கைதான விஜயகலா மகேஸ்வரனுக்கு நீதிமன்றம் பிணையில் விடுவிக்க உத்தரவு!!

கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் அவரை கோட்டை பிரதான நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்திய போது 5 லட்சம் பெறுமதியான சரீர பிணையில் விடுவித்து உத்தரவிடப்பட்டது. அத்துடன் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற செயலக விசாரணை  பிரிவில் வாக்குமூலம் வழங்க சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் இன்று காலை கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணம் வீரசிங்க மண்டபத்தில் இடம்பெற்ற அரச நிகழ்வொன்றின் போது வடக்கின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமாயின் தமிழீழ விடுதலைப்புலிகளின் […]

Continue Reading

புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் ஒக்டோபர் 5 ஆம் திகதி வெளியீடு!!

ஒக்டோபர் மாதம் ஐந்தாம் திகதி அன்று ஐந்தாம் தரம் புலமைப் பரீட்சை முடிவுகள், வெளியிடப்படுமென, இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை, நடைபெற்றது. இப்பரீட்சையில், மூன்று இலட்சத்து ஐம்பத்தையாயிரத்து முன்னூற்றி இருபத்தாறு மாணவர்கள் தோற்றியிருந்தனர். நாடு தழுவிய ரீதியில், மூவாயிரத்து ஐம்பது பரீட்சை நிலையங்களில் குறித்த பரீட்சை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.  

Continue Reading

இன்று கிளிநொச்சியில் திலீபனின் தியாகத்தை நினைவு கூர்ந்து உண்ணாவிரதம்!!

கிளிநொச்சியில் தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை முன்னிட்டு உண்ணாவிரத போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்னறில் அமைக்கப்பட்ட விசேட பந்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இன்று காலை முதல் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இப்போராட்டம் திலீபன் உயிர்நீத்த நேரமான காலை 10.50 வரை முன்னெடுக்கப்பட்டு, அதன் பின்னர் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இதில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான த.குருகுலராசா, பசுபதிப்பிள்ளை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் […]

Continue Reading

யாழில் கஞ்சாவுடன் இருவர் கைது!!

யாழ்.காங்கேசன்துறை கடற்பரப்பில் கஞ்சா போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த இருவரை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை காங்கேசன்துறை கடற்பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த காங்கேசன்துறை கடற்படையினர் கடலில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த படகை மறித்து சோதனையிட்ட போது படகிலிருந்து 28 கிலோ கஞ்சாவை மீட்டுள்ளனர். அதனையடுத்து, படகிலிருந்த வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த இருவரையும் கைதுசெய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்த கடற்படையினர், கைப்பற்றப்பட்ட கஞ்சா போதைப்பொருளையும் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். தற்போது இவர்களிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, விசாரணையின் […]

Continue Reading

தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் :இன்று முதல் ஆரம்பம்!!

இன்று  முதல் தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் டெங்கு அற்ற நாடு என்ற தொனிப் பொருளின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்ட இந்த டெங்கு ஒழிப்பு வாரம் ஒக்டோபர் மாதம் இரண்டாம் திகதி வரை அமிழில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலப்பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட வலயங்களில் டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள் இடம்பெறவுள்ளன. இது தவிர 175 சுகாதார சேவைப் பிரிவுகளில் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Continue Reading

யாழில் வீட்டிற்குள் புகுந்து அட்டகாசம்: நால்வர் காயம்

யாழ்ப்பாணம் சாவகச்சேரிப் பிரிவுக்குட்பட்ட கைதடிப் பிரசேத்திலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த அடையாளந் தெரியாத சிலர் மேற் கொண்ட தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் குறித்த வீட்டிற்கும் சிறிய அளவிலான சேதம் ஏற்ப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டார். இவர்களின் தனிப்பட்ட பிரச்சனையே அவ் சம்பவத்திற்கு காரணம் என சாவகச்சேரி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Continue Reading

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கமா??

