு, கம்பஹா, கேகாலை, குருநாகல், நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிக ஆபத்துள்ள பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேறவும், […]

Continue Reading

பாதுகாப்பு செயலரின் பங்குபற்றலுடன் யாழில் விசேட உயர்மட்ட கலந்துரையாடல்!

யாழில் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகளை கண்டறியும் நோக்கிலான உயர் மட்ட கலந்துரையாடல் (28) யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இந்த உயர்மட்டக் கலந்துரையாடலுக்கு பாதுகாப்பு செயலாளராக எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொந்தா, மற்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம் கலந்து கொண்டு சீரற்ற காலநிலை தொடர்பான தகவல்களை பிரதேச செயலாளர்கள், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் துறைசார்ந்த நிபுணர்களிடம் கேட்டறிந்தனர் பாதிக்கப்பட்ட மக்களின் தற்போதைய நிலை, தொடர்ந்தும் வெள்ளப்பெருக்கு உருவாகுவதற்கான […]

Continue Reading

தமிழ் நாட்டு கரையை நோக்கி நகர்ந்து செல்லும் சக்திமிக்க தாழமுக்கம்!

திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 240 கிலோமீற்றர் தொலைவிலும் காங்கேசன்துறையில் இருந்து சுமார் 290 கிலோ மீற்றர் தொலைவிலும் நிலை கொண்டிருந்த சக்திமிக்க தாழமுக்கமானது தமிழ் நாட்டுக் கரையை நோக்கி நகர்ந்து செல்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், நாட்டின் வானிலையில் காணப்படும் தாக்கமானது இன்று (29) முதல் படிப்படியாக குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக் கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேநேரம், […]

Continue Reading

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வடமராட்சிக்கு விஜயம்

சீரற்ற காலநிலை காரணமாக வடமராட்சி பகுதியில் அதிக பாதிப்புக்கு உள்ளான புனிதநகர்ப் பகுதிக்குப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நேற்று (28) திடீர் விஜயம் மேற்கொண்டு கள நிலவரம் தொடர்பில் ஆராய்ந்தார். பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருந்த கற்கோவளம் மெதடிஷ்த மிஷன் அ.த.க.பாடசாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொண்டா வெள்ள நிலைமை தொடர்பில் ஆராய்ந்ததுடன் அப்பகுதி மக்களுடனும் கலந்துரையாடினார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இதன் போது இப்பகுதியில் ஏற்பட்ட இடர்பாடு […]

Continue Reading

நெடுந்தீவு நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக உலங்கு வானூர்தி மூலம்!!

நெடுந்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 03 நோயாளர்கள் மேலதிக சிகிச்சையளிக்கும் வகையில் விமானப்படையின் உலங்கு வானூர்தி மூலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நெடுந்தீவு வைத்தியசாலையின் ஏற்பாட்டில் நெடுந்தீவில் இருந்து 03 நோயாளரும் அவர்களது 3 உதவியாளர்களும் உலங்கு வானூர்தி மூலம் பலாலி விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டு தரைவழியாக கொண்டுசென்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Continue Reading