கொரோனா நோய் அறிகுறி இருக்கும் மாணவர்கள் தொடர்பாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட கோரிக்கை

கொழும்பு, பெப் 8: கொரோனா நோய் அறிகுறி இருக்கும் மாணவர்களை வைத்தியசாலைகளுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள, விசேட பரீட்சை நிலையங்களுக்கு அனுப்புமாறு பெற்றோரிடம் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ. தர்மசேன கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் “கொரோனா நோய் அறிகுறிகள் காணப்படும் பிள்ளைகளை பரீட்சை நிலையங்களுக்கு அனுப்புவதை பெற்றோர் தவிர்க்க வேண்டும். நோய் அறிகுறிகள் உடைய பரீட்சார்த்திகளை, வைத்தியசாலைகளை அண்மித்து தயார்படுத்தப்பட்டுள்ள விசேட பரீட்சை நிலையங்களுக்கு அனுப்ப வேண்டும். பரீட்சார்த்தி ஒருவருக்கு கொவிட்-19 தொற்று […]

Continue Reading

கச்ச தீவு தேவாலய விழா: தமிழக பக்தர்கள் தடையின்றி பங்கு பெறக் கோரி தமிழக முதல்வர் கடிதம்

சென்னை, பெப் 4: கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்தில், புனித அந்தோணியார் வருடாந்திரப் பெருவிழாவில் தமிழக பக்தர்கள் பங்கேற்பதை உறுதிப்படுத்தக்கோரி, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்தில், புனித அந்தோணியார் வருடாந்திரப் பெருவிழா ஒவ்வோராண்டும் பிப்ரவரி/மார்ச் மாதங்களில் கொண்டாடப்படுகிறது என்றும், இவ்விழாவில் பங்கேற்க விரும்பும் தமிழக மீனவ பக்தர்களின் பாதுகாப்பான பயணத்திற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்து வருவதாகவும் […]

Continue Reading

இந்தோனேசிய பாதுகாப்பு ஆலோசகர், ராணுவத் தளபதி சந்திப்பு

கொழும்பு, பெப் 4: இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியாவில் உள்ள இந்தோனேசிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கொமடோர் டிடிக் குர்னிஅவன், இலங்கை ராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவை இராணுவ தலைமையகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். 1952 ஆம் ஆண்டுமுதல் இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் நட்பு ரீதியான இராஜதந்திர உறவுகள், சமய, கலாசார ஒற்றுமைகள் ஆகியன தொடர்பாக இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டன. இதன்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், இராணுவத்தினரால் படையினர்களால் மேற்கொள்ளப்படும் பணிகள் தொடர்பாக கொமடோர் […]

Continue Reading

மின் கட்டணம் அதிகரிக்கப்படாது: மின்சக்தி அமைச்சர் உறுதி

கொழும்பு, பெப் 3: தற்போதையை சூழலில் மின் கட்டணம் அதிகரிக்கப்படாது என்று மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கொழும்பில், வியாழக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியது: மின் சக்தி அமைச்சர் என்ற வகையில், தற்போதைய சூழலில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படாது என உறுதியாகக் கூறுகிறேன். மீளுருவாக்க மின்சக்தியின் மூலம் 1000 மெகாவாட் மின்சாரத்தை பெறக் கூடியதாக இருந்தால், மின் கட்டணம் இன்னும் குறைவடையும் என்று நம்புகிறேன் என்று அவர் தெரிவித்தார்.

Continue Reading

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வாக்காளர் பதிவேட்டில் பதிவு செய்ய வாய்ப்பு

கொழும்பு, பெப் 2: 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வாக்காளர் பதிவேட்டில் பெயர்களை பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்படும் என்று இலங்கை தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, 18 வயது நிறைவடைந்தவர்களை வாக்காளர் பதிவேட்டில் பதியும் முதல் கட்டப் பணி பெப்ரவரி 1 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டது. பெப்ரவரி முதலாம் திகதி முதல் மே மாதம் 31 ஆம் திகதி வரையான நான்கு மாத காலப்பகுதியில் 18 வயதைப் பூர்த்தி செய்வோர் தனித்தனியாக பதிவு செய்ய முடியும் […]

Continue Reading

கிழக்கு மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள் மாற்றம் ஆளுநர் அனுராதா ஜகம்பத் அதிரடி

திருகோணமலை, பெப் 2: கிழக்கு மாகாணத்தில், அமைச்சுகளின் செயலாளர்களை அம் மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத் மாற்றியுள்ளார். இதற்கான கடிதங்கள் கிழக்கு மாகாண ஆளுநரால் செவ்வாய்க்கிழமை இரவு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளராக கலாமதி பத்மராஜா, மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராக எம்.கோபாலரத்னம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக ஜே.ஜே.முரளிதரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ.திஸாநாயக்காவும், கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக ஜ.கே.ஜீ.முத்துபண்டாவும், கிழக்கு […]