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க வாழ்க்கைச் செலவுக் குழு தீர்மானித்துள்ளது.இதன்படி 12.5 கிலோ எடைகொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 195 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் உலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்தமை மற்றும் இலங்கை நாணயப் பெறுமதியின் வீழ்ச்சி ஆகியவற்றால் எரிவாயுவிலையை 323 ரூபாவால் அதிகரிக்குமாறு எரிவாயு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன. இதன் அடிப்படையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதேநேரம், வாழ்க்கைச் செலவுக் குழு பால்மாவின் விலையை குறைப்பதற்கும் தீர்மானித்துள்ளது. இதன்படி 1 […]

Continue Reading

புலமைப்பரிசில் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில் தொகையை அதிகரிப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.இது தொடர்பில் விரைவில் அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இதன்மூலம் புலமைப்பரிசில் பெறுவோரின் எண்ணிக்கையையும் இரு மடங்காக அதிகரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், தற்போது வெளியாகவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய புலமைப்பரிசில் பெறுவோரின் எண்ணிக்கையையும் அதிகரிக்கவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

Continue Reading

வவுனியாவில் பல கோரிக்கைகளை முன்வைத்து இ.போ. சபையினர் பணிப்புறக்கணிப்பு!

வவுனியாவில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையினர் இன்று (17.09) முதல் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   மேலும் வவுனியா புதிய பேரூந்து நிலையம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு கீழ் இயங்குவதினால் எமக்கு பாதுகாப்பில்லை , தூர சேவை பேரூந்துகள் புதிய பேரூந்து நிலையத்திற்குள் செல்வதற்கு அனுமதி கோரியும் ,நேற்றைய தினம் தனியார் பேரூந்து சங்க ஊழியர் , உரிமையாளரினால் இ.போ.ச நடத்துனர் மீது மேற்கொண்ட தாக்குதலுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் […]

Continue Reading

மீண்டும் பணின் விலை அதிகரிக்குமா?

பாண் மற்றும் பனிஸ் உள்ளிட்ட சிற்றூண்டிகளின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிற்றூண்டி உரிமையாளர்கள் சங்கம் இதற்கான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. அத்துடன் வெதுப்பக பொருட்களின் தயாரிப்புக்காக பயன்படுத்தப்படும் ஃபாம் ஒயில் ஆகியவற்றிற்கு அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள புதிய வரி காரணமாகவே, அவற்றின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Continue Reading

யாழிலும் மற்றும் கொழும்பிலும் வெப்பநிலை அதிகரிப்பு!

யாழ்ப்பாணம், மற்றும் கொழும்பு மாவட்டங்களில் வழமையான வெப்பநிலையை விட 5 பாகை செல்சியஸால் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, குருநாகல், இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் வெப்பநிலை 5 பாகை செல்சியஸினால் அதிகரித்துள்ளதுடன் கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, புத்தளம் மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களின் வெப்பநிலை 2.4 பாகை செல்சியஸினால் அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, வறட்சி காரணமாக 17 மாவட்டங்களை சேர்ந்த 8 லட்சத்துக்கும் அதிகமான […]

Continue Reading

வரட்சியால் வாடிய பள்ளி மாணவர்கள்!

வவுனியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதனால் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்களுக்கு கிணற்றிலிருந்து வழங்கப்பட்டு வந்த குடிநீர் தற்போது ஏற்பட்டுள்ள வரட்சியுடனான காலநிலை காரணமாக வற்றிப்போயுள்ளது. இதையடுத்து மாணவர்களுக்கு குடிநீர் உட்பட ஏனைய தேவைகளுக்கு பயன்படுத்தவதற்கு தண்ணீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பாடசாலையின் அதிபர் த.அமிர்தலிங்கத்தை இவ் விடயம் தொர்பாக வினாவிய போது, தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் ஆரம்பப்பிரிவில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு […]

Continue Reading