தொற்று நோய்ப்பிரிவின் பணிப்பாளருக்கு இடமாற்றம்

தொற்று நோய்ப்பிரிவின் பணிப்பாளரான வைத்தியர் சுதத் சமரவீர, டெங்கு நோய்த்தடுப்புப் பிரிவுக்குப் பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, அவருக்குப் பதிலாக வைத்தியர் சமித் கினிகே தற்காலிகமாக தொற்று நோய்ப் பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Continue Reading

13ஐ பாதுகாக்க இந்தியா – அமெரிக்காவிடம் சிவாஜிலிங்கம் கோரிக்கை

இந்தியா- அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இலங்கை விவகாரத்தில் இனியும் தலையிடவில்லை என்றால் 13 ஆவது திருத்தச் சட்டமும் இல்லாது போய்விடும் என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழில் இன்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் எம்.கே.சிவாஜிலிங்கம் மேலும் கூறியுள்ளதாவது, “இந்தியாவிடம் ஒன்றையே கேட்க விரும்புகின்றோம். தற்போது இருக்கின்ற 13 ஆவது திருத்தச் சட்டத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காவிடின் உங்களால் இனி […]

Continue Reading

கொரோனா மரணங்கள் தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை!

ஜூன் 21ஆம் திகதி அதிகாலை 04 மணி முதல் பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்தாதிருக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். இதேவேளை, ஜூன் 23ஆம் திகதி இரவு 10 மணி முதல் 25ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை, முன்னர் போன்று மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும். அத்துடன், மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள சட்டங்கள், தொடர்ந்தும் அதேபோன்று நடைமுறைப்படுத்தப்படும். அரச மற்றும் தனியார்த்துறை […]

Continue Reading

“தேரர்கள் தம் சொகுசு வாகனங்களை மக்களுக்காக அர்ப்பணித்து முன்மாதிரியாக நடக்க வேண்டும்”

எல்லே குணவன்ச தேரர், “பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சம்பளத்தை பொது காரியங்களுக்காக அர்ப்பணிக்க வேண்டும்” என கூறுகிறார். இது நல்ல யோசனை. ஆனால் அதற்கு முன், இந்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த எல்லா அரசாங்கங்களும், தேரர்களை தம்வசம் வைத்துக்கொள்ள, வழங்கிய பென்ஸ், ரேஞ்ரோவர், டொயோடா போன்ற சொகுசு வாகனங்களையும், ஆலய சொத்துக்களையும், வரப்பிரசாதங்களையும், பொதுக்காரியங்களுக்காக வழங்கி, பிரபல வண. தேரர்கள்தான் முன்மாதிரியாக இந்த பணியினை ஆரம்பித்து வைக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் […]

Continue Reading

விவசாயம் செய்ய விரும்புவோருக்கு மணல் அனுமதி

கிளிநொச்சி, அக்கராயன் பிரதேசத்தில் அமைந்துள்ள கரும்புத் தோட்டக் காணியில் உடனடியாக விவசாய நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மணல் அகழ்வதற்கான அனுமதிகளை வழங்குவதன் மூலம் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், மாவட்ட செயலகத்தில் இன்று (18) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே, குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்றது. கரும்பு தோட்டமாக அடையாளப்படுத்தப்படுகின்ற சுமார் 196 ஏக்கர் விஸ்தீரனமான நிலப்பரப்பு, நீண்ட காலமாக […]

Continue Reading

“யாழில் 71,712 குடும்பங்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு”

அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட 5000ரூபா கொடுப்பனவு முதற்கட்டமாக 71,712 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.இதன் பிரகாரம் முதற்கட்டமாக சமுர்த்திப் பயனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முதியோர் கொடுப்பனவு பெறுவோர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளன.ஏனையோருக்கும் விரைவில் வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார். இதன்படி நேற்றைய தினம் மாத்திரம் 83 கொரோனா தொற்றாளர்கள் யாழில் கண்டறியப்பட்டுள்தாகவும் தெரிவித்தார். மொத்தம்1754 குடும்பங்களைச் சேர்ந்த 5613 நபர்கள் சுயதனிமைப்படுத்தலில் உள்ளதாகவும்இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Continue Reading

அபாய கட்டத்தை தாண்டவில்லை! யாழ். மக்களே! மிக அவதானம்

யாழ்.மாவட்டத்தில் இன்னும் கொரோனா வைரஸ் தொற்று அச்சம் முழுமையாக நீங்கவில்லை, எனவே மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என இன்று நடந்த ஊடகவியளாளர் சந்திப்பில் அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்பொழுது வந்த பிசிஆர் பரிசோதனை முடிவுகளின்படி கொரோனா தொற்று 83ஆக அதிகரித்திருக்கின்றது. அதைத் தொடர்ந்து மொத்த எண்ணிக்கை 4668 ஆக உயர்வடைந்து இருக்கின்றது மேலும் மொத்தமாக நேற்றுடன் 63 உயிரிழப்புக்கள் ஏற்பட்டு உள்ளது. சுமார் ஆயிரத்து 754 குடும்பங்களைச் […]

Continue Reading

“பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்பளத்தை அர்ப்பணிக்க வேண்டும்”

தற்போதைய கொரோனா நிலமையில் மக்கள் மட்டும் கஷ்டப்பட்டு செயல்பட வேண்டும் என அறிவிப்பது எவ்விதத்திலும் பொருத்தமானதல்ல என வணக்கத்திற்குரிய எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார். எனவே, பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் சம்பளத்தை மக்களுக்காக அர்ப்பணிப்பு செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு மாதாந்த சம்பளமாக பாரிய அளவான தொகை கிடைக்கின்ற நிலையில் அவர்கள் செய்யும் அர்ப்பணிப்பு என்ன என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Continue Reading

பயணக் கட்டுப்பாடு தொடர்பான புதிய அறிவிப்பு

தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 21 ஆம் திகதி காலை 4 மணிக்கு நீக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 23 ஆம் திகதி இரவு 10 மணி வரையில் இவ்வாறு பயணக் கட்டுப்பாடு நீக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மீண்டும் 23 ஆம் திகதி இரவு 10 மணி முதல் 25 ஆம் திகதி அதிகாலை 4 வரையில் பயணக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Continue Reading

மன்னாரில் மீட்கப்பட்டன சக்தி வாய்ந்த வெடிபொருட்கள்!

மன்னார் மாந்தை மேற்கு பிரதேசத்தில் சக்தி வாய்ந்த வெடி பொருட்கள் பாதுகாப்புத்தரப்பினரால் மீட்கப்பட்டுள்ளன. மன்னார் யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள பாப்பாமோட்டை பிரதேச காட்டுப்பகுதியில் இருந்து இவை இன்று மீட்கப்பட்டுள்ளன. அடம்பன் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இநந்pலையில் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக குறித்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளினால் குறித்த வெடி பொருட்கள் கடந்த காலங்களில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என பாதுகாப்புத்தரப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மீட்கப்பட்ட […]

Continue Reading