Continue Reading

பொலிஸார் தொடர்பாக மக்கள் புகார் அளிக்கலாம்: யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த லியனகே

யாழ்ப்பாணம், பெப் 2: யாழ்ப்பாணத்தில் மக்கள் பணிகளை சரியாகச் செய்யாத பொலிஸ் நிலையங்கள், பொலிஸார் தொடர்பாக மக்கள் தமக்கு முறைப்பாடு வழங்கலாம் என்று யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த லியனகே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் ” பொலிஸ் நிலையத்தில் மக்கள் புகார் அளிக்கும்போது, தான் கூறிய புகார்கள் அனைத்தும் முறைப்பாட்டுப் புத்தகத்தில் உள்ளதா என்பதை சரியாக வாசித்தபின்பே கையெழுத்திட வேண்டும். அவ்வாறு முறைப்பாடு புத்தகத்தில் இல்லை என்றால் அதில் கையெழுத்திட வேண்டிய […]

Continue Reading

தமிழர் தேசத்தை வழிநடத்தும் அறிவுஜீவிகளாக மாணவர்கள் மாற வேண்டும்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

யாழ்ப்பாணம், பெப் 2: மாணவர்கள் கல்விச் செயற்பாடுகளில் முழுமையான கவனம் செலுத்தி, எதிர்காலத்தில், தமிழர் தேசத்தை வழிநடத்தும் அறிவுஜீவிகளாக மாற வேண்டும் என்று கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ் செங்குந்தா இந்துக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடந்த மைதான பெயர் பலகை திரை நீக்கம், சமுதாய பொங்கல் விழாவில் கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். அங்கு அவர் உரையாற்றியது: இத்தகைய பாரம்பரிய பண்பாட்டு திருநாளை செங்குந்த இந்துக்கல்லூரி […]

Continue Reading

நாடாளுமன்ற ஊழியர்கள் 27 பேருக்கு கொரோனா

கொழும்பு, பெப் 2: கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ள நாடாளுமன்ற ஊழியர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது என்று நாடாளுமன்ற ஊடகப் பிரிவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் ” நாடாளுமன்ற ஊழியர்கள் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் நிதிப் பணிப்பாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் உணவு வழங்கல் பிரிவைச் சேர்ந்த பத்து பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளாகி ஐ.டி.ஹெச். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சபாநாயகர் மஹிந்த […]

Continue Reading

இந்திய மீனவர்கள் அத்து மீறி மீன்பிடித்ததால் பதட்டம்: அமைச்சர் தலையீட்டால் கட்டுக்குள் வந்தது

யாழ்ப்பாணம், பெப் 1: பருத்தித்துறை முனை கடற்கரை பகுதியில் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து, சட்ட விரோத தொழில் முறையைப் பயன்படுத்தி மீன் பிடித்தனர். அப்போது, இந்திய மீனவர்களின் படகுகளை சிறைபிடிக்க அப்பிரதேச மீனவர்கள் முயற்சித்தனர். இதனால், அப்பகுதியில் பதட்ட நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு சென்ற கடல்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பவ இடத்திற்கு கடற்படையினரை அனுப்பி வைத்ததுடன்,  கடற்றொழிலாளர்களையும் ஆறுதல்படுத்தி கரைக்கு திருப்பி அழைத்தார். இந்நிலையில், கடற்படையினரால் இரண்டு இந்தியப் மீன்பிடிப் படகுகள் […]

Continue Reading

தம்புதேகமவில் சிறுமி மரணம்

கொழும்பு, ஜனவரி 30: தம்புத்தேகமவில் ஆறு வயது சிறுமி கதவு சரிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக காவல்துறை மூத்த அதிகாரி கூறுகையில் ” தாயுடன் தனக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரின் வீட்டிற்கு சிறுமி சென்றிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாய் கதவை திறக்க முற்பட்ட போது திடீரென குழந்தை மீது வாயில் இடிந்து விழுந்துள்ளது.குழந்தை மீட்கப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டார் என்று மருத்துவர்கள் […]

Continue Reading

கடலுக்கு சென்ற இரண்டு மீனவர்களைக் காணவில்லை

வடமராட்சி, ஜனவரி 29: வடமராட்சி கிழக்கு வத்திராயனிலிருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை. இவர்களின் படகுகள் இந்திய மீனவர்களின் படகுகளால் மோதி மூழ்கடிக்கப்பட்டிருக்கலாம் என்று அப்பகுதி மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அப்பகுதி மீனவர்கள் கூறுகையில் ” யோசேப் பிரேம்குமார், அருண்குமார் தணிகைமாறன் ஆகிய இரண்டு மீனவர்கள், வத்திராயன் மீனவர்களுடன் வெள்ளிக்கிழமை வழக்கம் போல் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்களோடு கடலுக்குச் சென்ற மற்றவர்கள் கரை திரும்பியுள்ளனர். ஆனால், இவர்கள் […]

Continue Reading